என்.பழனியம்மாள். படிப்பறிவு இல்லாதவள்.
ஒரு கலெக்டரின் மகன், கலெக்டர் ஆகுவதில் வியப்பேதுமில்லை. அவனுக்கு வழிகள் இயல்பாக கிடைத்துவிடும். ஆனால், என் தாயை போன்ற படிப்பறிவு இல்லாதவளின் மகன் என்னை போன்று SI ஆகுவதும் சாதனையே. ஏனென்றால், வழிகளை இவனே உருவாக்க வேண்டும்.
இவனின் பல மாணவர்கள் இன்று மத்திய, மாநில பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகின்றனர். இளைஞர்களுக்காக காக்கியின் காதலன் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளான்.
இதற்கு இவள் கொடுத்த வாழ்க்கை கல்வியும், இவளிடம் இயல்பாக இருந்த வறுமையும் முக்கிய காரணம்.
இதுவரை என் வாழ்வில் பீடி, சிகரெட், மதுபானம் எதுவும் தொட்டதில்லை. இது என் தாயின் வளர்ப்பே...
தன் தாயை குறித்து இந்த பெருமைமிகு பதிவை பதிவிட்டவர்
திரு பி தங்கராஜ், சப் இன்ஸ்பெக்டர் ஆஃ போலீஸ், மத்திய ரிசர்வ் படை.
வாழ்த்துக்கள்
சார் 





No comments:
Post a Comment