Tuesday, May 2, 2017

பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.



கடந்த ஞாயிறன்று நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.அவ்வளவாக பணியிடங்கள் இல்லாத இத்தேர்வுக்கா இத்தனை அக்கப்போரு என்று.இத்தேர்வை எழுதும் ஆசிரியர்கள் பல்வேறு தனியார் பள்ளிகளில் பணியாற்றுக்கின்ற சூழல்.தேர்வு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்வுக்கு முந்தைய சில நாட்களுக்கு முன்பு வரை பள்ளித்தேர்வு, விடைத்தாள் மதிப்பிடும் பணி, தேர்வு முடிவுகளைத் தயாரிக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சிக்கியிருந்தனர் ஆசிரியர்கள்.ஆசிரியர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள கூட போதிய நேரம் வழங்கப்படவில்லை.மேலும் ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் அவரவர் பாடங்களில் மட்டும் தேர்வு எழுதும் நிலையிருந்தால் பரவாயில்லை.ஆனால் 150 மதிப்பெண்களில் அவரவர் பாடங்களுக்கு வெறும் 30 மதிப்பெண்களே.மற்ற 120 மதிப்பெண்களுக்கு மற்ற பாடங்களைப் படித்துத் தயார் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம்.அதற்கு தங்களைத் தயார் செய்து கொள்ள அவகாசம் வேண்டாமா. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இவ்வரசு என்ன செய்ய போகிறது. மேலும் ஞாயிறன்று நடைபெற்ற தேர்வுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த அம்சங்கள் பள்ளி மாணவர்களை விட மோசமாக நடத்திய விதம்தான் முகம் சுளிக்க வைத்துள்ளது.பொதுத்தேர்வு எழுதும் பள்ளிமாணவர்களையே உடலைத் தொட்டுப் பரிசோதிக்கக் கூடாது என்று இருக்கும்போது ஆசிரியர்களைப் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒவ்வொன்றிலும் என்ன இருக்கிறது என்று தடவி பார்த்ததெல்லாம் என்னவென்று சொல்வது. கோடைக்காலமாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறி கைக்குட்டை, தண்ணீர் பாட்டில்கள் வைத்துக் கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டன.10 மணி தேர்வுக்கு 8.30 மணிக்கே தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வேறு. போதிய நாட்கள் அவகாசமின்மை,கடும் கட்டுப்பாடுகளூடே தேர்வை நடத்தி முடித்திருக்கும் அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போகிறதா, இல்லாத சில பணியிடங்களைக் கூட இருப்பதாக சித்தரிப்பதை உருவாக்கப் போகிறதா, ஏற்கனவே தேர்ச்சி பெற்றுப் பணிக்காக காத்திருப்பவர்களுக்கும், புதிதாக தேர்ச்சி பெறுபவர்களுக்கும் என்ன செய்ய போகிறது என்பதைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 
Image may contain: 1 person, sitting and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...