Friday, August 30, 2019

ஸ்டாலின் தன்நிலை அறிந்து பேச வேண்டும் ..

1969-ஆம் ஆண்டு திரு.கருணாநிதி முதல்வராகும் போது அவரின் வயதோ 45-தான்...
அப்போது எடப்பாடியாரின் வயதோ வெறும்15-தான்..
எடப்பாடியார் பிறந்தது 12 மார்ச் 1954...
எண்ணை தேய்த்து, வகிடெடுத்து தலை சீவி, நெற்றியில் திருநீர் இட்டு, அரைக்கால் சட்டையுடன் 'சிலுவம்பாளையம்' எனும் பட்டிக்காட்டில், அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சிறுவன் பழனிசாமிக்கு அப்போது தெரியாது, தான் பிற்காலத்தில் இந்த நாட்டின் முதல்வராக வருவோம் என்று..
அதே ஆண்டு தமிழக முதல்வர் திரு.கருணாநிதியின் மகன் திரு.ஸ்டாலின் 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பார்..
அவர் பிறந்ததோ 01 மார்ச் 1953...
இவர்கள் இருவருக்குமான வயது வேறுபாடு... ஓர் ஆண்டு மட்டுமே..‌
ஆனால் பாருங்கள்...
மிக முக்கிய திராவிட இயக்க தலைவரான திரு.மு.கருணாநிதியின் மகன் திரு.ஸ்டாலினை இந்த தமிழகத்தின் முதல்வராக வர அனுமதிக்காத இந்த வரலாறுதான்...
சேலம் மாவட்டத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒரு வேளாண் குடிமகனாக பிறந்த, கருப்பகவுண்டரின் மகனான பழனிசாமியை இந்த தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுத்தது...
1984 சட்டசமன்ற தேர்தலில் 'திமுக தலைவர், முன்னால் முதல்வரின் மகன்' என்ற சிறப்பு அந்தஸ்தில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டபோது..
பக்கத்து ஊர் மக்களுக்குக்கூட தெரிந்திராத சிலுவம்பாளையம் அஇஅதிமுக கிளைச் கழக செயலாளராக இருந்தவர்தான் திரு.பழனிசாமி.
ஸ்டாலினை அரியணை ஏற்ற அவரது தந்தையார் திரு.கருணாநிதி திரு.வைகோவுக்கு குழி வெட்டிக்கொண்டிருந்த காலகட்டம் அது..
1989ல் இரு அணிகளாக பிளவு பட்டிருந்த அஇஅதிமுக-வில், ஜெ அணியில் சேவல் சின்னத்தில் நின்று முதல்முறையாக வெற்றி பெற்றார் பழனிசாமி.
சிலுவம்பாளையம் பழனிசாமியாக இருந்த எடப்பாடியார் அதன்பின்புதான் எடப்பாடி கே. பழனிசாமி எம்.எல்.ஏ.வாக உருமாறியிருந்தார்...
மீண்டும் 1991 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் திரு.பழனிசாமி வெற்றி பெற்ற போது திரு.மு.கஸ்டாலின் திமுக-வின் பட்டத்து இளவரசர்.
1998ல் எடப்பாடி பழனிசாமி திருச்செங்கோடு பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.
மு.க.ஸ்டாலினின் அப்போது சென்னை மேயர். அவரது தந்தை தமிழக முதல்வர்.
2006 - 2009 காலகட்டங்களில் மு.க.ஸ்டாலின் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர்.
2009ல் ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரியை மத்திய கேபினட் அமைச்சராக்கும்போது , அப்போது மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக்கினார் திரு.கருணாநிதி..
2011ல் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தேமுதிகவிடம் பறிகொடுத்துவிட்டு சட்டசபையின் மூன்றாவது கட்சியாக இருந்தபோது இன்றைய முதல்வர் அன்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.
2016ல் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகும்போது எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அமைச்சர்.
ஆக.. அதிமுகவின் ஆலம் விருட்சமாக இருந்த மாண்புமிகு இதயதெய்வம் மாண்புமிகு #அம்மா அவர்கள் மறைந்தபோதும் கூட, எங்கோ ஒரு மூலையில் எளிமையாக இருந்த 'திரு.எடப்பாடியார் முதல்வராவார்' என்று யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்...
ஆனால் அனைத்தும் நடந்தேறியது...
இப்போது தமிழகத்தின் மிகச்சிறந்த முதல்வராக திகழும் மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆளுமை மிகவும் மெச்சத்தக்கது..
இதான் வரலாறு...‌
இதற்கு இடையில் நடந்ததொல்லாம் காலத்தின் கட்டாயம்...
இதுதான் அஇஅதிமுகாவின் வெற்றிக்கு மூல காரணம்...
2021-லும் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான அஇஅதிமுக-வின் ஆட்சியே தொடரும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...