Thursday, June 8, 2023

புன்னகை ..

 நகை' மகிழ்ச்சியின் வெளிப்பாடான புன்சிரிப்பாகவும்,

வாய்விட்டுச் சிரிக்கும் பெருஞ்சிரிப்பாகவும்,
சில சமயம் பிறரைக்குறித்து நகுகின்ற கேலிச்சிரிப்பாகவும் அமையும்.
புன்முறுவலே இவையனைத்துக்கும் தோற்றுவாய்.
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் ...
எனும் குறட்பாவில் வாய்ப்பேச்சுக்கே இடமின்றித் . .
தன்னைப் பார்த்துப் புன்னகை புரிந்த காதலி குறித்துப் பேசுகிறான் தலைவன்.
அவளின் காதல் விருப்பத்தைக் குறிப்பால் உணர்த்தும்கருவியாக அவளின் மென்சிரிப்பு அமைந்தது.
இனிக் காதல் இருவரைப் பற்றிய ஒரு கம்பசித்திரம்:
இராமனும் சீதையும் கோதாவரிக்கரையில் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழும்போது ...
சீதையின் நடையைப் பார்த்து ஒதுங்கிச் செல்லும் அன்னத்தைப் பார்த்தான் இராமன்;
மறுகணமே தன் பார்வையைத் திருப்பிச் சீதையின் மேல் செலுத்திச் "சிறியதோர் முறுவல் செய்தா'னாம்.
சீதையும் தன் பங்குக்கு அங்கு வந்து நீர்பருகிச் செல்லும் ...
ஆண் யானையின் நடையைப் பார்த்து அடுத்த நொடியே இராமனைப் பார்த்துப்
"புதியதோர் முறுவல்' பூத்தாளாம்ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையள் ஆகும் சீதையின் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான்;
மாதுஅவள் தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூத்தாள் ....
இங்கு இவ்விருவரிடையே உரையாடலாக ஒரு சொல் கூட இடம் பெறவில்லை.
அதே சமயம் ஒருவர் மீது ஒருவர்க்குள்ள தீராக்காதலை...
அவர்களின் புன்சிரிப்பே நமக்கு உணர்த்திவிடுகிறது.
இராமனின் சிறியதோர் முறுவலைக் காட்டிலும்
உவகை மேல்உவகையாக எழுந்த சீதையின் புன்சிரிப்பைப் "புதியதோர் முறுவல்' என்று பாடும் கம்பன் வாக்கில் புதுமை பொலிகிறது.
பிறருடைய ஏளனத்துக்கு ஒருவர் ஆளாதலும்....
இளமையால் மடம்பட நடத்தலும்...
அறிவின்மையால் பிறர் சிரிக்கும்படி நேர்தலும்...
ஒன்றை மற்றொன்றாக மாறி உணர்தலும் ...
ஆகிய இந்நான்கினாலும் நகைபிறக்கும் என்கிறார்.. தொல்காப்பியர்.
நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் எனப் ...
பாண்டியனின் பகைவர் கூற்றாக வரும் புறநானூற்றுப் பாடலடி இங்கு நினைக்கத்தக்கது.
"நகுதக்கனர்' எனில் நம்மால் சிரிக்கத்தக்கவர் என்று பொருள்.
வடபுலத்துஅரசராகிய கனகவிசயர்கள் காவா நாவினராய்த் தமிழர் வீரத்தை இகழ்ந்து நகையாடினர்.
அதனால் சேரனின் சீற்றத்துக்கு ஆளாகிக் கல் சுமந்த கதையைச் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.
தான் இகழ்ந்து சிரித்த பகைவரெல்லாம் தன்னைக் கண்டு சிரிக்கும் நிலை உண்டாயிற்றே என்று இராவணன் வருந்துவதாகக் கம்பன் கவிதை காட்டுகிறது.
முதல் நாள் போரில் இராமனிடம் தோல்வியுற்று அவனால் அபயம் அளிக்கப்பெற்று
ஏறெடுத்து எதையும் பாராதவனாய்த் தரைபார்த்தே நடந்து வருகிறான்இராவணன்.
அந்நிலையில் "தன்பகைவர்கள் சிரிப்பார்களே' என்று அவன் வருந்தவில்லையாம்.
பிறகு எதை நினைத்து அவனுக்கு வருத்தமாம்?
கம்பன் பாட்டிலேயே அதற்கான பதிலைப் பார்க்கலாம்.
வான்நகும் மண்ணும் எல்லாம் நகும் ..
நெடு வயிரத் தோளான் நான் நகு ...
பகைஞர் எல்லாம் நகுவர் ..
பகைவரது எள்ளல்சிரிப்பைக் காட்டிலும் ...
சீதையின் பரிகாசச் சிரிப்பால் உண்டாகும் அவமானத்தைப் பற்றியே அவன் அதிகம் வருந்துகிறான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...