Friday, August 23, 2019

சிதம்பரத்தின் பாவக் கணக்குகள்.........😧😦😦😦😦

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு மட்டுமல்ல, சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பிற வழக்குகள் குறித்து விளக்கமாக பார்க்கலாம்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தொடர்புள்ளதாக கருதப்படும் வழக்குகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
ரூ.3600 கோடி ஒப்பந்த மதிப்புடைய எர்செல் மேக்சிஸ் வழக்கில் அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறுவதற்காக சில சட்டவிரோத விஷயங்களை ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருக்கிறது.
இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு என இரு அமைப்புகளும் தனித்தனியாக சிதம்பரம் மற்றும் அவரது மகனுக்கு எதிராக விசாரணை நடத்தி வருகின்றன.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுக்கு தான் அனுமதி அளிக்க அதிகாரம் இருக்கும் நிலையில் எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுக்கள் நிலுவையில் உள்ளன
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 111 விமானங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
42 ஏர்பஸ் விமானங்களும், 24 போயிங் விமானங்களும் வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், 111 விமானங்கள் தேவைக்கும் அதிகமாக வாங்கப்பட்டது.
கடந்த 2009-ம் ஆண்டு அதிகாரமிக்க அமைச்சரவைக் குழுவின் தலைவராக இருந்த சிதம்பரம் தான் விமானங்கள் கொள்முதல் குறித்து முடிவு செய்தார்.
நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் இந்த விஷயத்தில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டார் என்று முதல்தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஆகஸ்ட்23 -ம் தேதி ஆஜராக அமலாக்கப்பிரிவு சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பி இருந்தது.
ஆனால், தற்போது சிபிஐ கைது செய்துள்ளதால், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை முடிவுக்கு பிறகு, இந்த வழக்கில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு சிதம்பரம் ஆஜராக வேண்டியிருக்கும்.
ப.சிதம்பரம், அவரின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் மீது கறுப்பு பணம் மற்றும் வெளியிடப்படாத வெளிநாட்டு வருவாய் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வருமானவரித்துறை நோட்டீஸ் அளித்திருந்தது.
இந்த நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரத்து செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வருமானவரித்துறை மேல்முறையீடு செய்து அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் சிதம்பரத்தின் உறவினர் ஒருவரும் சேர்ந்து தமிழகத்தில் தனியார் உணவகத்திற்காக நிலம் கையப்படுத்தியதில் முறைகேடு என்ற புகார் நிலுவையில் உள்ளது.
சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது நடந்ததாக சொல்லப்படும் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, இஷ்ரத் ஜகான் வழக்கில் பிரமாணப் பத்திரத்தை திருத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கு தற்போது டெல்லி போலீஸார் விசாரணையில் நிலுவையில் இருக்கிறது. சிபிஐ கையில் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
சாரதா சிட்பண்ட் வழக்கில் ரூ.1.4 கோடி லஞ்சம் வாங்கினார் என்று சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டது. ஆனால், நளினி சிதம்பரத்தை கைது செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தடை விதித்துள்ளது.
சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ தொடர்ந்து நடத்திவருகிறது........
பண்றதெல்லாம் பண்ணிட்டு எதுவுமே பண்ணலண்ணு ஊமக்கோட்டான் மாதிரி இருந்தா விட்டுடுவாங்களா????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...