Monday, August 26, 2019

எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம்? 

🌷 வினை தீர்க்கும் விநாயக பெருமானை, விநாயகர் சதுர்த்தி அன்று விரதமிருந்து, அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று, அவருக்குப் பிடித்த அருகம்புல், கொழுக்கட்டை ஆகிய பொருட்களை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், விநாயகரின் பரிபு ரண அருள் கிடைக்கும்.
🌷 விநாயக சதுர்த்தியன்று, ஒவ்வொருவரும் அவரவர் ராசிக்கு ஏற்ற அபிஷேகப் பொருட்களால் விநாயகரை அபிஷேகம் செய்து வழிபட, விநாயகரின் பரிபு ரணமான அருள் கிடைக்கும். அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
🍀 மேஷ ராசிக்காரர்கள் மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் சித்தியாகும்.
🍀 ரிஷப ராசிக்காரர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
🍀 மிதுன ராசிக்காரர்கள் எலுமிச்சைச்சாறினால் அபிஷேகம் செய்து வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும்.
🍀 கடக ராசிக்காரர்கள் பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் இன்னல்கள் நீங்கும்.
🍀 சிம்ம ராசிக்காரர்கள் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், விருப்பங்கள் நிறைவேறும்.
🍀 கன்னி ராசிக்காரர்கள் சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பகை விலகும்.
🍀 துலாம் ராசிக்காரர்கள் தேனால் அபிஷேகம் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும்.
🍀 விருச்சக ராசிக்காரர்கள் இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பு ர்வ ஜென்ம பாவங்கள் விலகும்.
🍀 தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி மற்றும் தேனால் அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
🍀 மகர ராசிக்காரர்கள் சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் உயர் பதவிகள் கிடைக்கும்.
🍀 கும்ப ராசிக்காரர்கள் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும்.
🍀 மீன ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வாக்கு அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...