Saturday, November 27, 2021

வரி போடகூடாது எல்லாம் இலவசமாக கிடைக்கனும் .

 74 வருஷமா! மாடு முதல் வீடு வரைக்கும் கரன்சி குடுத்தே வாங்கி பழகிட்டோம்.

இப்போ போய் டெபிட் கார்ட், ஆன்லைன், ஈ-டிரான்ஸ்பர், மற்றும் அடிப்படை சட்டத்துடன் கிரிப்டோகரன்சின்னு சொன்னா எப்படின்னு ஒரே கூச்சல் சத்தம்.
பிரான்ஸ், கனடா, பெல்ஜியம் இப்படி பல நாடுகளில் 90% க்கும் மேலான வர்த்தகம் வங்கி மூலமாகதான். கனடாவில் நாணயமே கிடையாது. 3000 யூரோவுக்கு மேல் பணமாக வர்த்தகம் செய்தால் கடுமையான அபராதம்.
வங்கி வழி வர்த்தகமே சிறந்தது. காரணம் யாரும் பணத்தை பதுக்க முடியாது. 10 லட்சம் மதிப்புள்ள நிலத்தை 6லட்சம்ன்னு பொய்யாக பதிவு பண்ண முடியாது. பில் போடாது பொருள் வாங்கினால் இந்த முறையில் மாட்டி கொள்வார்கள். அவ்வாறு அனைவரும் இந்த முறைக்கு மாறும் போது இன்று வரி கட்டும் 2% மக்கள் 60 முதல் 70%மாக அதிகரிக்கும். அவ்வாறு அதிகரிக்கும் போது இப்போது ரூ50000 வரிகட்டுபவர்கள் ரூ5000 , ரூ6000 ன்னு வரிகட்டுனால் போதும். இப்படி வரி குறையும் போது யாருமே கருப்பு பணத்தை பதுக்க முன்வரமாட்டார்கள். ஏன்னா குறைந்த தொகையை வரியாக செலுத்தினாலே அதை வெளிப்படையாக செலவு செய்ய முடியும் என்பதால்.
இவ்வாறு இருக்கும் நிலையில் லஞ்சமாக மட்டும் தான் கருப்பு பணம் மீண்டும் உருவாக வாய்ப்புண்டு. அந்த பணத்தால் உள்ளூரில் எதுவும் வாங்கவோ விற்கவோ முடியாது.
அதனால் கரன்சி எக்சேன்ச்களை மார்க்கெட்டையும் அழுத்தினால் அது வெளிநாட்டுக்கு செல்வதும் தடுக்கமுடியும். அதிக பட்சம் 10,20,50 ரூபாய் நோட்டே போதும். அதுவும் குறைந்த அளவில். அவ்வாறு செய்து, அனைத்து மானியங்களும் வங்கி மூலம் கொண்டு வந்து , அதையும் ஆன் லைனில் மாற்றி விட்டால் லஞ்சத்தையும் ஒழிப்பது எளிது.
இது நம்ம நாட்டுக்கு ஒத்து வருமான்னு கேட்கலாம்.இந்த நாடென்னா முட்டாள்கள் தேசமா? இங்கே கணிதமும் வானவியலும் கொடிகட்டி பறந்த காலத்தில், மனித நாகரீகமே இல்லாதா நாடுகளால் முடியுமெனில், இங்கு அதைவிட சிறப்பாகவே கொண்டுவர முடியும். இப்போ ஆரம்பிச்சா தான் இன்னும் 10 வருஷத்துல இலக்கை எட்ட முடியும். இதைவிட குறுகிய காலத்திலேயே முடியும் . ஆனால் இந்த தேசத்திற்கு வெளியில் இருக்கும் எதிரியை விட உள்ளுக்குள் துரோகிகளே அதிகம். அது 'நபருக்கு ரூ200 ரூபாய் வீதம், பில் கொடுக்காது சிகிட்சை செய்யும் டாக்டர் முதல்', 'தலைக்கு ரூ150 ன்னு பில் கொடுக்காது முடிவெட்டும் சவர தொழிலாளி முதல்', இதை ஊக்குவிக்கும் அதிகாரி முதல், அதில் குளிர்காயும் அரசியல்வாதிவரை!
இதனால் படிக்காத மக்கள் பாதிக்கப்படுவாங்களேன்னு கேட்கலாம். அமுல்படுத்துனால் தானே பிரச்சனைகளை கண்டறிந்து தீர்வுகாண முடியும்."நீ விறகு கொடு நான் மீன் தருகிறேன்னு பண்டமாற்று முறையிலிருந்து, 'வெள்ளி , தங்கம்ன்னு உலோக முறை, பின்னர் நாணயம், பின்னர் பேப்பர் கரன்சி இத்தனை மாற்றங்கள் முடிந்ததே! எப்படி? இது முடியாதெனில் திரும்பவும் ஓட்டை காலணாவிற்கே போக வேண்டியது தான்.
பள்ளிக்கே போகதவனால், கரன்சியை எப்படி கூட்டி கழிக்க முடியுது? படிச்சவனை விட வேகமாக படிக்காதவனால், எப்படி வட்டி கணக்கு போட முடியுது?. அதுபோல, வரும் தலைமுறை, இந்த சிஸ்டத்துக்கு தேவையான அளவு, கல்வி அறிவு பெற, கண்டிப்பாக முயலுவான். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் மக்களை முட்டாளாக, படிக்காதவனாகவே வெச்சிட்டிருக்க போறீங்க?
மரியாதைக்குரிய பிரதமர் திரு. மோடி அவர்கள் எடுத்து வைத்திருப்பது அருமை!
இன்னும் பல மாற்றங்களை சந்தித்தே தீரும் இந்த இந்தியதேசம்!
இது இயற்கையின் நியதி. -

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...