Saturday, August 24, 2019

01.07.2002 ஆம் நாள் வாஜ்பாய் திடீரென அருண்ஜெட்லியை அழைத்தார், உங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சி வேலைக்கு செல்லுங்கள் என கட்டளையிட்டார்..
வாஜ்பாய் மந்திரிசபையில் சிறிய பதவி பிரச்சனை இருந்த நேரம் அது!உடனடியாக அருண்ஜெட்லி ராஜினாமா கடிதத்தை வாஜ்பாயிடம் கொடுத்தார்.
இந்த செய்தியை அறிந்த சகுனி பத்திரிக்கையாளர்கள் அருண்ஜெட்லி, ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு கனத்த மனதுடனும், இறுகிய முகத்துடன் வெளியே வருவார் என காத்திருந்தனர்.. ஆனால் எந்த மாற்றமும் இல்லாமல் சிரித்த முகத்துடன் மந்திரி பதவியை இழந்து வெளிவந்தார் ஜெட்லி... வாஜ்பாய் அறையிலிருந்து!
பின்னர் 1 வருடம் கட்சிப்பணியாற்றிவிட்டு மீண்டும் 29.07.2003 ல் மந்திரியானார்!
மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு திமுகவில் உள்கட்சி பூசல் வந்தபோது, கலைஞர் கருணாநிதி, அருண்ஜெட்லி அவர்களின் இந்த குணத்தை பகிரங்கமாக வாழ்த்தி அறிக்கை வெளியிட்டு, பாஜகவைப் போல திமுகவினரும் இருக்க வேண்டும் என செய்தியாளர்கள் கூட்டத்தில் பேட்டியும் கொடுத்தார்..
BJP போன்ற ஒரு சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட கட்சியின் தொண்டர் எப்படி வாழவேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருந்தார் ஜெட்லி!
வாஜ்பாய் அரசுக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் பெரிதும் முயன்று காத்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...