Sunday, November 19, 2017

“சின்னக்குயில்” சித்ரா.

“சின்னக்குயில்” என்று அழைக்கப்படும் கே.எஸ் சித்ரா, 1963 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில், கிருஷ்ணன், சாந்தகுமாரி தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர். இவருடைய தந்தை வானொலியில் புகழ்பெற்ற பாடகராகவும், தாயார் சாந்தகுமாரி வீணைக் கலையில் சிறந்தவராகவும் விளங்கியதாள், சித்ராவும் சிறுவயதிலேயே தனக்கென்று தனித் திறமையை வளர்த்துக்கொண்டார். தன்னுடைய ஐந்து வயதிலேயே அகில இந்திய வானொலியில் சங்கீதத்தில் சிலவரிகள் பாடியாவர், பெற்றோரின் உதவியால் சங்கீதம் மற்றும் இசைப் பயிற்சிகளைக் கற்று, இசைத் துறையில் பி.ஏ இளங்கலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றார். பிறகு முதுகலைப் படிப்பை தொடர்ந்து இசைத் துறையில் எம்.ஏ பட்டம் பெற்றார். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுதே தெய்வீகக் குரலால் இசையுலகில் புகழ்பெற்று விளங்கும் கே. ஜே. யேசுதாசுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்ற அவர், 1979 ஆம் ஆண்டு எம்.ஜி ராதாகிருஷ்ணன் மூலம் மலையாளத்தில் திரைப்படப் பின்னணி பாடகியாக தன்னுடைய பயணத்தினைத் தொடங்கினார். ரவீந்திரன், ஷியாம், ஜெர்ரி அமல்தேவ், கண்ணூர் ராஜன் மற்றும் ஜான்சன் போன்ற மூத்த இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர், இசையமைப்பாளர் ரவீந்திரனின் ஆலோசனையில் திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்குக் குடி பெயர்ந்தார். இளையராஜாவின் இசையில், ‘நீ தானா அந்தக் குயில்’ திரைப்படத்தில் “பூஜைக்கேத்த பூவிது” மற்றும் “கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட” என்ற பாடல்கள் மூலம் தமிழ் திரைப் படத்துறைக்கு அறிமுகம் ஆன அவர், 1985 ஆம் ஆண்டில், ‘துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக்குயில் இசைக் கேட்டு” மற்றும் ‘ஒரு ஜீவன் அழைத்தது’ போன்ற பாடல்கள் மூலம் தமிழ் இசை நெஞ்சங்களை வெகுவாகக் கவர்ந்தார்.
Image may contain: 1 person, smiling மலையாளப் பாடகி என்றாலும், தமிழில் தன்னுடைய அற்புதமான குரலாலும், சிறந்த உச்சரிப்பாலும் ‘சிந்து பைரவி’ திரைப்படத்தில், ‘பாடறியேன் படிப்பறியேன்’ மற்றும் ‘நானொரு சிந்து காவடி சிந்து’ என்ற பாடலை பாடி, இசை ரசிகர்கள் மனதைக் கொள்ளைக் கொண்டார். மேலும், “பாடறியேன் படிப்பறியேன்” பாடலுக்காக ‘சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும்’ வென்று, புகழின் உச்சிக்கு சென்றார். பூஜைகேத்த பூவிது’, ‘துள்ளி எழுந்தது பாட்டு’, ‘ஒரு ஜீவன் அழைத்தது’, ‘நானொரு சிந்து காவடி சிந்து’, ‘பாடறியேன் படிப்பறியேன்’, ‘என்மேல் விழுந்த மழைத்துளியே’, ‘தென்கிழக்கு சீமையிலே’, ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பட்டு’, ‘ஊலலலா’, ‘கண்ணாளனே எனது கண்ணை’, ‘எங்கே எனது கவிதை’, ‘அன்பே அன்பே நீ எந்தன் பிள்ளை’, ‘ஒவ்வொரு பூக்களுமே’, ‘இன்னிசை பாடிவரும்’ போன்ற பாடல்கள் தமிழ் இசை ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாத பாடல்களாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி, ஒரியா, பஞ்சாபி எனப் பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 15,000 மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள அவர், ‘ஆறு முறை தேசிய விருதுகளும்’, ‘ஐந்து முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகளும்’, ‘பதினைந்து முறை கேரளா அரசு விருதுகளும்’, ‘ஆறு முறை ஆந்திர அரசு விருதுகளும்’, ‘நான்கு முறை தமிழக அரசு விருதுகளும்’, ‘இரண்டு முறை கர்நாடக அரசு விருதுகளும்’ 2005-ல் மத்திய அரசால் “பத்ம ஸ்ரீ” விருது, 1997-ல் தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது, 2011-ல் சத்தியபாமா பல்கலைக் கழகத்திலிருந்து ‘கௌரவ டாக்டர் பட்டம்’, 2011-ல் ஆந்திரபிரதேச அரசு கலாச்சார கவுன்சில் மூலம் ‘பாரத் ரத்னா லதா மங்கேஷ்கர் விருது, எனப் பல்வேறு விருதுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...