
சாஸ்திரம் சொல்கிறது .நம் வீட்டில் பூஜையறையில் தெய்வங்களை வைத்து இருந்தால் மட்டும்
போதாது .
தினமும் 5 நிமிடமாவது கடவுளை நினைக்க வேண்டும் . ஏதோ ஒரு வடிவில் நம்மை கடவுள் தினமும் பார்த்து கொண்டு இருக்கிறார் . நமக்கும் மேலே ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என முழுமையாக நம்ப வேண்டும்.
எந்த பொருள் வாங்கினாலும் முதலில் கடவுளின் பாதத்தில் வைத்து இது நீ கொடுத்தது உனக்கு நன்றி என மனதார சொல்ல வேண்டும் .
கடவுளிடம் நாம் மனதார பேச வேண்டும். ஆனால் அது வேண்டும் இது வேண்டும் என்று கோரிக்கை வைக்காமல் நீயே வேண்டும் என்று வேண்டினால் நம் கூடவே அவன் இருப்பதை உணர்வீர்கள் !
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் கடவுள் அருளால் மட்டும்தான் நடக்கிறது . இன்பமோ துன்பமோ எது நடந்தாலும் அதை கடவுளிடம் விட்டு விடுங்கள் . இதை தான் சரணாகதி என்பர்.
அதனால் தான் நாம் தெய்வத்திடம் விழுந்து வணங்கி சரணாகதி அடைகிறோம்.
தினமும் நாம் சமைப்பதை கடவுளுக்கு நைவேத்யம் செய்து விட்டு சாப்பிடும் போது தான் நமக்கு
அது பிரசாதம் ஆகிறது .
சாதம் ----நாம் கடவுளுக்கு கொடுப்பது .அது கடவுளால் ஆசிர்வதிக்க பட்டு நமக்கே திரும்பி
வரும் போது அது பிரசாதம் ஆகிறது.
உன்மையில் கடவுள் நம் உணவை சாப்பிடுவது இல்லை .கடவுளுக்கு நாம் உணவு கொடுப்பது இல்லை. அவர் முக்காலமும் அறிந்தவர் .அவரிடம் இல்லாதது ஒன்றும் இல்லை .நமக்கு தினமும்
உணவு கிடைப்பது கடவுள் அருளால் தான் .அதற்காகத்தான் நாம் அவருக்கு நன்றி சொல்லி வழிபடுகிறோம்
கடவுளுக்கு 18 வகை பட்சணத்துடன் தான் நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று இல்லை .
பழங்கள் , உலர் திராட்சை , கற்கண்டு ,பேரீச்சம்பழம் ,பால் வைத்து நைவேத்தியம் பண்ணலாம் .
இந்த ப்ரம்மாண்டமே அவன் அரண்மனை. மேரு பர்வதமே சிம்ஹாஸனம். கங்கா ஜலமே அவனக்கு அபிஷேகம் திசைகளே வஸ்திரங்கள் காற்றே விசிறி சந்திர சூர்யனே தீபங்கள். நட்சத்திரங்கள் அவனது ஆபரணங்கள் பல புஷ்பங்களே நைவேத்யம் என்று மானஸீகமாக பூஜை செய்யலாம் என்று ஜகந்நாத தாஸர் கூறுகிறார்
இந்த மாதிரி எளிய முறையில் ஸ்வாமியை வணங்குவது கஷ்டம் ஒன்றும் இல்லையே! .
நீங்களும் ஸ்வாமிக்கு சுலப பூஜை செய்து எல்லா நலங்களும் பெறுங்கள் .
நமசிவாய வாழ்க
சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் அரன் நாமம் சூழ்க எங்கும் துயர் தீர்க

அகிலம் காக்கும் அண்ணாமலையார் பொற் பாதத்தில் ஈசனிடம் யாசகியின் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் ஈசரே 





உலகின் முதல்வர் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்.
ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தையே ஆத்ம நமஸ்காரம்.
No comments:
Post a Comment