தினமும் நீங்கள் உங்களுக்காக 40 நிமிடங்கள் ஒதுக்குங்கள். ஏன்? எதற்கு? என்றறிய முழுதாக படிங்க
if You spend 40 minutes a day for you
ஒரு நாளைக்கு எதற்கெல்லாமோ நேரத்தை ஒதுக்கு அதில் முழு கவனம் செலுத்தி அந்த
வேலையை முடிக்கும் நீங்கள் உங்களுக்காக ஒரு 40 நிமிடங்கள் வரை செலவிட முயற்சியுங்கள். என்னது 40 நிமிடங்களா அட போங்க சார்.. எனக்கு தலைக்கு மேல 1008 வேலை இருக்கு என்று அலுத்துக் கொள்ளாதீர்.

ஆம்! பூங்காவிலோ கடற்கரையிலோ அல்லது அமைதியான சாலையி லோ அல்லது உங்களுக்கு பிடித்தமான இடத்தை தேர்வுசெய்து அங்கே
ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் (40 Minutes per day) வரை நடக்க (Walk) வேண்டும். அவ்வாறு நீங்கள் ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் வரை நடந்தால் உங்களுக்கு ஏற்பட்ட அல்லது ஏற்பட்டிருக்கும் உயர் ரத்த அழுத்த (High Blood Pressure – H BP) நோய் முற்றிலும் முடங்கிப் போகும்.

இதனால் உங்கள் ரத்த ஓட்டம் சீராக ஓடுவதால், இதயமும் சீராக இய ங்கும் மூளையும் சுறுசுறுப்பாகும். ஆரோக்கியம் மேலோங்கும். இன்னு ம் சொல்லப்போனால் ஒருவாரத்துக்கு 150நிமிட நடைப்பயிற்சி தேவை என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவா ன உடற்பயிற்சிதான் இந்த நடைபயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment