விரதத்தை உபவாசம் என்று அழைப் பார்கள். விரதம் இருப்பதால் தெய் வீகத் தன்மை பெறலாம். “இறைவ னின் அருகில் செல்கிறோம்’ என் பதே உபவாசம் என்பதன் பொருளாகும்.
நாம் எந்த தெய்வத்திற்கு விர தம் இருக்கிறோமோ அந்த தெய் வத்தின் படம் அல்லது விக்கி ரகம் அல்லது கலசத்தில் ஆவா ஹனம் செய்து பூஜிப்பது என்று சில வழிகள் உண்டு. அவ்வாறு பூஜிக்கும்போது பூர்வாங்க பூஜை, ப்ரதான பூஜை, உத்தரா ங்க பூஜை, புனர் பூஜை என்று வழி முறைகள் உண்டு. அந்தந்த தெய் வத்திற்குரிய விசேஷ துதிகளைச் சொல்வதும் நன்மை தரும்.

எந்த தெய்வத்தைப் பூஜிக்கிறோமோ அந்தத் தெய்வத்திற்கு உரிய விசேஷ மலர்களாலும் நைவேத்தியங்களாலும் பூஜை செய் வது அதிக நன்மை தரும். சிலவற்றைத் தவிர்க்கவும் வேண்டும். உதாரணமாக விநாயகருக்குத் துளசி யைத் தவிர்க் கலாம். அம்பாள், விஷ் ணு போன்றவர்களுக்கு அட்சதையால் அர்ச்சிப்பதைத் தவிர்க்கலாம். சிவபெ ருமானுக்கு தாழம்பூவைத் தவிர்க்க லாம். மகாலட்சுமிக்கு தும்பைப் பூவை த்தவிர்க்கலாம். விசேஷமான பூக்கள் என்று எடுத்துக்கொண்டால் பொதுவாக எல்லா தெய்வங்களுக்கும் வாசனை யுள்ள பூக்களால் அர்ச்சிப் பதும், வாசனையற்ற பூக்களைத் தவிர்ப் பதும் நல்லது.

மேலும், தரையில் விழுந்த பூ, அழுகிய பூ, மற்றவர்கள் தலையில் சூடிய பூ, மயானத்தின் அருகே மலர்ந்த பூ, செயற்கையான பூக்கள் ஆகி யவற்றைத் தவிர்க்கலாம். பிள்ளையாருக்கு எருக்கம்பூ விசேஷ மானதாகும். துளசி மகா விஷ்ணுவுக்கு ப்ரியமான தாகும். தாமரைப்பூ மகா லட்சுமிக்கு ப்ரியமானதாகும். வில்வ தளங்கள் சிவபெருமானுக்கு விசேஷமானதாகும்.
இதேபோன்று நைவேத்தியம் என்று வரும்பொழுது விநாயக
ருக்கு கொழுக்கட்டை, துர்க்கைக்குத் தேன், அனு மனுக்கு வடை மாலை, விஷ்ணுவுக்கு சர்க் கரைப் பொங்கல், காளிக்கு திராட்சை ரசம், அம்பாளுக்கு சித்ரான்னங்கள், சந்தான கோபால கிருஷ்ணரு க்கு பால் பாயசம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் முடிந்தவரை நம் சக்திக் கேற்ப விரதத்தையும், பூஜையையும், நைவேத்தி யம் செய்வதையும் கடைப்பிடிக்க லாம்.
No comments:
Post a Comment