Friday, August 30, 2019

ரூ. 2,000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்?



நடப்பு நிதியாண்டில், 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்த, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, 2016, நவம்பர், 8ல், புழக்கத்தில் இருந்த, 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தார். இதையடுத்து, புதிய, 500 ரூபாய் மற்றும், 2,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. 

ஆனால், தற்போது, 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளது. 2017- - 18 நிதியாண்டில், 6 லட்சத்து, 72 ஆயிரத்து, 600 கோடி அளவிற்கு இருந்த, 2000 ரூபாய் நோட்டின் புழக்கம், 2018- -19 ம் ஆண்டில், 6 லட்சத்து, 58 ஆயிரத்து, 200 கோடியாக குறைந்துள்ளது.மேலும், 2017 - 18ம் ஆண்டில், 336.30 கோடி எண்ணிக்கையிலான, 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இது, 2018 - 19ம் நிதியாண்டில், 320.91 கோடியாக குறைந்துள்ளது, 

அதே நேரத்தில், மற்ற ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது, குறிப்பாக, 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் மிகவும் அதிகரித்துள்ளது.நாட்டில், இப்போது புழக்கத்தில் உள்ள, 21.1 லட்சம் கோடி நோட்டுகளில், 51 சதவீதத்தை, 500 ரூபாய் நோட்டுகள் பிடித்துள்ளன, இப்போது, 2,151 கோடி எண்ணிக்கையிலான, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதே போல, 100 ரூபாய் நோட்டுகள், 2,007 கோடி நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. 

இதனை தொடர்ந்து நடப்பு நிதியாண்டில். 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்த, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
 ரூ. 2,000 நோட்டு, அச்சடிப்பு ,நிறுத்தம்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...