Monday, November 27, 2017

செட்டிநாடு!....


இது ஏதோ ஒரு தனி நாடு அல்ல. தமிழ்நாட்டுக்கு உள்ளே தனிப்புகழ் பெற்ற நாடு. தமிழகத்தின் பாரம்பரியக் கட்டடக் கலையைப் பாருக்குப் பறைசாற்றும் நாடு. சர்வதேச கட்டடக்கலைக்கு முன்னோடியாக திகழுகிறது இந்த செட்டி நாடு. நூறாண்டுகளை கடந்த செட்டிநாடு புராதன பங்களாக்கள் யுனெஸ்கோ மேப்பில் இடம்பிடித்துள்ளன. தமிழ் நாட்டின் தென் பகுதியில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் காரைக்குடியை மையமாகக் கொண்ட குறிப்பிட்ட சில ஊர்கள் சேர்ந்த பகுதியைச் "செட்டிநாடு" என்று அழைக்கப் படுகிறது. குறிப்பாகக் காரைக்குடி, புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட மக்கள் குடியேறிய 96 ஊர்களும் சேர்ந்து "செட்டிநாடு" என்று குறிக்கப்படுகிறது.
ஊர்கள்
இந்த ஊர்களில் காரைக்குடி, தேவகோட்டை பெரிய ஊர்கள். மேலும், கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், ஆத்தங்குடி, அரியக்குடி, கண்டரமாணிக்கம், பாகனேரி, நாட்டரசன்கோட்டை, ஒக்கூர், வேந்தன்பட்டி, பொன்னமராவதி போன்ற ஊர்களும் உள்ளன. நகரத்தார் சமூகத்தினர் வசிக்கும் இந்தப் பகுதியை, நாட்டுக்கோட்டை என்றும் அழைப்பது உண்டு.
ஆயிரம் ஜன்னல் வீடு செட்டிநாட்டில் மிகவும் பிரபலம். செட்டிநாட்டிலுள்ள வீடுகள் எல்லாம் 1875ஆம் ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டு வரை கட்டப்பெற்றதாகும். எல்லா வீடுகளுமே 80அடி முதல் 120 அடிவரை அகலமும்,160 அடி முதல் 240 அடிவரை நீளமும் கொண்டவையாக இருக்கும். வீடுகள் எல்லாம் பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேக்குமரங்களால் இழைத்துக் கட்டப்பெற்றவையாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...