Thursday, November 30, 2017

கிறிஸ்துவர்களை நாங்கள் எதிர்ப்பதற்கு காரணம்.

1) எனது கலாச்சாரத்தை திருடுகிறார்கள்,குத்துவிளக்கு முதல் கொடி மரம் வரை.
2) முகநூலில் இந்து பெயரில் ஒழிந்து கொண்டு ஜாதி சண்டை இழுத்து விடுகிறார்கள்.
3) எங்கள் வேதத்தை திருடுகிறார்கள்.அதாவது வேதத்தில் கிறிஸ்துவை பற்றி இருப்பதாக பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.தவறாக மொழிபெயர்ப்பு செய்கிறார்கள்.
4) இந்து பெயரில் ஒழிந்து கொண்டு நாட்டிற்க்கு எதிராக பேசுகிறார்கள்.
5 ) ஆங்கிலேயன் தான் எல்லாம் சொல்லி கொடுத்தான் என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள்.
6 ) பணத்தை வைத்து மதம் maatrukiraargal.
8 ) முகநூலில் இந்து மதத்தை கொச்சை படுத்தி போஸ்ட் செய்கிறார்கள்.
9 ) நாட்டிற்க்கு எதிராக பேசுபவனுக்கு சர்ச் எல்லா வசதியும் செய்து கொடுக்கிறது.
10) இன்னும் பல.

#மதசார்பின்மை......

1. #மதத்தின் அடிப்படையில் ஹஜ் மானியங்களை வழங்குகிறது அரசு.
2.#மதத்தின் அடிப்படையில் கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறது அரசு.
3. #மதத்தின் அடிப்படையில் வழிபாட்டுத்தல நிர்வாகங்களில் தலையிடுகிறது அரசு.
4. #மதத்தின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களை நடத்துவதில் எல்லைகளற்ற சலுகைகளை, சுதந்திரத்தை அளிக்கிறது அரசு.
ஆனாலும்......
நாம் #மதசார்பற்ற குடியரசு, மதம் என்பது ஒருவரது "ஆழ்ந்த தனிப்பட்ட" நம்பிக்கை....

ஆஞ்சநேயர் ..

ஆஞ்சநேயப் பெருமான் வலிமை முழுவதும் அவருடைய வாலில் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதற்கு ஒரு வரலாறு உள்ளது. பீமர் பாரிஜாதம் பூ தேடி காட்டில் அலைந்த போது மிகவும் களைப்படைந்து விட்டார். குறுக்கே குரங்கு வால் ஒன்று தென்பட்டது. அதை நகர்த்த குரங்கைக் கேட்டார்.
படுத்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறியாமல் தனது வேண்டுகோளை வேகமாகச் சொல்லிக் கோபப்பட்டார். உடனே அனுமார் ‘வயோதிகத்தினால் என்னால் என் வாலை நகர்த்த முடியவில்லை. நீயே அதை எடுத்து ஓரமாக நகர்த்தி விடு’ என்று சொன்னார். பீமர் வாலை அப்புறப்படுத்த முயற்சி செய்தார். பலமுறை முயன்றும் முடியவில்லை. அப்போது ஆஞ்சநேயர் தான் வாயு புத்திரன் என்று அறிமுகப்படுத்தி வாலைத்தானே நகர்த்தி பீமன் போவதற்கு வழிகொடுத்து வாழ்த்தினார்.
தான் எவ்வளவு முயன்றும் முடியாத ஒன்றை இவ்வளவு சுலபமாக செய்து விட்டாரே என்று ஆச்சரியப்பட்டு பீமன் அனுமனையும் அனுமன் வாலையும் வணங்கினார். பீமன் ஆஞ்சநேயரைப் பார்த்து உங்கள் வாலின் வலிமையையும் மகிமையையும் தெரியாமல் உதாசீனப்படுத்திய என்னை மன்னித்து எனக்கு சர்வ சக்திகளையும் மங்களத்தையும் அளித்தீர்களே! அதேபோல உங்களது வாலைப் பூஜித்து துதிப்பவர்களுக்கும் சர்வ மங்களத்தையும் கொடுத்து அருள வேண்டும் என்று வணங்கி வரம் அளிக்கக் கேட்டுக் கொண்டார். அப்படியே அனுமாரும் வரம் அளித்தார். இந்த வரலாற்றை ஒட்டியே இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த வழிபாட்டுச் செயல்முறை வருமாறு:-
அனுமாருடைய உடலில் வால் ஆரம்பமாகும் பகுதியிலிருந்து ஆரம்பித்து தினசரி முதலில் சந்தனப் பொட்டு வைத்து அந்த சந்தனப் பொட்டின் மேல் குங்குமத் திலகம் இட்டு வர வேண்டும். ஒவ்வொரு நாளும் இம்மாதிரி தொடர்ந்து வைத்துக் கொண்டே வந்து வாலின் நுனி வரை முடிக்க வேண்டும். அப்படி முடிக்கிற நாளன்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்திப் பூஜை செய்ய வேண்டும். அப்போது ஆஞ்சநேயர் நாமத்தையும், ராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும். அப்படிச் செய்தால் #நினைத்த #காரியம்பலித்துப் #பூரணபலனும்#பெரும்பேறும்#கைகூடும்.
#ஸ்ரீராமஜெயம்

நகைக் கடைகளில் கொள்ளை அடிப்பது என்னவோ உண்மைதான்.

தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு.சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும் செய்கூலி இல்லை என்று கூறுகின்றது.உண்மை என்ன?
==============================
ஒரு பவுன் தங்கசெயினுக்கு 1.5கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்.இது அனைவருக்கும் தெரிந்தது.ஆனால் 8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 6.5கிராம் நகை செய்யப்படுகின்றது.ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம்+1.5செம்பு= இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள்.அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்.இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம்+1.5 செம்பு(தங்கமாக)+சேதாரம்செம்பு 1.5 =9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெரும்6.5கிராம் தங்கத்தை மட்டும் சேர்த்துவிட்டி 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்.ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம்.யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக்கடை காரர்கள்.ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுன்னிகளாக உறிஞ்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குமிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை.இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன? பவுனுக்கு 3கிராம் என்று வசுல் செய்யும்போது ஒரு கிராம் செம்பின் விலைஎன்ன? கணக்கு போட்டு பாருங்கள் மக்களே. என்ன தலை சுத்துதா? எனக்குள் ஒரு ஆதங்கம்.பல முறை மேடையில் பேசியிருக்கின்றேன்.ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்.நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள நல்ல உள்ளங்களே உங்கள் ஆதங்கத்தை காட்ட அதிகப்படி சேர் செய்யவும்.எதுவும் மக்களால் முடியும்.

ராம நாமத்தின் மகிமை.

எப்போதும் மந்திரத்தையோ நாமத்தையோ உச்சரித்துக் கொண்டிருப்பது அஜபா எனப்படும். எந்நேரமும் விழித்திருக்கும்போதும் தூங்கும்போதும் எந்நேரமும் எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பது.
இருதயத்தில் இறைவனை உணரும்வரை உச்சரித்துக் கொண்டிருப்பது. இந்த அஜபா ஜபம் உடல் மனம் ஆத்மா உங்கள் உடல் செல்கள் அனைத்திலும் ஊடுருவி பாயும். இறைவனுக்கும நமக்கும் இடைவிடாத தொடர்பு கிடைக்கும்.
இதற்கு உதாரணமாக ராம் அனுமனை சொல்லலாம். சீதாதேவிக்கு எப்போதும் அனுமன் மீது சிறிது பொறாமை ஏனெனில் ராமனும் சீதாவும் ஒன்றாக இருக்கும் போது அனுமன் வந்துவிட்டால் கூட ராமன் அனுமனையே கண்களால் பார்த்துக் கொண்டிருப்பார். இதை ஒருநாள் ராமன் கண்டுபிடித்து விட்டார்.
அனுமனின் உடலிலிருந்து ரோமத்தை பிய்த்து சீதாவின் காதருகில் கொண்டு சென்றார். அந்த ரோமத்திலிருந்து ராம்ராம் என்ற ஓசை கேட்டுக் கொண்டேயிருந்தது. ராமர் சொன்னார் இப்போது புரிகிறதா சீதா நான் அவனைப் பார்க்கவில்லை. அவன் உறுதியான ஜபம் அவனுள் பரவி அது என்னை தானாக அவன் பக்கம் இழுக்கிறது….என்று
ராம நாமத்தின் மகிமை :
உலகிலேயே உயர்ந்த நாமம் ஸ்ரீ ராமநாமம்
ராமா என்று ஒருமுறை கூறினால் செய்த பாவங்கள் தீர்ந்து விடும்
ஸ்ரீ ராமபிரான் இலங்கை செல்வதற்காக வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர் எல்லா வானரங்களும் கற்களைத் தூக்கி கடலுக்குள் போட்டன
ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின் மீது சரியாக அமர்ந்தது ஆஞ்சநேயர் அந்தப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் மனதிற்குள் ராமநாமா ஜபித்த படி ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார் அவர் மனதிலும் ஆசை ஏற்பட்டது நாமும் இந்த வானரங்களுடன் இணைந்து கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன எனக் கருதியபடியே ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார் அந்தக்கல் சரியாக மற்ற கற்களின் மீது அமரவில்லை அவை தண்ணீரில் அடித்துச் சென்று விட்டது ராமபிரானுக்கு வருத்தம் இந்த வானரங்கள் போடும் கற்கள் மட்டும் மற்றொரு கல்லின் மீது அமர்ந்து விட்டதே இதற்கு என்ன காரணமாக இருக்கும் என வருத்தப்பட்டார்
ஆஞ்சநேயர் ராமர் அருகில் வந்தார் அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்
ஆஞ்சநேயா நான் செய்ததை நீ பார்த்து விட்டாயா எனக்கு ஒரு கல்லைபோடக்கூடத் தெரியவில்லை என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கிறது என்றார்.
அதற்கு ஆஞ்சநேயர் ப்ரபோ எல்லா வானரங்களும் உங்கள் தாரக மந்திரமான ராம் ராம் என்ற உங்கள் நாமத்தைச் சொல்லிக் கொண்டே கற்களைத் தூக்கிப் போட்டன அவை சரியாக அமர்ந்தது நீர் ராமனாகவே இருந்தாலும் ராம நாமம் சொல்லி போட்டிருந்தால் அது சரியாக கற்களில் போய் அமர்ந்திருக்கும் என்றாராம்
ராமநாமம் அவ்வளவு சக்தி வாய்ந்தது
ராமநாமம் மிகவும் அற்புதமானது
ஸ்ரீ ராமரின் பெயரை இடைவிடாது உச்சரிப்பதன் மூலம் எல்லா உயிர்களிடத்தும் ராமனை காணலாம் எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறலாம்
பாவங்களிலிருந்து கடைந்தேறலாம்
இவ்வளவு சக்தி வாய்ந்த ராம நாமத்தை
தெருவில் நடந்து போகும் போதும்
ஆபீஸில் வேலை செய்யும் போதும்
வீட்டில் சமையல் செய்யும் போதும்
சொல்லலாம்….!!!!
ராம் என்ற சொல் புனிதமான ஓம் என்னும் மந்திரத்திற்கு சமமானது...
*"நம்
தமிழ்நாட்டிலதான் குட்மார்னிங் வணக்கம் என்று சொல்கிறோம் வடநாட்டு பக்கம் காலையில் வரும் பால்காரன் கூட
*"ராம் ராம்"*
என்று கூப்பிட்டுத்தான் பாலை ஊற்றுவான் அவ்வளவு மகத்தானது *ராமநாமம்"*

பருவமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா?

பெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும்.. தவறாமல் தவிர்க்காமல் முழுவதும் படிக்கவும்…
பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப்பா! கூடவே அத்தனை அத்தனை நோய்களும்.

அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள்.இதற்கு காரணம் என்ன வென்று எப்போதாவது யோசித்தது உண்டா நீங்கள்..??
பருவமடைந்ததில் இருந்து கர்ப்பபை உள்ள இடத்திலும் தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அனியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.
அப்போது தான் அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான்.ஆனால் இப்போதோ அந்த இடத்தை காற்றோட்டம் படாமல் ஜீன்ஸ், டீ சர்ட், சுடிதார் என்று போட்டுக்கொண்டு கொள்வதால் கர்ப்பபை உஷ்ணம் அடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி உடலே கர்ப்பபையை காக்க நீர்கட்டியை கர்ப்பபையிக்குள் எற்படுத்தில் உஷ்ணத்தை குறைக்க முயற்சி செய்கிறது.
Image may contain: 1 person, smiling, closeup
கம்ப்யூட்டர் மொழியை கற்றுக்கொண்டவர்க்கு உடல் மொழியை கற்றுக்கொள்ள நேரம் இருப்பது இல்லை.
ஆதி காலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்த உடற்பயிற்சி. வயிற்றினை அழுத்தி மண்டியிட்டு வேலைசெய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும். இன்றோ அனைவருக்கும் உட்கார்ந்து மற்றும் நின்றுகொண்டு செய்யும் வேலை.
ஐ.டி., சாஃப்ட்வேர் நிறுவனங்கள் என்று மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது. ஆகையால், ஹார்மோன்களும் சரிவர இயங்குவதில்லை. இரவில் கண் முழித்து, பல வேலை செய்து, பகலில் தூங்குவதினால், உடல் வெப்பம் மிகும்.
இதனால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களின் வயிற்றுப் பகுதிகளே... தயவுசெய்து ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நாகரீகம் வளர்ச்சி என்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் ஆரோக்கியம் என்ற விசயத்தில் பத்து அடி பின்னோக்கி செல்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
படித்ததை பகிர்கிறேன்.... 

மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன ?


ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது..
அதில் ஒரு நரி ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது..
அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து அதன் வாலை வெட்டி விட்டான்..
வாலில்லாமல் நரிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. "அடடா இனிமே நம்மை நம்ம கூட்டத்தில் சேர்க்க மாட்டாங்களே.. என்ன செய்யலாம்.....???" என்று யோசித்து கொண்ருக்கும் போது எதிரில் அதோட கூட்டத்தை சேர்ந்த நரி ஒன்று வந்தது..
அது வால் இல்லாத நரியைப் பார்த்ததும் அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரித்தது..
என்னடா இது அசிங்கமா போச்சேன்னு யோசித்த முதல் நரிக்கு ஒரு யோசனை வந்தது..
உடனே பதிலுக்கு அதுவும் விழுந்து புரண்டு சிரித்தது..
உடனே இரண்டாவது நரி "ஏன்டா நீ என்ன லூசா" என்று கேட்டது..
உடனே இது "அடேய் முட்டாப்பயலே என் வாலை வெட்டினவுடனே கடவுள் எனக்கு தரிசனம் தந்தாரு. ஆனா அது தெரியாம நீ என்னை கிண்டல் பண்ற" என்று சொல்லியது..
இரண்டாவது நரி "அது எப்படின்னு?" என்று கேட்க, வால் அறுபட்டிருந்த நரி, "உன் வாலையும் வெட்டினா கடவுள் தெரிவார்” என்றது..
”ஆனால் நீயா வெட்டக்கூடாது. அதோ அந்த திராட்சை தோட்டத்தில போய் திராட்சையை சாப்பிட்டின்னா அந்த தோட்டக்காரன் பிடிச்சி
உன் வாலை வெட்டி விடுவான். அப்ப உன் முன்னாடி கடவுள் தோன்றுவார்" என்று கூறியது..
உடனே இரண்டாவது நரி அதே மாதிரி செய்யப் போய் தோட்டக்காரன் வாலை வெட்டி விட்டுவிட்டான்..
ஆனால் கடவுள் வரவில்லை. ஏமாந்த நரி கடும் கோபத்துடன் முதல் நரியோடு சண்டை போட்டது..
ஆனால் முதல் நரி அமைதியாக "இங்க பாரு இப்ப உனக்கும் வால் இல்லை. எனக்கும் வால் இல்லை. இரண்டு பேரையும் கூட்டத்துல சேர்க்க மாட்டாங்க. அதனால நம்மாள முடிஞ்ச அளவுக்கு வால் இல்லாத நரிக்கூட்டத்தை உருவாக்குவோம்" என்று சொன்னது..
இப்படித்தான் மதவாதிகள் பிறர் வழிபடுவதை சாத்தான் என்றும், தாங்கள் கும்பிடுவதுதான் கடவுள் என்றும் சொல்லி மதம் மாத்திக் கொண்டிருக்கின்றார்கள்..
நம்பிப் போன மக்களும் திரும்பி வந்தால் அவமானப்பட்டு விடுவோம் என்று அவங்களால் முடிந்த அளவிற்குக் கூட்டத்தைச் சேர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்..
அந்த வேலைதான் பல நாடுகளில், பல ஊர்களில் வெகு விமரிசையாக நடந்தேறிக் கொண்டு இருக்கிறது......

திருக்கார்த்திகை #தீபம் #வரலாறு:-

பரந்தாமனால் திருமாலும்,பிரம்மாவுக்கும் இடையே
முதன்மை பெற்ற பெரியவர் யார் என்பது குறித்துக் கடுமையான போட்டி உருவானபோது,

சிவபெருமான் அவர்கள் இருவருக்கும் பாடம் புகட்ட எண்ணினார்.
இருவரில்
யார் தம் அடியையோ,முடியையோ காண்கிறாரோ அவரே பெரியவர் என்று கூறி அடிமுடி காணாதவாறு தேவபிரான்,
ஜோதிப்பிழம்பாகக் காட்சி அளித்தார்.
திருமால் வராக அவதாரம் எடுத்துச் சிவனின் அடி காண இயலாமல்
தம் தோல்வியை ஏற்று திருவண்ணாமலை அடைந்தார்.
பிரம்மாஅன்னப்பறவை உருக்கொண்டு ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தார்.
அப்போது,விண்ணிலிருந்து பூமியை நோக்கித் தாழம்பூ ஒன்று இறங்கி வந்தது.
அதைக் கண்ட பிரம்மா
"தாழம்பூவே நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்க கங்கை நீர் மல்கும் திங்களார் (சிவன்)சடையினின்று நழுவிய நான்,
கடந்த 40 ஆயிரம் ஆண்டு காலமாக
கீழ் நோக்கி வந்து
கொண்டிருப்பதாகவும்,
பிரம்மதேவர் மட்டுமல்லாது எவராலும் ஈசனின் திருமுடியினை ஒரு போதும் காண இயலாது என்று கூறிவிட்டது.
இதனால் அதிர்ந்தபிரம்மா
தாழம்பூவை சரிக்கட்டி சிவனின் முடியைப் பிரம்மா கண்டுவிட்டதாகப் பொய்சாட்சி கூறவைத்தார்.
No automatic alt text available.
எனவே,
தம்முடியைக் காணாமலே கண்டதாகப் பொய் கூறிய படைத்தல் கடவுள் மீது கடுஞ்சினம் கொண்டு,
பொய்யுரை கூறியதால்,
"பூமியில் எங்கும் பிரம்மாவிற்கு ஆலயம் கூடாது" என்று சபித்தார்.
பொய்ச் சாட்சி கூறியமையால்
தாழை மடல் இனி ஒரு போதும்
தம் வழிபாட்டுக்கு ஏற்ற மலர்,அன்று என்று கூறிவிட்டார்.
காத்தல் கடவுள்திருமால்,
சிவனிடம்,இறைத்தன்மையைக் காத்து உண்மை கூறியதால்,
"பூலோகம் முழுவதும் திரு உருவ வழிபாட்டுடன் ஆலயம் கொண்டு அடியவரைக்காக்கும் பணியைப்புரிவீராக"என்று கூறினார்.
பிரம்மனும்,திருமாலும்
தங்கள் அகந்தை இருள் அகன்று,
சிவனிடம் வேண்ட அவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி
சிவலிங்கத் திருமேனி கொண்டு
தீபத் திருநாளில் சுயம்புவாக எழுந்தருளினார்.
தீப பிழம்பாகச் சோதி வடிவாக அருணாச்சலம் அமர்ந்த ஈசன் காட்சியளித்த நன்னாளே
கார்த்திகை மாதம் பத்தாம் நாள் மகாதீபப் பெருவிழாவாக மலர்ந்து ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி,ஐப்பசி,கார்த்திகை மாதங்களில் பயிர் விளைச்சல் அதிகம் இருக்கும்.
அதனால் பூச்சிகள் அதிகம் வரும்
எனவே தீபம் ஏற்றுவதால்
பூச்சி இனமானது அழிந்து விடும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு.
அனைவருக்கும்
திருக்கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்.Image may contain: people standing, sky and outdoor
அக்ஞானம் அதாவது ஞானமற்றிருக்கும் நிலை இருள் தான். அந்த நிலையில் அகந்தை அல்லது ஆணவம் இருக்கும். மாற்றிச் சொன்னால், அகந்தை இருப்பவர் அக்ஞானி ஆவார். ப்ரும்மாவிடமோ திருமாலிடமோ அகந்தை உண்டாகவே உண்டாகாது. உணர்த்தப்படும் கருத்து என்னவெனில், நம் போன்றோர்கள் பரம்பொருள் கோட்பாட்டைச் சரியாக அறிந்து இறையுருவங்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தக் கூடாது என்பதே. ஒரே பரம்பொருளே தான் தேவைக்கேற்பப் பல்வேறு உருவங்களாக ஆகி தங்கள் மேன்மைமிகு பணிகளைப் புரிவர். வடிவங்களுக்குப் பொருத்தமாக சிலப் பெயர்கள் கொள்வர். உற்சவர் மூலவர் வடிவங்களில் வேறுபடுவதனால் தத்துவத்தில் வேறா? இல்லையே. அதுபோல் தான். இறைதத்துவம் சரியாக அறியப்பட்டு தன்னையும் சுமந்து ஆளும் ஆன்மாவும் அதுதான் என்பது அனுபவத்திலும் வர வேண்டும். பேராசை, பொறாமை, கபடு சூது, வஞ்சனை, சினம், இன்னாச்சொல் மற்றும் மன நிறைவின்மை இவைகளெல்லாம் அகந்தை ஒன்றினாலே ஏற்பட்டு உள்ளமாகிய திருக்கருவறையை இருளடையச் செய்துள்ளது. இறைவனுடைய இடமாயிற்றே? திருக்கார்த்திகை தீப ஒளி அதாவது ஶ்ரீ அருணாசலேஸ்வர ஞான ஒளி மட்டும் தான் அந்த இருளைப் போக்கடிக்கவல்லது. ப்ரார்த்தித்துக் கொள்வோம்.

*ஆசிரியர்களின் இன்றைய நிலை.*

(குறைவான மதிப்பெண் எடுத்த 11ம் வகுப்பு மாணவிகளை திட்டினாலோ அடித்தாலோ மனமுடைந்துவிடும் என்பதற்காக பெற்றோர்களை அழைத்து வருமாறு ஆசிரியர் கூறியுள்ளார்.
இதனால் மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த செய்தியே.அதன்பிறகு ஆசிரியரின் நிலை)
*சீன்1*
"என்னப்பா அது?"
"சார்.. அது வந்து.."
" சொல்லுப்பா"
"பிட்டு சார்.. ஸாரி சார்"
"ஓ! ஒக்காருப்பா.. டெஸ்ட் எழுது"
"இனிமே பண்ணமாட்டேன் சார். மன்னிச்சிருங்க சார்"
"பரவால்லப்பா"
"திட்ட மாட்டிங்களா சார்"
"சே.. சே.. நல்லா இருப்பா"
*சீன் 2*
"என்னம்மா 5 மார்க் வாங்கிருக்க?"
"ஸாரி சார்.. படிக்கல சார்"
"போன எக்ஸாம்ல 10 வாங்கிருந்தியேம்மா.."
"மன்னிருச்சுருங்க சார்.."
"சே.. சே.. ஒக்காரும்மா. ரெஸ்ட் எடு"
*சீன் 3*
மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
"என்னடா இவரு இப்படி திருந்திட்டாரு"
"சே.. விட்றா ரொம்ப நல்லவரு!"
*சீன் 4*
வருட இறுதியில்..
"யோவ் வாத்தி என்னய்யா பாடம் நடத்தியிருக்க. எம்பொண்ணு இப்படி அநியாயமா பெயில் ஆயிட்டாளே.. எல். கே. ஜியில எல்லாம் A1 கிரேட் தானேடா வாங்குவா.. என்னை ஒரு நாள் ஸ்கூலுக்கு கூப்பிட்டு அனுப்பி சொல்லிருந்தா நானே படிக்க வச்சிருப்பேனே.. உன்னால தான்டா எல்லாம்"
"ஹி.. ஹி.. நல்லது சார்"
*என்னடா இவன் என்ன பண்ணாலும் இப்படி ரியாக்ட் பண்றான். ஜென் நிலைக்குப் போயிட்டானா? இல்ல.. லூஸு ஆயிட்டானா?*
(ஆசிரியர்களுக்கு உணவிடும் தெய்வங்களே மாணவர்கள்தான்.அவர்களின் முழு வளர்ச்சியிலும் பெற்றோர்களை விட ஆசிரியர்களுக்கே பெரும்பங்கு.
அதை உணர்ந்து செயல்படும் ஆசிரியர்களுக்கு தண்டனைகள்தான் பரிசு).
*ஆசிரியர் பணி முள் மேல்_ படுக்கையே.*

Tuesday, November 28, 2017

"எம்ஜிஆரின் சிங்க‌க்குட்டிக‌ள்"


எம்ஜிஆர் த‌னிக்க‌ட்சி தொட‌ங்கிய‌வுட‌ன் முத‌ல் பொதுக்கூட்ட‌ம் காஞ்சிபுர‌த்தில் என அறிவித்தார். ஆனால் அந்த கூட்ட‌ம் சுலப‌த்தில் ந‌ட‌ந்துவிட‌வில்லை. காஞ்சிபுர‌ம் மாவ‌ட்ட எம்ஜிஆர் மன்ற‌த்த‌லைவ‌ர் கே.பாலாஜி த‌லைமையில் ந‌ட‌க்க‌விருந்தது. அவ‌ரை கைது செய்துவிட்டால், கூட்ட‌ம் த‌டைப‌டும் என க‌ருணாநிதி முய‌ன்றார். அத‌னால், த‌லைம‌றைவாகவே கூட்ட‌ ஏற்பாடுக‌ளை க‌வ‌னித்தார் பாலாஜி. க‌லெக்ட‌ர் சுப்பிர‌மணியமோ கூட்ட‌த்திற்கு அனுமதி த‌ராமல் இழுத்த‌டித்துக் கொண்டிருந்தார்.
காஞ்சிபுர‌ம் தேர‌டியில்தான் பொதுக்கூட்ட‌ மேடை. அருகே ப‌ள்ளிவாச‌ல். ப‌ள்ளிவாச‌ல் காம்ப‌வுண்டின் பின்புற‌ம் வ‌ய‌ல்வெளி. ராமாவ‌ர‌ம் தோட்ட‌த்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வ‌ழியாக வ‌ரும் எம்ஜிஆரை கொல்வ‌த‌ற்கு திட்ட‌ம் தீட்ட‌ப்ப‌ட்டுள்ளதாக த‌க‌வ‌ல் கிடைத்த‌து.
அத‌னால் எம்ஜிஆரை, தாம்ப‌ர‌ம் ப‌ட‌ப்பை வ‌ழியாக வாலாஜாபாத் வ‌ந்து, அங்கிருந்து காஞ்சிபுர‌ம் அழைத்துவ‌ருவ‌து என முடிவுசெய்ய‌ப்ப‌ட்ட‌து. அரைகிலோ மீட்ட‌ர் முன்பாக‌வே காரை நிறுத்திவிட்டு எம்ஜிஆரை வ‌ய‌ல்வெளி வ‌ழியே ந‌ட‌த்திக்கூட்டி வ‌ந்து ப‌ள்ளிவாச‌ல் காம்ப‌வுண்ட் வ‌ழியே வ‌ந்து மேடைக்கு செல்வ‌து என தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து.
ப‌ள்ளிவாச‌ல் காம்ப‌வுண்ட் சுவ‌ரை ஏறிவ‌ருவ‌து சுலப‌மல்ல. எனவே ப‌ள்ளிவாச‌ல் காம்ப‌வுண்ட் சுவ‌ரில் ஒருஆள் நுழையும் அளவிற்கு இடிக்க அனுமதி கேட்க‌ப்ப‌ட்ட‌து. முஸ்லீம் ச‌முதாய‌த்தின‌ர் இத‌ற்காக ஒரு கூட்ட‌ம் (ஜ‌மாத்) போட்டு "எம்ஜிஆர் ந‌ம் ச‌முதாய‌த்திற்காக எவ்வ‌ளவோ உத‌வியிருக்கிறார். அவ‌ருக்கு இந்த‌ உத‌வி செய்வோம் " என தீர்மானித்து அனுமதி அளித்த‌ன‌ர். உட‌னே பின்புற காம்ப‌வுண்டில் சிறிய ப‌குதி இடிக்க‌ப்ப‌ட்டு க‌த‌வும் வைக்க‌ப்ப‌ட்ட‌து. கூட்ட நாளும் நெருங்கிவிட்ட‌து. 

Image may contain: 1 person, sitting

க‌லெக்ட‌ர் அனுமதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் 24/10/1972ல் எம்ஜிஆர் ந‌ட‌த்தும் முத‌ல் கூட்ட‌த்தில் க‌லந்துகொள்ள வேண்டும், அவ‌ர் ஆர‌ம்பிக்கும் க‌ட்சிக்கு த‌ம் ஆத‌ர‌வை அளிக்கவேண்டும் என முடிவு செய்த மக்கள் காலை 8 மணிமுத‌லே தேர‌டி திட‌லில் கூட ஆர‌ம்பித்துவிட்டார்கள். 
அப்போதெல்லாம் அவ்வ‌ளவு ப‌ஸ் வ‌ச‌தி கிடையாது. எனவே சுற்றியுள்ள கிராமங்க‌ளில் உள்ள மக்களெல்லாம் க‌ட்டுச்சோற்றை க‌ட்டிக்கொண்டு கால்ந‌டையாக‌வும், மாட்டு வ‌ண்டியிலும், குதிரை வ‌ண்டியிலும் வ‌ந்து மக்கள் தேர‌டியில் இட‌ம் பிடிக்க‌ ஆர‌ம்பித்து விட்டார்க‌ள். 2 கிலோமீட்ட‌ர் தூர‌த்திற்கு மக்கள் வெள்ளம் ம‌தியமே அலை மோதிய‌து. 
இனிமேல் அவ்வ‌ளவு கூட்ட‌த்தை க‌லைக்க‌வும் முடியாது. க‌லைத்தாலும் நிலைமை விப‌ரீத‌மாகிவிடும் என்று மேலிட‌த்திற்கு தெரிவித்துவிட்டு க‌லெக்ட‌ர் கூட்ட‌த்திற்கு ஒருவ‌ழியாக அன்று மதிய‌ம் அனுமதி அளித்துவிட்டார். 
நிலைமை இவ்வாறிருக்க தோட்ட‌த்திலோ எம்ஜிஆருக்கு க‌டும் காய்ச்ச‌ல். மருத்துவ‌ர்க‌ள் எம்ஜிஆரை எங்கும் வெளியில் செல்லவேண்டாம் என்று த‌டுத்துவிட்ட‌ன‌ர். ஜானகி அம்மாவும் அருகிருந்து எம்ஜிஆரை க‌வ‌னித்துக் கொண்டார். நேர‌மோ சென்று கொண்டிருந்த‌து. 
கூட்ட‌த்திற்கு போகும்வ‌ழியில் எம்ஜிஆரை தீர்த்துக்க‌ட்ட‌ ஒரு கூட்ட‌மும், அவ‌ர் முக‌த்தில் திராவ‌க‌த்தை வீச ஒரு கூட்ட‌மும் த‌யாராக இருப்ப‌தாக எம்ஜிஆர் வீட்டிற்கு த‌க‌வ‌ல் கிடைத்த‌து. இடையே வானொலியில் எம்ஜிஆருக்கு உட‌ல்நிலை ச‌ரியில்லாத‌தால் பொதுக்கூட்ட‌ம் ர‌த்து என்ற செய்தியும் வ‌ர‌ மக்கள் கொதித்து போயின‌ர். ப‌லர் ர‌க‌ளையில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.
நிலைமையின் விப‌ரீத‌த்தை உணர்ந்த மன்றத்த‌லைவ‌ர் பாலாஜி, சென்னையை நோக்கி காரில் புற‌ப்ப‌ட்டார். வ‌ழியில் காரை மறித்து ப‌லர் என்னைய்யா! வாத்தியார் வ‌ராரா? இல்லையா? என்று துளைத்தெடுத்த‌ன‌ர். க‌ண்டிப்பாக வ‌ருவார் என்று சொல்லிவிட்டு தோட்ட‌த்திற்கு சென்றார் பாலாஜி. 
அங்கு சென்ற பாலாஜி அதிர்ச்சிய‌டைந்தார். ஒருப‌க்க‌ம் எம்ஜிஆருக்கு க‌டும் காய்ச்ச‌ல். மறுபுற‌ம் அவ‌ரை கொல்ல‌ காத்திருக்கும் கூட்ட‌ம். க‌வ‌லை அடைந்த ஜானகி அம்மையாரோ, த‌லைவ‌ரை அழைத்துச் செல்லக்கூடாது என்று பாலாஜியிட‌ம் வாத‌ம் செய்தார். 
உட‌னே பாலாஜி, த‌லைவ‌ரே! நீங்கள் மட்டும் இன்று கூட்ட‌த்திற்கு வ‌ர‌வில்லையென்றால் அந்த மாமர‌த்திலே தூக்கு போட்டுக்கொள்வேன் என்று கையைக்காட்ட‌, எம்ஜிஆர் மருத்துவ‌ர்க‌ள், ஜானகி அம்மையாரையும் ச‌மாதான‌ப்ப‌டுத்தி விட்டு காரில் ஏறிவிட்டார். கார் ப‌லவ‌ழியில் சுற்றி வ‌ந்து காஞ்சிபுர‌ம் வ‌ந்த‌டைந்தது. ஏற்கெனவே திட்ட‌மிட்ட‌ப‌டி எம்ஜிஆரை வ‌ய‌ல்வெளி வ‌ழியே 1/2 கி.மீ ந‌ட‌த்தியே கூட்டி வ‌ந்த‌ன‌ர். மேடையின் பின்புற‌ம் இருந்த ப‌ள்ளிவாச‌ல் காம்ப‌வுண்ட் கேட் வ‌ழியே எம்ஜிஆர் வ‌ந்து திடீரென மேடையில் தோன்றிய‌தும் ம‌க்க‌ள் ஆர‌வார‌த்திற்கு அளவேயில்லை. மக்களின் எழுச்சியையும் ச‌ந்தோஷ‌த்தையும் பார்த்த எம்ஜிஆர், பாலாஜியையே கூட்ட‌த்திற்கு த‌லைமையேற்க செய்தார். க‌ட்சி ஆரம்பித்து ஒருவார‌மே ஆகியிருந்த‌ நிலையில் எம்ஜிஆர் க‌ருப்பு சிவ‌ப்பு க‌ரைவேட்டியையே க‌ட்டியிருந்தார். தோளில் க‌ருப்பு சிவ‌ப்பு பார்ட‌ரில் துண்டும் இருந்த‌து. ப‌க்க‌த்து க‌ட்டிட‌த்தில் திராவ‌க‌ம் வீச காத்திருந்த கும்ப‌ல், இவ்வ‌ளவு ப‌ர‌ப‌ர‌ப்பான கூட்ட‌த்தில் திராவ‌க‌த்தை எம்ஜிஆர்மீது வீசிவிட்டு த‌ப்புவ‌து எளித‌ல்ல என்று முடிவு செய்து இட‌த்தை காலி செய்த‌ன‌ர்.
த‌லைவ‌ர்மீது மக்கள் க‌ருப்பு மற்றும் சிவ‌ப்பு துண்டுக‌ளை கீழேயிருந்து வீசின‌ர். அனைத்தையும் லாவ‌க‌மாக பிடித்த எம்ஜிஆரின் ஸ்டைலையும் வேக‌த்தையும் பார்த்த‌ மக்களின் கைத‌ட்ட‌லும், விசில் ச‌த்த‌மும் விண்ணை பிளந்த‌து. 
இது திமுக கூட்ட‌மா அல்ல‌து அண்ணா திமுக கூட்ட‌மா என விய‌க்கும‌ளவிற்கு மேடையில் க‌ருப்பு சிவ‌ப்பு துண்டுக‌ள் குவிந்து கிட‌ந்த‌து. அப்போதே திமுக என்றால் எம்ஜிஆர். எம்ஜிஆர் இல்லாத திமுக க‌தை முடிந்த‌து என ஆட்சியாளர்க‌ளுக்கு உரைத்த‌து. 
இந்த‌ ஆர‌வார‌ ச‌ந்தோஷத்தில் த‌லைவ‌ரின் காய்ச்ச‌ல் ப‌ற‌ந்தோடிய‌து. மாறாக த‌லைவ‌ரின் வ‌ளர்ச்சியை பிடிக்காத க‌ருணாநிதி உள்ளிட்ட அப்போதைய த‌மிழ‌க அர‌சிய‌ல் க‌ட்சித் த‌லைவ‌ர்க‌ளுக்கு காய்ச்ச‌ல் தொற்றிக் கொண்ட‌து.
எவ்வித‌ குறிப்புமின்றி, எம்ஜிஆர் " என‌து ர‌த்த‌த்தின் ர‌த்த‌மான உட‌ன்பிற‌ப்புக‌ளே! என ஆர‌ம்பித்து, நான் க‌ணக்கு கேட்ட‌து த‌வ‌றா? என்ற கேள்வியுட‌ன் திமுக வ‌ளர்ச்சிக்கு த‌ன்னுடைய ப‌ங்கு, திமுக செய்துவ‌ரும் ஊழ‌ல்க‌ள் என சுமார் இர‌ண்டு மணி நேர‌ம் (இர‌வு 10 மணிமுத‌ல் 12 மணிவ‌ரை) பேசிவிட்டு சென்றார். மறுநாள் அனைத்து தின‌ச‌ரிக‌ளிலும், எம்ஜிஆர் த‌லைப்பு செய்தி ஆனார்.

#நமஹ_என்றால்_என்ன?


கோயிலில் மந்திரம் சொல்லும் போது ‘நமஹ’ என்ற சொல்லப்படுவதை அனைவரும் கேட்டிருப்போம். ஆனால் இதன் அர்த்தம் என்ன என்பது பலருக்கும் தெரியாது.
சமஸ்கிருதத்தில் ‘மமஹ’ என்றால் ‘என்னுடையது’ என்று பொருள். அதோடு ‘ந’ என்பதைச் சேர்த்து ‘ந மமஹ’ என்று சொன்னால் ‘என்னுடையது இல்லை’ என்று அர்த்தம் உண்டாகும்.
‘ந மமஹ’ என்பதே பின்னர் ‘நமஹ’ என மாறியதாகச் சொல்லப்படுகின்றது. ‘எல்லாம் கடவுளுக்கே சொந்தமானது’ என்பதைக் குறிப்பிடுவதற்காகவே அர்ச்சனையின் போது ‘நமஹ’ என்று உச்சரிக்கப்பட்டுகின்றது.
கடவுளுக்கு அர்ச்சிக்கும் தேங்காய், பழம் மட்டுமில்லாமல் வழிபடும் நாமும் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதைக் குறிக்கவே ‘நமஹ’ எனப்படுகின்றது.
#ஸ்ரீராமஜெயம்

கீதையின் பாடமும் இது தான்.”

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?
பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான்.
‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா?
கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா?’
பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன.
அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில்,
“உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான்.
புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே
காவி_உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது.
“குருக்ஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்துகொள்ளாமல் நீ அந்த போரை அறிந்துகொள்ளமுடியாது.”
“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” – சற்றே குழப்பத்துடன் கேட்டான் வருண்.
“மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அது ஒரு தத்துவம்.
அதை தான் அனைவரும் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்…”
அந்த காவியுடை பெரியவர் வருணைப் பார்த்து மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்தார்.
“அது என்ன தத்துவம் ஐயா?
எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்…”
“நிச்சயம்! அதற்காகத் தானே வந்திருக்கிறேன்”
“பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான்!!!!
கௌரவர்கள் யார் தெரியுமா?”
“………………..”
“இந்த ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள்!!!”
“………………..”
“எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து உன்னால் (ஐம்புலன்களால்) போரிட முடியுமா?
“………………..”
“முடியும்…! எப்போது தெரியுமா?”
வருண் மலங்க மலங்க விழித்தான்.
“கிருஷ்ண பரமாத்மா உன் தேரை செலுத்துவதன் மூலம்.”
வருண் சற்று பெருமூச்சு விட்டான்.
பெரியவர் தொடர்ந்தார்.
“கிருஷ்ணர் தான் உன் மனசாட்சி. உன் ஆன்மா. உன் வழிகாட்டி. அவர் பொறுப்பில் உன் வாழ்க்கையை நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.”
வருண் பெரியவர் சொல்வதை கேட்டு மெய்மறந்து போனான். ஆனால் வேறொரு சந்தேகம் அவனுக்கு தோன்றியது.
“கௌரவர்கள் தீயவர்கள் என்றால் அப்போது பெரியவர்களான துரோணாச்சாரியாரும் பீஷ்மாரும் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போரிடுகிறார்கள்?”
“வேறொன்றுமில்லை…. நீ வளர வளர உனக்கு மூத்தவர்கள் குறித்த உன் கண்ணோட்டம் மாறுகிறது.
நீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று எண்ணினாயோ அவர்கள் உண்மையில் அப்படி கிடையாது.
அவர்களிடமும் தவறுகள் உண்டு என்று உணர்கிறாய்.
எனவே அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா, அவர்கள் உனக்கு தேவையா இல்லையா என்று நீ தான் தீர்மானிக்க வேண்டும்.”
“மேலும் அவர்கள் உன் நன்மைக்காக போராடவேண்டும் என்று நீ ஒரு கட்டத்தில் விரும்புவாய்.
இது தான் வாழ்க்கையின் கடினமான பகுதி.
கீதையின் பாடமும் இது தான்.”
வருண் உடனே மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.
களைப்பினால் அல்ல. கீதை உணர்த்தும் பாடத்தை ஓரளவு புரிந்ததும் அதன் மீது ஏற்பட்ட பிரமிப்பினால்.
“அப்போது #கர்ணன்?” அவன் கேள்வி தொடர்ந்தது.
“விஷயத்துக்கு வந்துவிட்டாய் மகனே.
உன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை. மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன்.
ஆனால், தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் ஏதேனும் சாக்குபோக்கு சொல்வான். உன் விருப்பம் போல. ஆசை போல.”
“நான் சொல்வது உண்மை தானே? தீயவற்றுக்கு துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது…?”
வருண் “ஆம்…” என்பது போல தலையசைத்தான்.
இப்போது தரையை பார்த்தான்.
அவனுக்குள் ஓராயிரம் எண்ணங்கள். சிந்தனைகள். எல்லாவற்றையும் ஒன்றாக்கி தலைநிமிர்ந்து மேலே பார்த்தான்.
அந்த காவிப்பெரியவரை காணவில்லை.
அவர் புழுதிகள் எழுப்பிய திரையில் மறைந்துவிட்டிருந்தார்.
*மிகப் பெரிய உண்மை* 👌🏾👌🏾👌🏾

அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்.

கோயில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.
இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம் .
1). அகல் விளக்கு = சூரியன்
2.) நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்
3.) திரி = புதன்
4). அதில் எரியும் ஜ்வாலை = செவ்வாய்
5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு
6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = சனி
8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது
9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை); அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்
ஆசைகள் நம்மை அழிக்கிறது ; மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது....
இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.
#ஸ்ரீராமஜெயம்.
Image may contain: 1 person, fire, night, candles and indoor

#நீங்களும் #கடவுள்தான்.

ஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினான்.
அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று திண்பண்டங்களையும் மதிய உணவையும் பையில் எடுத்து கொண்டான். காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான்.
அங்கு வயதான பெண்மனி ஒருவர் புறாக்கள் சாப்பிடுவதை பார்த்து கொண்டே இருந்தார்.
நடந்து வந்த களைப்பில் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான்.அந்த பாட்டி அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.ஒரு வேளை பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்றெண்ணி தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு தண்ணீரை வாங்கி குடித்தாள்.
அந்த சிறுவன் இதுவரை அவ்வளவு அழகான புன்னகையை பார்த்ததில்லை அதனால் திரும்பவும் அவர்கள் புன்னகையை பார்க்க தான் கொண்டு வந்து உணவு பொட்டலத்தை பிரித்து கொடுத்தான்.
அந்த பாட்டியும் மீண்டும் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு அவன் கொடுத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் அடிக்கடி ஒருவரை பார்த்து ஒருவர் புன்னகைத்து கொண்டே இருந்தனர்.
நேரம் ஆக ஆக அம்மா நியாபகம் வந்தது சிறுவனுக்கு
அதனால் எழுந்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான்.சிறிது தூரம் நடந்தவன் சட்டென திரும்பி குடுகுடுவென்று ஓடி சென்று பாட்டியை கட்டி அணைத்தான்.பாட்டி அவன் செயலை பார்த்ததும் மிகவும் பிரகாசமாக சிரித்தாள்.
சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதை பார்த்த அவன் அம்மா என்ன நடந்தது என்று கேட்டாள்.’#நான் #மதியம்கடவுளுடன்#சாப்பிடேன்’ என்றான் #கடவுளின் #புன்னகை மாதிரி நான் #இதுவரை #எங்கும் #பார்த்ததில்லை என்றான்.
அதே நேரம் அந்த பாட்டி அவர்கள் வீட்டில் நுழையும்போது என்ன அம்மா இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று அவர் மகன் கேட்டான்.’இன்று மதியம் #நான் #கடவுளுடன்#சாப்பிட்டேன்’ #என்றாள் #அது மட்டும் இல்லை #நான் #நினைத்ததைவிட #கடவுள் #மிகசிறிய #வயதுகொண்டவராக#இருந்தார் #என்றாள்.
அறிமுகம் இல்லாதவர்களிடம் ஒரு சின்ன புன்னகை,ஆறுதலான வார்த்தை,சின்ன உதவி செய்து பாருங்கள் #நீங்களும் #கடவுள்தான்.கடவுள் வேறெங்கும் #இல்லை #நம்மிடம் தான் இருக்கிறார்.
இதை தான் #அன்பே #சிவம் என்றார் திருமூலர்
ஸ்ரீராமஜெயம்

Monday, November 27, 2017

செட்டிநாடு!....


இது ஏதோ ஒரு தனி நாடு அல்ல. தமிழ்நாட்டுக்கு உள்ளே தனிப்புகழ் பெற்ற நாடு. தமிழகத்தின் பாரம்பரியக் கட்டடக் கலையைப் பாருக்குப் பறைசாற்றும் நாடு. சர்வதேச கட்டடக்கலைக்கு முன்னோடியாக திகழுகிறது இந்த செட்டி நாடு. நூறாண்டுகளை கடந்த செட்டிநாடு புராதன பங்களாக்கள் யுனெஸ்கோ மேப்பில் இடம்பிடித்துள்ளன. தமிழ் நாட்டின் தென் பகுதியில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் காரைக்குடியை மையமாகக் கொண்ட குறிப்பிட்ட சில ஊர்கள் சேர்ந்த பகுதியைச் "செட்டிநாடு" என்று அழைக்கப் படுகிறது. குறிப்பாகக் காரைக்குடி, புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட மக்கள் குடியேறிய 96 ஊர்களும் சேர்ந்து "செட்டிநாடு" என்று குறிக்கப்படுகிறது.
ஊர்கள்
இந்த ஊர்களில் காரைக்குடி, தேவகோட்டை பெரிய ஊர்கள். மேலும், கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், ஆத்தங்குடி, அரியக்குடி, கண்டரமாணிக்கம், பாகனேரி, நாட்டரசன்கோட்டை, ஒக்கூர், வேந்தன்பட்டி, பொன்னமராவதி போன்ற ஊர்களும் உள்ளன. நகரத்தார் சமூகத்தினர் வசிக்கும் இந்தப் பகுதியை, நாட்டுக்கோட்டை என்றும் அழைப்பது உண்டு.
ஆயிரம் ஜன்னல் வீடு செட்டிநாட்டில் மிகவும் பிரபலம். செட்டிநாட்டிலுள்ள வீடுகள் எல்லாம் 1875ஆம் ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டு வரை கட்டப்பெற்றதாகும். எல்லா வீடுகளுமே 80அடி முதல் 120 அடிவரை அகலமும்,160 அடி முதல் 240 அடிவரை நீளமும் கொண்டவையாக இருக்கும். வீடுகள் எல்லாம் பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேக்குமரங்களால் இழைத்துக் கட்டப்பெற்றவையாகும்.

காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம் (GYM)

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது., "மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் "நதிகளில் நான் கங்கையாகவும., மலைகளில் நான் விந்திய மலையாகவும்., மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி இராமகிருஷ்ண பரமஹமஸர் கூறுகையில் "பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும்., காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் "காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் (Atom Bomb) சமம்" எனக் குறிப் பிட்டுள்ளார்.
ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823—1900) அவர்கள் "ஒளியினை தவம் செய்து நம் மூளை., மனதினை உயர்த்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி (1869—1948) அவர்கள் "யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் "உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்" என்பதாகும்.
இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி., மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.
தத் — வெற்றி
ச — வீரம்
வி — பராமரிப்பு
து — நன்மை
வ — ஒற்றுமை
ரி — அன்பு
நி — பணம்
யம் — அறிவு
ஃபர் — பாதுகாப்பு
க்கோ — ஞானம்
த்தி — அழுத்தம்
வா — பக்தி
ஸ்யா — நினைவாற்றல்
ஃத்தி — மூச்சு
மா — சுய ஒழுக்கம்
யோ — விழிப்புணர்வு
யோ — உருவாக்குதல்
நஹ — இனிமை
பரா — நல்லது
சோ — தைரியம்
த்தா — ஞானம்
யட் — சேவை
காயத்ரி மந்திரம் என்றால் என்ன..?
வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
ஓம் — தெய்வீக சக்தி, ஒலி சின்னம்
ப்பூ — உடல் விமானம்
புவஹா — நிழலிடா விமானம்
ஸ்வ — வான விமானம்
தத் — அந்த தலை தெய்வத்தின்
ஸவித்து — பிரபஞ்சம் தயையும் சக்தி
வரேன்யம் — வணங்க வேண்டும்
பர்கோ — பிரபல
தேவஸ்ய — பிரகாசமிக்க
தீமஹி — நம் த்யானம்
தியோ — அறிவினை
யா — யார்
நஹ — எங்கள்
ப்ரசோதயாத் — தெளிவுப்படுத்துங்கள்
"ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்"
நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.
இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி., சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.
காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக., உண்மையான சிந்தனை., சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை., மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். ஹிருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள்., கவலைகள் நீங்கும். குறிப்பாக., பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.
காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்
★ கம்பீரத் தோற்றம்.
★ தரமான பேச்சு.
★ வறுமை., குறை நீங்குதல்.,
★ பாதுகாப்பு வட்டம்.
★ கண்ணில் அறிவு தெரிதல்.
★ அபாயம்., தேவையற்ற சூழ்நிலை நீங்கும்.
★ நரம்புகளும்., சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்.
மேலும்.,
★ அமைதியாய் இருப்பர்.
★ நற்செயல்களில் ஈடுபடுவர்.
★ காந்த சக்தி ஆகியவை உருவாகும்.
மேலும்.,
★ வாழ்க்கையில் தடைகளை நீக்கும்.
★ மூளையை பிரகாசிக்கச் செய்யும்.
★ உள்ளுணர்வினை தெளிவாக்கும்.
★ உயர் உண்மைகள் தெரிய வரும்.
— என்றும் கூறப்படுகின்றது.
டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆனால்., இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது....
கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது.
இம்மந்திரம் முழுக்க முழுக்க ஒளியினை வணங்குவதும்., மனதின் இருளினை நீக்க வேண்டுவதாக அமைந்துள்ளதால்., இம் மந்திரம் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.
ஒரு மந்திரமோ., தியானமோ., யோகவோ., உடற்பயிற்சியோ., ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்கள் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.
ஒரு பழக்கம் உங்களை விட்டு நீங்க (உ—ம்) காபி., டீ பழக்கம் போன்றவை நீங்க 40 நாட்கள் ஆகும்.
த்யானமோ., மந்திரமோ அது பழக்கமாக ஆரம்பிக்கும் பொழுது அது உங்களுக்கு கை கூடி வர., பழக்கப்பட 90 நாட்கள் ஆகும்.
120 நாட்களில் புதுப்பழக்கம் நன்கு பழகி விடும்.
120 நாட்களில் கை விட்ட பழக்கமும் நம்மிடம் நன்கு நீங்கி விடும்.
1000 நாட்களில் நீங்கள் செய்யும் சாதனையோ., கடைப்பிடிக்கும் பழக்கமோ., அதற்கு நீங்கள் மாஸ்டர் ஆகி விடுவீர்கள். (உ—ம்) தொடர்ந்து நீங்கள் 1000 நாட்கள் காலை 4 மணிக்கு எழுந்தால்., வாழ்நாள் முழுவதும் அவ்வாறே செய்வர்.
★ மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.
★ ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.
★ 11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும்., தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும்., சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.
★ 22 நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும்., தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ., ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.
★ 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.
★ 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் "க்ரே" பகுதியில் (Grey Matter) மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி., பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.
★ இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம்., மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர்.
— மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் விஞ்ஞான ஆய்வு முடிவுகள் இல்லை. என்றாலும்,, பல அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன.
மந்திரம் சொல்வதற்கென சில முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
★ காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்....
★ கிழக்கு முகமாக அமருங்கள்.
★ ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.
★ மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்.
மகாத்மா காந்தி அவர்கள். அவர்களது "இயற்கை வைத்தியம்" என்ற புத்தகத்தில் "ஒரு மருத்துவரின் கடமை நோயாளியின் உடலுக்கு கவனம் செலுத்துவது மட்டுமல்ல. அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மந்திரங்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள்.....
★ மகாத்மா காந்தி அவர்கள்., "ராம" நாமத்தினை பரிந்துரைக்கின்றார். மேலும் "ராம" நாமம் அனைத்திற்கும் தீர்வு என்று குறிப்பிடுகின்றார். இந்த நாமத்தினை சொல்பவர்கள் சிறிய முயற்சியிலேயே அரிய செயல்களை சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"ரா" என்பது "ஓம் நமோ நாராயணா என்பதிலிருந்தும், "ம" என்பது "ஓம் நம சிவாய" என்பதிலிருந்தும் சேர்க்கப்பட்டதால்., இரட்டிப்பு பலன் என்றும் கூறப்படுகின்றது.
★ கந்த ஷஷ்டி கவசத்தில் கூட "ரஹன பவச ரரரர., ரிஹண பவச ரிரிரிரி" என சொல்லப்படுகின்றது. "ரா" என்ற எழுத்தும் "ம" என்ற எழுத்தும் உச்சரிக்கப்படும் பொழுது உடலில் ஏற்படும் அதிர்வுகள் அவரது உடல் நலத்தினையும்., மன நலத்தினையும் காப்பதாக விளக்கப்படுகின்றது. ஆக., மந்திரங்களும் அமிர்த மருந்தே என்பதை அறிவோமாக.சிவம் சுபம்...சகலமும் சுபமாகும்....சிவ சித்தர்களின் ஆசிகளுடன் சுப மங்கள தீர்க்க ஐசுவர்ங்களை பெறுக..

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...