Thursday, June 8, 2023

மிக சிறந்த பார்வை.

 

19-05-2023 அன்று பாரத ரிசர்வ் வங்கி, புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய்த் தாள்களைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது. அந்த அறிவிப்பு வந்த போது, புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய்த் தாள்களின் மதிப்பு ரூ.3.62 லட்சம் கோடியாகும்.

மேலும், வங்கிகளின் இருப்பில் வைத்துள்ள 2,000 ரூபாய்த் தாள்களை மீண்டும் புழக்கத்தில் விடுவதையும் தடை செய்தது. ஆகவே, இந்த நடவடிக்கை 'ஒரு வழிப் போக்குவரத்து' எனலாம்.

23-05-2023 முதல் 07-06-2023 வரை, கடந்த 16 நாள்களில் மட்டும் டெபாசிட் மூலமாகவும், பரிமாற்றம் வாயிலாகவும் வங்கிகளுக்குத் திரும்ப வந்த 2,000 ரூபாய்த் தாள்களின் மதிப்பு ரூ.1.80 லட்சம் கோடி என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. இது, புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய்த் தாள்களில் பாதி அளவாகும்.

அது ஒரு புறமிருக்க, 2,000 ரூபாய்த் தாள்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள அல்லது டெபாசிட் செய்ய 30-09-2023 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் வீண் பீதி அடைய வேண்டாம்.

சரி, 30-09-2023-க்குப் பிறகு என்ன நடக்கும்?​

1. பாரத ரிசர்வ் வங்கி, இந்தக் காலக் கெடுவை மேற்கொண்டு நீட்டிக்கலாம். அது, 31-12-2023 வரை இருக்க வாய்ப்பு இருக்கிறது.

2. 30-09-2023-க்குப் பின்னர், வங்கிகளில் மாற்றிக் கொள்ளும் வசதி நிறுத்தப்படும். இருப்பினும், வங்கிகளில் செலுத்தி அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ள அனுமதி தரப்படும் என நம்புகிறேன்.

3. 31-12-2023-க்குப் பின்னர், 2,000 ரூபாய்த் தாளை செல்லாது என்று அறிவிக்கும் சாத்தியமும் இருக்கிறது. இது, 2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், கருப்புப் பணம் அதிக அளவில் புழங்குவதைத் தடுக்கும்.

4. செல்லாது என்று ஒரு தடவை அறிவித்து விட்டால், எதிர்காலத்தில் 2,000 ரூபாய்த் தாள்களோ அல்லது அதற்குப் பதில் 1,000 ரூபாய்த் தாள்களோ அச்சடிக்கப்பட வாய்ப்பில்லை. எனவே, யாரும் வீண் கனவு காண வேண்டாம்.

5. செல்லாது என்று அறிவித்தால், 30-09-2023-க்குப் பிறகு, 2,000 ரூபாய்த் தாளைக் கொண்டு பொருள்கள் வாங்குவதோ, சேவைக் கட்டணம் செலுத்துவதோ நடவாது. ஆகையால், பதுக்கி வைத்த 2,000 ரூபாய்த் தாள்களும் மதிப்பிழந்து போகும்.

6. 30-09-2023-க்குப் பிறகு, ரூ.50,000 கோடி மதிப்புள்ள கருப்புப் பணம் இந்தியப் பொருளாதாரத்தை விட்டு வெளியேறும். அந்த மட்டில், அந்தத் தொகை அரசுக்கு லாபமே.

7. அது நடந்தால், நாட்டில் லஞ்சமும், உயர்மட்ட ஊழலும் பெருமளவில் குறைய வாய்ப்பிருக்கிறது.

8. வங்கிகளில் குவியும் ரொக்கப் பணத்தை உடனே வங்கிகள் கடன் மூலமாக வெளியே அனுப்ப இயலாமல் போகும். அதனால், வட்டி விகிதங்கள் குறையும்.

9. பணவீக்கமும் 2% வரை சரிவடைய சாத்தியம் உள்ளது.

10.மக்களிடையே புழக்கத்தில் உள்ள ரொக்கப் பணம் (Total Money Supply - M3) வீழ்ச்சி அடைவதால், அது 'Digital Economy'-ஐ ஊக்குவிக்கும். பணமில்லாப் பொருளாதாரம் (Cashless Economy) என்பதை விட, குறைந்த பணத்தை வைத்துக் கொண்டே பரிவர்த்தனைகள் (Less Cash Economy) நிஜமாகும்.

நாள்: 08-06-2023 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...