Thursday, November 16, 2017

ராஜாவோடு சிலகாலம் பணிபுரிந்த ரஹ்மானுக்கு இது தெரியாமலும் இல்லை.

எண்பதுகளில், தொண்ணுறுகளில் வருடத்திற்கு நாற்பது ஐம்பது படங்களுக்கு எல்லாம் இளையராஜா இசையமைக்க, நீங்கள் தேர்வு செய்து இசையமைக்கிறீர்களே என்று ரஹ்மானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "அது தன்னோட தேர்வு முறை" என்கிற பதிலையோ, வேறு நியாயமான பதிலையோ சொல்லியிருக்கலாம்.

மாறாக "அதில் எத்தனை ஹிட்டாகுது" என்பதை போன்ற ஒரு பதிலை சொல்லியிருக்கிறார்.
இது இணைய உலகம், கூகிளில் தட்டினால் தரவுகள் வந்து மணல்லாரி போல கொட்டிவிட்டு போகும் கால கட்டம்.
இளையாராஜா ஆண்டுவாரியாக இசையமைக்கப்பட்ட படங்களின் வரிசைகளை பார்த்தால் பெரும் பிரமிப்பில் இருந்து நம்மால் மீள முடியாது, இந்தியாவில் மட்டுமில்லை, உலகத்திலேயே ஒரு கம்போஸர் இத்தனை variety யான ஜானர்களை ஒரே வருடத்தில் செய்ததில்லை. மேற்கத்திய படங்களில் பெரும்பாலும் பாடல்கள் இல்லை, ஆனால் பாடல்கள் நம் பண்பாட்டின் அங்கம், பாடல்களோடு சேர்த்து பின்னணி இசையும் என இவருக்கு எப்படி சாத்தியமானது என்பது அசாதரணமான விவகாரம்.
ஒரு வருடத்தில் 48 , 50 , 55 படங்கள் என்று மிரட்டியிருக்கிறார், அதில் எத்தனை படங்கள் ஹிட் என்பதை தாண்டி அந்த பாடல்களுக்காகவே படம் ஓடியது வேறு கதை.
"தளபதி, ஈரமான ரோஜாவே, கோபுர வாசலிலே, கும்பக்கரை தங்கையா, குணா, தர்மதுரை, என் ராசாவின் மனசிலே, இதயம், சின்னத் தம்பி, பிரம்மா, தாலாட்டு கேட்குதம்மா, புதுநெல்லு புதுநாத்து, கேப்டன் பிரபாகரன்"
இவையெல்லாம் ஒரே வருடத்தில் வந்த படங்கள், ஒவ்வொரு வருடமும் இதே போல பல சூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட வரிசைகளை நாம் அடக்கலாம்.
தளபதி ஒரு range என்றால் புதுநெல்லு புதுநாத்து அதற்கு முற்றிலும் வேறொரு range .
back to back எப்படி ஒரு மனிதனால் இத்தனை variation கொடுக்கமுடிகிறது என்பதில் தான் இளையராஜாவின் மேதமை ஒளிந்து கிடக்கிறது.
மணிரத்னம், இளையராஜா, ரஜினி போன்ற ஜாம்பவான்கள் இணைந்த மெகா ஹிட் கூட்டணிக்கு எந்த வகையிலும் குறைவில்லாத தரமான இசையை "என் ராசாவின் மனசிலே" மூலம் ராஜ்கிரண் என்கிற முரட்டு புது வரவுக்கு எந்தவித பாகுபாடும், ஒரவஞ்சனையும் இல்லாமல் ராஜாவால் கொடுக்க முடிந்தது.
ரஹ்மானின் தொழில் நுட்பம் செய்ய முடியாததை, கோபத்தில் வேக வேகமாக எழுதும் கண்டன கடிதாசையை போல இளையராஜா தன் படத்திற்கான இசையை எழுதி தள்ளினார், அதனாலவே இது சாத்தியமானது என்கிற உண்மையை ரஹ்மான் எந்தவித புன்முறுவலும் இல்லாமல் ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.
தேவர்மகன், சிங்காரவேலன், மன்னன், ஆவாரம்பூ, செம்பருத்தி, மீரா, நாடோடி தென்றல், பாண்டியன், செந்தமிழ்ப்பாட்டு எல்லாம் ஒரே வருடத்தில் வந்த படங்கள் என்பதனை நம்புவதற்கு,
அப்படியா!!! என்கிற ஒரு ஆச்சரியக்குறி போதாது, அத்தனையும் பட்டிதொட்டி எங்கும் ஹிட்.
அதில் சூப்பர் speciality விஷயம் என்னவெனில், ராஜா தன் படங்களுக்குள் பேதம் பார்த்து இசையமைத்தது இல்லை என்பது திரையுலகம் அறிந்தது.
காலை எட்டு மணிக்கு ஒரு படத்தின் பாடல் ரிக்கார்டிங் என்றால், போஸ்ட் lunch இன்னொரு படத்தின் ரீ ரிக்கார்டிங்.
இப்படியாக கழிந்த ராஜாவின் பயணத்தை இதுவரை யாரும் தொட்டதுமில்லை, தொடப்போவதுமில்லை, அதை யாரவது நிகழ்த்தி காட்டும்வரை இது ரிக்கார்ட் ஆகவே இருக்கும்.
ராஜாவோடு சிலகாலம் பணிபுரிந்த ரஹ்மானுக்கு இது தெரியாமலும் இல்லை.
தமிழ்நாடு கடந்து ஆஸ்கருக்கு போய் இந்திய திரையிசை வரலாற்றில் முக்கிய அந்தஸ்தை எட்டியிருக்கும் ரஹ்மானுக்கு இந்த உண்மையை ஒப்புக்கொள்வதால் ஒரு பாதகமும் வந்துவிட போவதில்லை.
ஒப்புக்கொள்ளுங்கள் ரஹ்மான், உங்கள் midi கீபோர்டுகளும், mac கம்ப்யூட்டர்களும் செய்ய முடியாத துரிதத்தை, ராஜா ஒரு பென்சில், பேப்பரில் நிகழ்த்தி காட்டினார்.
இந்த பதிவை நான் எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில், ராஜா நாலு பாடல்களுக்கான இசை கோர்வைகளை எழுதவல்லவர் என்பதை ஒப்புக்கொள்வதில் உங்களுக்கு ஏன் இத்தனை தயக்கம்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...