Wednesday, November 15, 2017

கட்சியில் சேர கமல்ஹாசன் பகிரங்க‌ அழைப்பு..

கட்சியில் சேர கமல்ஹாசன் பகிரங்க‌ அழைப்பு

நடிகர் கமல்ஹாசன் அண்மைக் காலமாக அரசியல் ரீதியிலான டிவிட்டுகளை
வெளியிட்டு வருகிறார். டிவிட்டர் வாயிலாக அரசுகளையும் அரசியல் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வரும் அதே வேளையில் ரசிகர்களை அண்மையில் இவர் சந்தித்தப்போதும் அரசியல் தொடர்பான அனல்பறக்கும் எதிர் கருத்துக்களை க் கூறியும் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளம்பி வருகிறார்.
நடிகர் கமல்ஹாசனை தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அவ்வ ப்போது சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாச ன் தனது டிவிட்டர் பக்கத்தில் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதாவது அகில இந்திய விவசாயிகள் கட்சி வரை வந்திருப்பது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று ட்விட்டரில்,
’அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமு ம்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்’
என்று பதிவிட்டு விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...