Friday, August 23, 2019

குழந்தை பிறந்தவுடன் அழுவதற்கான அறிவியல் காரணங்கள் எவை?



குழந்தைகள் பிறந்தவுடன் அழுவதற்கான உண்மையான காரணம் என்னவெனில்,
வயிற்றில் வளரும் குழந்தை சுவாசிப்பதில்லை. அதனால் குழந்தையின் மூச்சுக்குழலானது சுருங்கி உட்புறமாக ஒட்டிய வண்ணம் இருக்கும். ஏனெனில் சுவாச மண்டலத்தில் வெற்றிடத்தின் காரணமாக அழுத்தம் ஏற்பட்டு அவை ஒட்டிக்கொள்ளும்.
உதாரணம்: ஒரு உறிஞ்சு குழல் உங்கள் வாயில் வைத்து மறுமுனையை மூடி காற்றை உறிஞ்சினால் குழல் உட்புறம் சுருங்கி உட்புற சுவர் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்வதைக் காணலாம். அதே விளைவுதான் இங்கும்.
கிட்டத்தட்ட 7 மாதங்களாக ஒட்டிக்கொண்ட மூச்சுக்குழல்கள் வயிற்றில் இருந்து வெளிவந்ததும் வெளிப்புற காற்றின் அழுத்தம் காரணமாக, (மூச்சுக்குழல் மற்றும் நுரையீரல்கள் கொண்டுள்ள அழுத்தத்தை விட வெளிப்புற அழுத்தம் அதிகம்) காற்றானது மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்குள் நுழைய முற்படும். (காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு உயர் அழுத்த இடத்திலிருந்து காற்று பாயும்) அதனால் ஒட்டிக்கொண்ட மூச்சுக்குழலின் சுவர்களும் நுரையீரலும் விரியும். 7 மாதமாக தொடர்ந்து ஒரே நிலையில் இருந்த தசைகள் திடீரென்று மாற்றத்திற்கு உட்படுவதால், அந்தத் தசைகள் அதிக வலியை ஏற்படுத்தும். அதனாலேயே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன.
நீங்கள் நன்றாக கவனித்தால் சுவாசிக்காத குழந்தை அழாது. சுவாசும் துவங்கும் போதே அழும்.
குறிப்பு: காற்று உள்ளே போனதும் வெளிப்புற அழுத்தத்தை விட உட்புற அழுத்தம், அதிகமாவதால் உள்ளிருக்கும் காற்றானது வெளியேறும். வெளியேறியவுடன் மீண்டும் நுரையீரலின் காற்றழுத்தம் குறைந்துவிடும். மீண்டும் காற்று உட்புகும். இது தொடர்ந்து நடப்பதால் சுவாசம் தொடர்ந்து நடக்கிறது. இதை 'சுவாசம்' என்று நாம் கூறுகிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...