Sunday, November 28, 2021

காவல் தெய்வம் கால பைரவர்.

 பொதுவாக வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அப்படி செய்தால் நமது வீட்டை துஷ்ட சக்திகள் அண்டாது என்பது ஐதீகம். அது போலவே சாம்பிராணியுடன் வெண் கடுகு சேர்த்து தூபம் போட்டு அந்த புகையை நம்முடைய வீட்டு பூஜையறை உள்ளிட்ட அனைத்து அறைகளிலும் பரவச் செய்தால் தீய சக்திகள் ஓடிவடும் என்பது உண்மை.


ஈசன் அவதாரம்

கலியுகத்துக்கு கால பைரவர் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. கால பைரவர் எம்பெருமான் ஈசனின் அவதாரமாகவே கருதி இந்துக்கள் வழிபட்டுவருகின்றனர். அனைத்து சிவாலயங்களிலும் பரிவார தெய்வங்களுக்கும் தனித்தனியாக சந்நிதிகள் இருப்பது போல், கால பைரவருக்கும் தனி சந்நிதி அமைந்துள்ளது.


காவல் தெய்வம் கால பைரவர்

கால பைரவர் சந்நிதி சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் நவகிரக சந்நிதிக்கு அருகில் அமைந்திருக்கும் என்பது கோவிலுக்கு செல்லும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சிவன் கோவில்களில் இரவு பூஜை முடிந்த பின்பு அனைத்து சந்நிதிகளையும் பூட்டி சாவிகளை கால பைரவரின் காலடியில் வைத்து பூட்டி விடுவார்கள். மறுநாள் காலையில் மீண்டும் கோவிலை திறக்கும்போது காலபைரவரை பூஜித்து பின்பு சாவியை எடுத்து அனைத்து சந்நிதிகளையும் திறந்து பூஜையை ஆரம்பிப்பார்கள். கால பைரவருக்கு தினசரி பூஜை நடைபெற்றாலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்திலும், ராகு காலத்திலும் பூஜை செய்வது சிறப்பானது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...