Sunday, November 28, 2021

_தினம் ஒரு திருத்தலம் : எட்டு கரங்கள் கொண்ட அம்மன்... பஞ்சமுக கணபதி..._

*அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில்...!!*
தினம் ஒரு திருத்தலம்... இன்று பார்க்கவிருக்கும் திருத்தலம் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில்...
இந்த கோயில் எங்கு உள்ளது?
🌹 அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
🌹 இக்கோயில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2கி.மீ தொலைவிலும், கோவை ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்திலும் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
🌹 தனது எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், தீ, சக்கரம், மணி, இடது காதில் தோடு, வலது காதில் குண்டலம் அணிந்து உக்கிரமான பார்வையுடன் காட்சி தருகிறாள்.
🌹 சிவனைப் போல, இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வமான அமைப்பு. சிவமும், சக்தியும் வேறில்லை என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.
🌹 தம்பதி சமேதராக நவகிரகங்கள் அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு. கோவை நகரில் இங்கு மட்டுமே தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.
🌹 வடக்கு வாசலில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள தளத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது.
வேறென்ன சிறப்பு?
🌹 அரச மரத்தின் கீழ் பஞ்சமுக கணபதி பத்து கைகளுடன் காட்சி தருகிறார்.
🌹 அம்மனுக்கு வலப்புறத்தில் தம்பதி சமேதராக நவகிரகங்கள், பின் பகுதியில் ஆதி கோனியம்மன், பஞ்சமுக விநாயகர், வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
🌹 இத்தலத்தில் வேப்பம், வில்வம், நாக லிங்கம், அரசமரம் ஆகிய தேவ மரங்கள் உள்ளன. இங்கு வேறு அம்மன் தலங்களில் இல்லாத சிறப்பாக ஆடியில் 30 நாளும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
🌹 மாசியில் 14 நாள் திருவிழா கொண்டாடப்படுகின்றது.
🌹 அமாவாசை, பௌர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.
🌹 தமிழ் மாதப்பிறப்பு, ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல், தீபாவளி போன்ற நாட்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றது.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றது?
🌹 இத்தலத்தில் வேண்டி கொண்டால் திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிட்டும், நோய்கள் நீங்கும், தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
🌹 சுவாமிக்கு வஸ்திரங்கள் சாற்றி, சிறப்பு அபிஷேகம், அன்னதானம் செய்யலாம்.
🌹 துர்க்கைக்கு பொட்டுத்தாலி செலுத்தி எலுமிச்சை தீபம் ஏற்றலாம்.
🌹 மாவிளக்கு, பொங்கல் நேர்ச்சை போன்ற நேர்த்திக்கடன்களும் செய்கின்றனர்., 🌹🌹🌹🙏🙏🙏🌺🌺🌺
May be an image of temple, outdoors and text that says "அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில்...! Kevin"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...