ஜம்மு - காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 - ஏ பிரிவுகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்ததன் மூலம் முடிவுக்கு வந்தன. இதன் மூலம் ஒரே நாடு; ஒரே அரசியல் சட்டம் என்பது அமலாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சரித்திர சாதனையாக இது கருதப்படுகிறது. இதனால் பிரிவினைவாத செயல்களுக்கு அந்த மாநிலத்தில் இடமில்லாமல் போக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது.
மத்தியில் இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் உட்பட எந்த அரசுகளும் செய்யாத சரித்திர சாதனையை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேற்று நிகழ்த்தி காட்டியிருக்கிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு 70 ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதியால் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகளுக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகளை நீக்கிய ஜனாதிபதியின் உத்தரவை உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்தார்.
அதுபோல ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்ட மசோதாக்களையும் உடனடியாக சபையில் தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். ஜம்மு - காஷ்மீருக்கு சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேச அந்தஸ்தும் லடாக்கிற்கு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேச அந்தஸ்தும் வழங்கப்படும் என அறிவித்தார். அதை ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களும் அவர்களுக்கு ஆதரவான சில எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தொடர்ந்து நடந்த விவாதங்களில் காரசாரமாக எதிர்த்தனர்.
மாலை வரை நீடித்த விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆவேசமாக பதில் அளித்தார். ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த இதை விட வேறு வழியில்லை. தேவைப்பட்டால் எதிர்வரும் காலத்தில் அமைதி திரும்பினால் ஜம்மு - காஷ்மீருக்கு சட்டசபை அந்தஸ்து வழங்கப்படும் என்றார். அதன் பின் இதுவரை அந்த மாநிலத்தில் அமலாகாமல் இருந்த 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மற்றும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதாவும் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டன.
துவக்கத்தில் குரல் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது; எதிர்க்கட்சிகள் ஏற்காததால் 'டிவிஷன்' ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதாவுக்கு ஆதரவாக 125 ஓட்டுகளும் எதிராக 61 ஓட்டுகளும் பதிவாகின. இதையடுத்து ராஜ்யசபாவில் அந்த மசோதாக்கள் நிறைவேறியதாக சபைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். அந்த இரு மசோதாக்களும் லோக்சபாவில் நேற்று மாலையே தாக்கல் செய்யப்பட்டன; அவற்றின் மீது இன்று விவாதம் நடக்கிறது. அங்கு ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் எவ்வித சிக்கலும் இன்றி நிறைவேறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின் அந்த மசோதாக்கள் சட்டங்களாகும்.
''ஜம்மு - காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததற்கு காரணம் அந்த மாநிலத்தில் நிலவும் வறுமை லஞ்சம் - ஊழல் போன்றவற்றை அழிப்பதற்காகத் தான். வளர்ச்சி இன்றி இருக்கும் அந்த மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்வதற்கு தான்'' என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். ராஜ்யசபாவில் நேற்று அவர் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாலும் அந்த மாநிலத்திற்கு இருந்த சிறப்பு அந்தஸ்துகள் நீக்கப்பட்டுள்ளதாலும் போர்க்களமாக மாறும் என சில உறுப்பினர்கள் கூறினார். அவ்வாறு நடக்காது; பூமியின் சொர்க்கமாக திகழும் அந்த பகுதி அவ்வாறே தொடரும். அந்த மாநிலத்தில் அமைதி நிலவினால் தேவைப்படும் சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும். அந்த மாநிலத்தில் அமைதி நிலவுவதற்கு அங்கு இருந்த 370வது பிரிவு தான் தடையாக இருந்தது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகள் அங்கு இருக்கும் வரை அந்த மாநிலத்திலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது. நாட்டின் பிற பகுதிகளில் உள்ள சட்டங்கள் அந்த மாநிலத்தில் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் வளர்ச்சி பாதித்து லஞ்சம் ஊழல் அதிகரித்து விட்டது. 70 ஆண்டுகளாக அந்த மாநிலத்தை ஆளும் மூன்று குடும்பங்களால் ஜனநாயகம் அங்கு தளைக்க முடியாமல் போயிற்று; வறுமை அதிகரித்து விட்டது. நாட்டின் பிற பகுதிகளில் விற்கப்படும் சிமென்டின் விலையை விட ஜம்மு - காஷ்மீரில் கூடுதலாக 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிற மாநிலத்தவர் அங்கு சொத்துகளை வாங்க தடை இருப்பதால் அந்த மாநிலத்தில் சுற்றுலா மேம்படவில்லை; எந்த தொழிற்சாலைகளையும் அங்கு துவக்க முடியவில்லை.ஜம்மு - காஷ்மீரில் சுகாதார நிலையும் மிக மோசமாக உள்ளது. அதுபோலத் தான் கல்வியும். அதற்கு காரணம் 370வது பிரிவு தான். கல்வி கற்பது அடிப்படை உரிமை என்பது அங்கு மறுக்கப்படுகிறது. கல்வியின் பலன்களை அந்த மாநில குழந்தைகள் அனுபவிக்க முடியாத நிலை காணப்படுகிறது. அங்கு 370வது பிரிவு ரத்தாகியுள்ளதால் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அந்த மாநிலம் உருவாகியுள்ளது. பயங்கரவாதத்தால் அந்த மாநிலத்தில் 41 ஆயிரத்து 400 பேர் இறந்துள்ளனர். யாருடைய கொள்கையால் அந்த மரணங்கள் ஏற்பட்டன? மேலும் 370வது பிரிவு தற்காலிகமாக வழங்கப்பட்டது தான். அந்த தற்காலிக பிரிவை எத்தனை ஆண்டுகளுக்கு தொடர்வது? இவ்வாறு பேசினார்.

'வறுமை லஞ்சத்தை ஒழிக்கவே ஜம்மு - காஷ்மீர் பிரிக்கப்பட்டது'

No comments:
Post a Comment