Saturday, June 10, 2023

அவர் புரியாமல் எதுக்கு என்றார்...

 கடவுளின் விளையாட்டு...

கோவில் கூட்டத்தில் வரிசையில்..!!
உண்டியல் அருகே வந்தவுடன்..ஒரு பத்து ரூபாய் எடுத்துப்போட்டேன், அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக,
ஆனால், அது சற்று கிழிந்து இருந்தது. வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்தது.
சரி விடு... கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ....??
வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று.
வரிசை நகர... நகர... சில வினாடிகளில் பின்னாலில் இருந்து எனது தோளை தொட்டு ஒருவர்... 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்தார்...
அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு, எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்.
பிள்ளையாரை... வணங்கி விட்டு , வெளியே வந்தால்...
அவரும் அருகே நடக்க அவரிடம்..
சார் நீங்கள் உண்மையிலேயே...
கிரேட் என்றேன்... அவர் புரியாமல் எதுக்கு என்றார்...
கடவுளின் உண்டியலில் ரூ 2000 போடுகிறீர்களே... எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன்... நான்.
நானா..???? இல்லங்க... சார்... ???
சார் நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து,
அந்த 2000 ரூபாய் நோட்டு கீழே விழுந்தது..
அதைத்தான் நான் எடுத்து உங்ஙளுக்கு கொடுத்தேன்..
அதை வாங்கி உண்டியலில் போட்ட நீங்கள்தான்... உன்னதமான கிரேட் மேன்... என்றார்..
இதுதான் கடவுளின் விளையாட்டு ...
May be an image of 1 person, money and text
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...