Friday, November 26, 2021

பொன்னாங்கண்ணி – போலி எது ? உண்மை எது ??

 பொன்னாங்கண்ணி என்று நீங்கள் பயன்படுத்தி வருவது உண்மை பொன்னாங்கண்ணி இல்லை . கண்ணுக்கு நல்லது ,தோலுக்கு நல்லது என்று ஆண்டு முழுவதும் நாம் இப்போது கிடைக்கிற பொன்னாங்கண்ணி உண்டு வந்தாலும் அதனால் பயனில்லை என்பது ஒரு நம்ப முடியாத உண்மை .

Alternanthera sessilis என்கிற தாவர பெயர் உடைய கீரையே உண்மையான பொன்னாங்கண்ணி . இதன் படம் இங்கே கொடுக்கபட்டுள்ளது .
கொடுப்பை ,சீதை என்று வேறு பெயரில் அழைக்கப்படும் இந்த கீரைகளின் அரசனை போல் உள்ள பொன்னாங்கண்ணி நமக்கு கிடைப்பது உண்மை இல்லை என்பது தான் அதிர்ச்சி தகவல்
சென்னை கிருஸ்துவ கல்லூரியின் தாவரவியல் , தாவர உயிரித் தொழில்நுட்பத்துறை தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் .நரசிம்மன் தனது ஆராய்ச்சியில் இப்போது கிடைக்கிற சீமை பொன்னாங் கண்ணி என்கிற Alternanthera philoxeroides , Alligator weed - என்கிற வகை வெளிநாட்டில் இருந்து இங்கே வந்து நமது நீர் நிலைகளின் கரைகளில் தானாக வளரக்கூடிய இந்த அழகு செடி.
இது நமது கீரை சந்தையை கிட்டத்தட்ட முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது என்கிறார் .கழிவு நீர் ஓடை அருகில் ,தொழிற்சாலை கழிவு அருகில் எளிதாக வளர கூடிய இந்த சீமை பொன்னாங்கண்ணியில் காரீயம் ,பாதரசம் ,அம்மோனியா போன்ற மோசமான விஷ சத்துக்களும் புதைந்து இருக்கும் . இவை நமக்கு நல்லதை செய்யாமல் மிக பெரிய கெடுதலை உருவாக்க வாய்ப்புள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர் .
சிவப்பு பொன்னாங்கண்ணி என்கிற Alternanthera bettzickiana தாவரியல் பெயர் உடைய இந்த செடி வெளிநாட்டில் இருந்து வந்தது , அலங்கார செடி தான் இது . இது உண்ண தகுந்ததல்ல என்கிறது அறிவியல் .
நம்மிடையே இப்போது அதிகம் கிடைப்பது இந்த சிவப்பு வகை தான் .. உண்மையை சொல்லப்போனால் சித்த மருத்துவ பண்டைய நூல்களில் பொன்னாங்கண்ணியில் வகைகள் இல்லை . பச்சையான ஒரு வகையை மட்டும் விளக்குகிறது சித்த மருத்துவ குணபாட நூல் .
கல்ப மருந்தாக பொன்னாங்கண்ணியை உண்டு வந்தால் பகலில் கூட நட்சத்திரங்களைப் பார்க்க இயலும் என்று சித்தர்களின் கூற்று .
இன்று தங்க பஸ்பம் என்பது கோடீஸ்வரர்களுக்குக் கூட எட்டாத ஒரு மருந்தாகி விட்டது. ஆனாலும், அதை ஏழைகளும் பலன் பெறும் விதத்தில் இறைவன் பொன்னாங்கண்ணியில் பொதிந்து வைத்திருப்பது வியக்கத்தக்க ஒன்று. இது இயற்கை தங்க பஸ்பம்
பொன்னாங் கண்ணி சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சத்து நிறைந்த உணவாகி அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஒரு துணை மருந்து ஆகிறது.
நன்றி.. ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் அ.முகமது சலீம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...