Saturday, November 27, 2021

ஆர்.எஸ்.பி-ஸ் ரெட் லைட் ஊடகங்கள் இதைதான் ஹைலைட் செய்யும்!!

 இந்த கொட்டுகின்ற மழை நேரத்தில்

நீட் தேர்வு விலக்கு-க்கு அப்படியென்ன அவசரம் அல்லது அவசியம்?! என்றெல்லாம் நீங்கள் கேட்டால், நீங்கள் ஒரு அப்பாவி! பாமரன்!! அதற்கு மேலாக ஐயோ பாவம் கேஸ்!!!
ஏனெனில் இந்த கொட்டித்தீர்கின்ற மழைதான் பிரச்சினையே. சென்னை புறநகர் மட்டுமில்லாமல் சிட்டி லிமிட் பூராவும் வெள்ளத்தில் மிதக்கின்றது. மாறி மாறி கழகங்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தின் தலைநகர் சரியான திட்டமிடல் இன்றி இந்த லட்சணத்தில் இருக்கிறது!
இதில் முன்னாள் மேயர் இன்றைய முதலமைச்சராக வேறு இருக்கிறார்.
சரி! இந்த அவலத்திற்கு காரணமாக இதற்கு முன் 10 வருடம் ஆட்சி செய்த அதிமுக-வை மாட்டிவிடலாம் என்றால் அவர்களுக்கு ஒத்தாசை செய்த அதிகாரிகள் இன்று நமக்கும் வேண்டப்பட்டவர்களாக இருக்கிறார்கள்!! இன்னும் மேலாக, அவர்கள் கட்சியின் முன்னாள், இந்நாள்களுடன் நமக்கு உள் கூட்டனி வேறு.
அதனால் எதிர் கட்சிகளான அவர்களே மக்களை திசை திருப்ப அவர்களுக்குள் தலைமை பதவிக்கு அணி பிரிந்து அடித்துக்கொள்வதாக பேர் பண்ணிக்கொண்டு, இந்த வெள்ள பிரச்சினையை பெரிதாக்காமல் விட்டுவிட்டார்கள்!
ஆனால் திடீரென்று முளைத்த இந்த அண்ணாமலை படகில் போய் நம் மானத்தை வாங்குகிறாரே. இவரை இப்படியே விட்டால் என்னாவது? மக்கள் திராவிடத்தை மறந்து அவர் பக்கம் போய் விடமாட்டார்களா?
பாவம் இந்த முன் களப்ஸ்-கள் வேறு அவர்களுக்கு போடும் பிஸ்கட்டுகளுக்கு மேலே ஒருபடி போய், இன்று சென்னை ரோடு முழுவதும் நெல் உலர்த்தும் அளவிற்கு காய்ந்து பளிச்சென்று இருக்கிறது என்று முட்டு கொடுத்தாலும், இந்த அண்ணாமலை ஃபோட்டோ ஸூட் எல்லாம் செய்து உண்மை நிலவரத்தை காட்டிவிடுகிறாறே. கூடுதலாக
சமூக வளைதள வில்லன் வேறு!
இதையெல்லாம் மக்களிடம் போகாமல் மறைக்கனுமே. ஹிந்தி திணிப்பு -
இனி தோது படாது! அதெல்லாம் அப்பா காலத்துடனேயே முடிந்துவிட்டது.
உன் மகள் நடத்தும் பள்ளியிலேயே ஹிந்தி வகுப்பு!! என்று ஆரம்பித்து விடுவார்கள். இந்த திருச்சி சிவா வேறு சும்மா இல்லாமல் ஹிந்தி பாட்டெல்லாம் பாடி அது சிரிப்பாய் சிரிக்கிறது.
இப்போதைக்கு இந்த நீட் தேர்வுதான் ஆயுதம். எடுத்துக்கிட்டு கிளம்பு. கவர்னரை பார்த்து அப்படியே ஒரு தாக்கலை போட்டுறலாம்.
ஆர்.எஸ்.பி-ஸ் ரெட் லைட் ஊடகங்கள் இதைதான் ஹைலைட் செய்யும்!!
ஐயோ மழை கொட்டிக் கொண்டிருக்கும்போது நீட் தேர்வு பிரச்சினைக்கு என்ன அவசரம்?! என்று மக்கள் கேட்டால்?...
கொட்டுற மழையாவது?
ரோட்டுல வெள்ளமாவது?? இப்போதைக்கு தமிழகத்தின் தலையாயப் பிரச்சினையே இந்த நீட் தேர்வு மட்டும்தான். வருங்கால மருத்துவர்கள் பாதிக்கப்படக்கூடாது பாருங்கள்.....
May be an image of outdoors and text that says 'REAKING நீட் விலக்கு மசோதா ஆளுநரிடம் வலியுறுத்தல் ஆளுநர் ஆர்.என் ரவியை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து முதலமைச்சர் ம.க.ஸ்டாலின் வலியுறுத்தல் நீட் விலக்கு மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் உபிக்காள் Polimer NE2 LIVE|11.38AM'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...