Thursday, November 23, 2017

♥பெற்றவர்களை எப்படி மதித்து, சந்தோஷப்படுத்துவது???

1 ) அவர்கள் முன்னால் போனை உபயோகப்படுத்தாதீர்கள். தூர வைத்து விடுங்கள்.
2) அவர்கள் சொல்வதை கவனியுங்கள்.
3) அவர்கள் கருத்தை சரியாக இருந்தால் ஆமோதியுங்கள்.
4) அவர்களுடன் அடிக்கடி உரையாடி மகிழுங்கள்,, பாராட்டுங்கள்.
5) நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். கெட்ட விஷயங்களை தவிர்த்துவிடுங்கள்
6) அவர்கள் சொன்னகதையையோ, அனுபவங்களையோ மீண்டும்சொன்னால், முதலில் கேட்பது போல் பாவனை செய்யுங்கள்.
7) அவர்கள்பேசும் போது குறுக்கே பேசாதீர்கள்.
8) குழந்தைகளை அவர்களோடு பழகுவதற்கு ஊக்கப்படுத்துங்கள்.
9) அவர்களுடைய அறிவுரைக்கு முன்னுரிமை கொடுங்கள்.
10) அவர்கள் முன் உங்கள் குரலை உயர்த்தாதீர்கள்.
11) நடக்கும் போது அவர்களுக்கு முன்னால் நீங்கள் செல்லாதீர்கள்.
12) அவர்கள் சாப்பிட்ட பிறகு நீங்கள் உணவருந்துங்கள். அல்லது அவர்களோடு சேர்ந்து உணவருந்துங்கள்
13) அவர்கள் முன்னால் கால் மேல் கால் போட்டு அமராதீர்கள்
14) அவர்களை யாராவது தவறாக பேசினால் நீங்களும் அப்படியே பேசாதீர்கள்
15) அவர்கள் முன்னால் விருப்பமில்லாமல் அமர்ந்திருப்பது போல் இருக்காதீர்கள்
16) அவர்களுடைய இயலாமையையோ, குறைகளையோ கண்டு சிரிக்காதீர்கள்.
17) அவர்கள் கேட்பதற்கு முன்னாலேயே தேவையானதை நீங்களே பார்த்து செய்து விடுங்கள்.
18) அவர்கள் விரும்பினால், செல்லமாக அவர்கள் பெயர் சொல்லி அழையுங்கள்.
19) அவர்கள்தான் உங்களுக்கு முக்கியம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துங்கள்.
20) அவர்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
அவர்களை பொக்கிஷம் போல பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் மறைந்த பிறகு புலம்பி பிரயோசனமில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...