அந்த பழைய காமெடி நடிகருக்கு இப்போது படங்கள் இல்லை நாடகங்கள் முன் போல் புக் ஆவறதில்லை வயசும் ஆயிடுச்சு. இவரு மூணு கட்சி அமாவாசை . எந்த கட்சியில் இருந்தாலும் அந்த கட்சிக்கு விசுவாசமாக இருக்க மாட்டார் . கட்சியில் இருந்து கொண்டு எதிர் தரப்பினருக்கு வேலை செய்வார் . ஆளுங்கட்சியாக அந்த திராவிட கட்சியில் இருந்த போது எதிர் கட்சியாக இருந்த இன்னொரு திராவிட கட்சி பெருந்தலைவர்களோடு வலம் வந்தார். ஆளுங்கட்சி பதவி கடைசி வரை ராஜினாமா செய்யவில்லை . அந்த பென்ஷன் இப்பவும் வந்து கொண்டு தான் இருக்கும். அதற்கு பிறகு வேறொரு தேசிய கட்சியில் இணைந்தார்.அந்த தேசிய கட்சியை கூட இருந்து குழி பறித்தார். பிறகு வேறொரு தேசிய கட்சியில் இணைந்து அந்த கட்சியில் ஜாதி பிரச்சினை பண்ணி கொண்டு இருக்கிறார். சினிமாவில் நாடகத்தில் நடித்ததை விட இப்போது சில்லறை நிறையவே வருது போல ....



No comments:
Post a Comment