Tuesday, June 13, 2023

நீட் தேர்வில் தமிழக மாணவர் முதலிடம் - ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து .

நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம். இந்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல் 10 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்ற 4 தமிழக மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ரவி, இந்த மாணவர்கள் நமது மாநிலத்தை பெருமைப்படுத்தியுள்ளனர் என புகழாரம் சூட்டினார். இதேபோல், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவன் பிரபஞ்சனுக்கும், முதல் 10 இடங்களில் 4 தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றதற்கும் வாழ்த்து. அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, நீட் தேர்வில் சாதனை படைத்திருப்பது, வருங்கால மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாளர்கள் J. பிரபஞ்சன் முதலிடத்தையும், கவுசவ் பவுரி மூன்றாவது இடத்தையும், சூரியா
சித்தார்த் ஆறாவது இடத்தையும், எஸ் வருண் ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ளனர் என்ற செய்தியறிந்து மிக்க மகிழ்ச்சியுற்றேன்.
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த நால்வருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். வெற்றி பெற்ற இதர மாணவ, மாணவியருக்கும் எனது
நல்
வாழ்த்துகள்
.

நீட் தேர்வில் முதலிடம் பிடித்து பிரபஞ்சத்தை திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு மாணவன் பிரபஞ்சன்👏👏👏
May be an image of 1 person and text that says "புதிய தவைமுறை உண்மை உடனுக்குடன் 720/720 நீட் தேர்வில் முதலிடம் பிடித்து பிரபஞ்சத்தை திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு மாணவன் பிரபஞ்சன் 13|06|2023 10:00 PM www.puthiyathalaimurai.com"
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...