இயக்குனர் ரா.சங்கரன் அவர்கள் இறையருட்செல்வர் இயக்குனர் K.சங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக ஆண்டவன் கட்டளை, ஆலயமணி, சிவகங்கை சீமை, ஆடிப் பெருக்கு, பணத்தோட்டம், கைராசி போன்ற
படங்களில் பணியாற்றியுள்ளார்.
நடித்த கௌரவம், வியட்நாம் வீடு
போன்ற படங்களில் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
இயக்குனர் புட்டண்ணா
கனகல் அவர்களிடம் உதவி
இயக்குனராக இருளும் ஒளியும்
படத்தில் பணியாற்றியுள்ளார்.
இயக்குனராக துர்க்கா தேவி,
ஒண்ணே ஒண்ணு கண்ணே
கண்ணு, பெருமைக்குரியவள்,
வேலும் மயிலும் துனண, தேன்
சிந்துதே வானம், தூண்டில் மீன்
போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.
நடிகராக புதுமைப் பெண்,
அம்மன் கோவில் கிழக்காலே,
மௌனராகம், நடிகர் திலகம் நடித்த லட்சுமி வந்தாச்சு, மற்றும் வாங்க பாரட்னர் வாங்க, பிள்ளை நிலா, ஒரு
கைதியின் டைரி, பகல் நிலவு,
பொண்டாட்டி தேவை, கடமை
கண்ணியம் கட்டுப்பாடு போன்ற
படங்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் நடிகர்
சிவகுமார் அவர்களுடன் எத்தனை
மனிதர்கள், எஸ்.பி.பாலசுப்ரமணியம்
அவர்களுடன் ஒரு நதி எங்கே போகிறது மற்றும் சுரேஷ் மேனன்,
பாலு மகேந்திரா அவர்களின்
தொலைக்காட்சித் தொடர்களில்
நடித்துள்ளார்.
இயக்குனர் VMC.ஹனீபா, இராம.நாராயணன் அவர்கள் இயக்கிய படங்களில் கதை விவாதங்களில் கலந்து கொண்டு முக்கிய பங்காற்றியுள்ளார்.
இயக்குனர், நடிகர் #ராசங்கரன் அவர்களுக்கு இன்று (ஜூன்12) 92ம் ஆண்டு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
(இரண்டாவது படம் ரா. சங்கரன் அவர்களது திருமணத்தில் நடிகர் திலகம், மக்கள் திலகம் இருவரும் கலந்து கண்ட போது)

No comments:
Post a Comment