Monday, November 29, 2021

ஸ்டாலின் அதிரடி முடிவு கூட்டணி தலைவர்கள் 'ஷாக்'.

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 95 சதவீத இடங்களை தி.மு.க., மட்டுமே கைப்பற்ற வேண்டும் என்ற அதிரடி முடிவை, முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ளதால், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 21 மாநகராட்சிகள், 150 நகராட்சிகளை கைப்பற்ற தி.மு.க., ஆர்வம் காட்டி வருகிறது.

மறைமுக தேர்தல் நடத்தும் பட்சத்தில் மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க தி.மு.க., விரும்பவில்லை.
துணை மேயர், நகராட்சி துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளிலும், 5 சதவீதம் இடங்களை மட்டுமே கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்க தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது.

சென்னை மேயர் பதவியை பெண்ணிற்கு; அதிலும் தலித் சமுதாய பெண்ணுக்கு வழங்கி, சமூக நீதி நிலைநாட்டுகிற பெருமையை தி.மு.க., தட்டிச் செல்ல விரும்புகிறது.

எதிர்க்கட்சியாக இருந்த போது, பல்வேறு பிரச்னைகளின் அடிப்படையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்களை, தி.மு.க., அடிக்கடி அழைத்து, சென்னை அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தியது.
ஸ்டாலின் அதிரடி முடிவு கூட்டணி தலைவர்கள் 'ஷாக்'
ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசவில்லை என்ற அதிருப்தி காங்., - ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் - முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்களுக்கு உள்ளது.

தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது, 60 சதவீத உள்ளாட்சி இடங்களை கைப்பற்றியது; அப்போதும் கூட்டணி கட்சிகளை கண்டு கொள்ளவில்லை. ஆளுங்கட்சியாக தி.மு.க., வந்த பின் நடைபெற்ற ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், 93 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளது.

அத்துடன், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலும், தி.மு.க., மீது, காங்., - ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன. எனவே, கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகள், தாங்கள் விரும்புகிற இடங்களை தி.மு.க., தரவில்லை என்றால், தனித்து போட்டியிட தயாராகி உள்ளன.

அப்படி கூட்டணி கட்சிகள் தனித்து போட்டி என்ற முடிவை எடுத்தாலும், தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 95 சதவீதம் வெற்றியை பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்த அதிரடி முடிவால், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...