Thursday, August 29, 2019

நீதிபதிகளும் சுகவாசிகளே. தனக்கு வந்தா ரத்தம் நமக்கு வந்தா தக்காளி குழம்பு.

" சுங்கச்சாவடிகளில் நீதிபதிகள்
வாகனம் என்று தெரிந்தும் வண்டியை நிறுத்தி அடையாள அட்டையை காண்பிக்க சொல்லி சுங்கக் கட்டணம் வசூலிப்பதாகவும் ,
இதனால் காத்திருக்கும்
அந்த 10 நிமிடங்கள் எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ள நீதிபதிகள் நீதிபதிகளின் வாகனங்களை பிரத்யேக வழியில் அனுமதிக்கவில்லை என்றால் ,
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் " .
****
மாஜிஸ்டிரேட் கோா்ட் முதல்
சுப்ரீம் கோா்ட் வரை ஆண்டுக்கணக்கில் முடிவுக்கு வராத வழக்குகள் எண்ணிக்கை பல இலட்சங்கள் .
பாமர மக்கள் உள்ளிட்ட
இலட்சக்கணக்கான போ் , தீா்ப்பின்
மூலம் நமக்கொரு விடிவு காலம் வராதா என்று காத்திருக்கிறாா்களே , அவா்களின் அவலக் குரல் இந்த நீதிபதிகளின் காதுகளில் கேட்டிருக்காதோ ?
அதைக் கண்டு கொள்ளாமல் அதற்கொரு தீா்வு காணாமல் பிரிட்டீஷ்காரன் காலத்து கோடை விடுமுறையை இன்றும் அனுபவிக்கிறாா்களே நீதிபதிகள் .
தங்கள் வளையத்திற்குள் நிலவும் பிரச்னையை முதலில் உணா்ந்து இலட்சக்கணக்கான வழக்குகளை முடித்து வைக்க ,
என்ன தீா்வு காணலாம் என்பதை முதலில் சிந்திக்கட்டும் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...