Wednesday, June 7, 2023

வேலை கிடைக்கவும் பணக்கஷ்டத்தை விரட்டும் அஷ்டமங்கல வழிபாட்டு ஸ்லோகங்கள்...

 ஒரு வீட்டில் தீராத பணக்கஷ்டமோ, மனக்கஷ்டமோ ஏற்பட்டிருந்தால் மகாலட்சுமி அந்த வீட்டில் இல்லை என்று அர்த்தம். அத்தகைய வீடுகளில் அஷ்டமங்கல வழிபாடு செய்ய வேண்டும்.

இதற்கு 8 வகைப் பொருட்களை ஒரு பாட்டிலில் (மிட்டாய் டின் போன்ற சீசா) போட்டு அதன் அருகில் கமலதீபம் இரண்டை ஏற்றி வைத்து மனமுருகி வழிபட்டால் கஷ்டங்கள் மறைந்து வளம் உண்டாகும்.
*அஷ்டமங்கலப் பொருட்கள் விவரம் வருமாறு:-*
1.குண்டு மஞ்சள்-மூன்று 2.குங்குமம்,
3.மரப்சீப்பு,
4.தர்ப்பணம் என்ற கண்ணாடி,
5.சந்தனம்,
6.தாம்பூலம்,
7.தீபம்,
8.ரவிக்கைத் துணி (பச்சை நிறம்).
இரண்டு பக்கங்களிலும் கமலதீபங்களை ஏற்றி நடுவில் ஒரு தட்டில் சீசாவை வைத்து
*ஓம் லட்சுமி நம ஓம்*
*ஸ்ரீதேவி நம ஓம்*
*கமலாசனி நம ஓம்*
*பத்ம பூஜனி நம ஓம்*
*மகாதேவி நம ஓம்*
*சங்கமாதா நம ஓம்*
*சக்ர மாதா நம ஓம்*
*கதா மாதா நம ஓம்*
*ஐஸ்வர்னய நம*
ஆகிய ஒன்பது திருமகள் நாமங்களை எட்டு தடவைகள் கூற வேண்டும்.
பிறகு ஆத்ம பிரதட்சிணம் (தன்னைத் தானே சுற்றிக் கொள்ளுதல்) செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் பணக்கஷ்டம் தீரும். லட்சுமியின் பார்வை பட்டு குடும்பத்தில் செல்வம் பெருகும்.
*வேலை கிடைப்பதற்கு உதவும் ஸ்ரீ லட்சுமி ஸ்லோகம்:*
ஸ்ரீ லட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும், வேலை கிடைக்கவும், கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலை 10 முறை ஜபித்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
*ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச || ஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷமீ ச ஸுந்தரீ|||*
வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி ஸ்ரீ இலட்சுமி பூஜை செய்து 108 முறை இந்த சுலோகத்தை ஜபித்து வர விரைவில் வேலை கிடைக்கும்.
May be an image of temple
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...