Monday, November 29, 2021

🌹சங்கம வழிபாட்டு மகிமை.


🌹பொதுவாக வழிபாடு என்றாலே இறைவனை வழிபாடு செய்வது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. சங்கம வழிபாடு என்றும் ஒன்று இருக்கிறது.
🌹ஒருவன் இறைவனை மூன்று விதமான முறைகளில் வழிபாடு செய்வதன் மூலம் அவரை அடையலாம் அவரை குருவழிபாடு லிங்க வழிபாடு சங்கம வழிபாடு ஆகும் .
🌹குரு வழிபாடு என்பது ஒருவன் தான் வாழ்க்கை கல்வியை கற்றுக் கொள்ள தகுதியான சிறந்த குரு ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் கூறும் நெறி முறைகளை கடைபிடித்து வாழ்க்கையை நெறிப்படுத்தி இறைவனை அடையும் பக்குவம் பெற வேண்டும்.
🌹லிங்க வழிபாடு என்பது இறைவனை லிங்கமாக பிரதிஷ்டை செய்து மனதார தூய பக்தியுடன் வழிபட்டு அதன் மூலம் இறைவனை அடையலாம்.
🌹சங்கம வழிபாடு என்பது சிவனடியார்களை நாடிச் சென்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும் அவர்களோடு கலந்து பேசி இறைவனை அடைவதற்கான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்வதும் அவர்களுக்கு அன்னதானம் செய்து வருவதும் சேர்ந்ததாகும்.
🌹அதாவது சிவனுக்கும் சிவனடியாருக்கு தொண்டு செய்து இறைவனை அடைய முடியும் என்பதை குறிப்பதே சங்கம வழிபாடாகும்.
🌹நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்
🌹அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் 🙏
🌹உலகின் முதல்வன் எம் பெருமான் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்.
🙏ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தையே ஆத்ம நமஸ்காரம்.
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...