Friday, August 23, 2019

இதே மஹானுபாவர்தான்..!

வாஜ்பாய் காலத்தில் ‘என்ரான்’ என்கிற பிரசித்தி பெற்ற நிறுவனம் இந்தியாவில் மஹாராஷ்டிராவில் தன் ஆலையை நிறுவுவதற்காக முனைந்தது.
ஆனால் உள்ளூர் பிரச்னை காரணமாக அவர்களால் அந்த ஆலையை நிறுவ முடியவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையால் கோபமடைந்த என்ரான் நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் மேல் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கின்படி அவர்கள் நஷ்ட ஈடாகக் கேட்ட தொகை 38000 கோடி ரூபாய்.
வாஜ்பாய் அரசு ஹரீஷ் சால்வேயை இந்தியாவின் சார்பில் வாதிட இந்த வழக்கிற்காக நியமித்தது.
இவரைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். தற்போது இந்திய குல்பூஷன் ஜாதவிற்காக ICJ இல் வாதிட்டு ஓரளவு நல்ல பலனையும் கண்டிருப்பவர்.
இப்போது நம் என்ரான் கதையில் ஒரு திருப்பம்....
அதாவது இந்தியாவிற்கு எதிராக என்ரான் நிறுவனம் வாதிட நியமித்தது.. வேறு யாருமில்லை ஜெண்டில்மேன்.. நம் ப.சிதம்பரத்தைதான்.
நம் தேசத்திற்கு எதிராக என்ரான் நிறுவனத்திற்கு ஆதரவாக வாதிட ஒப்புக் கொண்டவர் இதே மஹானுபாவர்தான்..!
---
சில காலங்களுக்குப் பிறகு.. சோனியாவின் UPA ஆட்சியைப் பிடித்தது. ப.சிதம்பரம் கேபினெட் மினிஸ்டரானதால்.. என்ரான் கம்பெனிக்காக அவரால் வாதிட முடியாமல் போனது.
ஆனாலும் இவரே அந்த நிறுவனத்தின் லீகல் அட்வைஸராகத் தொடர்ந்தார். அதனால் தனக்கு ஏற்றபடி வழக்கையும் தன் சௌகரியத்திற்கு மாற்றவும் இவருக்கு பதவியும், அதிகாரமும், சாதுர்யமும், சந்தர்பமும் இருந்தது.
இதற்கெல்லாம் மேலாக உடனடியாக ப.சிதம்பரம் செய்த காரியங்கள்..
🚩ஹரிஷ் ஸால்வேயை என்ரான் வழக்கில் இந்தியாவிற்காக வாதிடுவதை தடுத்தார். அவர் வெளியேற்றப்பட்டார். அவருடைய இடத்திற்கு காவார் குரோஷி என்பவரை நியமித்தார்.
🚩இந்த காவார் குரோஷி யாரென்று தெரிகிறதா..? இவர் ஒரு பாகிஸ்தான் வக்கீல் தற்போது குல்தீப் ஜாதவிற்கு எதிராக ICJ(International Court of Justice (ICJ)) இல் வாதிடுபவர். இவரைத்தான் ஹரிஷ் சால்வேக்கு மாற்றாக ப.சிதம்பரம் நியமித்தார்.
🚩அந்த வழக்கின் முடிவு அனைவரும் அறிந்ததே. இந்தியா வழக்கில் தோற்றது. மீதம் சரித்திரமானது.
India ultimately lost on both counts, the case to Enron and a lot of money that was paid to Qureshi as fees.
---
காங்கிரஸ் என்னும் கட்சி நம் கற்பனைக்கு எட்டாத அளவு, நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு தீமை நிறைந்தது.

இந்தியாவில் தாங்கள்தான் எல்லாவற்றையும் இயக்குகிறோம் என்று நினைத்து வந்த கருத்துருவாக்கிகளுக்கும், லிபரல்களுக்கும், தரகுகளுக்கும் அடிவயிற்றை கலக்கி இருக்கும்... சிதம்பரம் இவை எல்லாவற்றின் மிகப்பெரிய முகம்... என்னை பொறுத்தவரை டெல்லியின் 70 ஆண்டுகளாக இருந்த லாபிகளின் கழுத்தை பிடித்துவிட்டார்கள்.
Image may contain: 1 person, eyeglasses

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...