Saturday, August 24, 2019

நம்பப்படுகிறது.

ஒரு பைத்தியகாரன் மீது கருணை கொண்ட சீடன், அவரை தனது மடலாயத்து குருவிடம் அழைத்து சென்றான்.
குரு சொன்னார்,
"அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள்.
உணவை, நீரை அருகில் வையுங்கள்
ஆனால் உண்ணும் படி கூறவும் வேண்டாம்.
பசித்தால் அவரே எடுத்து சாப்பிடுவார். அவருக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம், நீங்கள் யாரும் கண்டு கொள்ளவும் வேண்டாம்." என்றார்.
அவர் கத்துவார், கற்களை வீசுவார்.
ஆனால் அவரை யாரும் அங்கு கண்டு கொள்ளவில்லை.
சீடர்கள் அவரவர் வேலைகளை பார்த்தனர்.
அந்த பைத்தியகாரருக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது. எதிர்ப்பவர் இல்லாததால்!
நாட்கள் நகர்ந்தன,
ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியகாரன், "எனக்கும் தியானம் சொல்லி தருவீர்களா..?" என்று கேட்டான்.
இது இன்றும் திபெத்திய புத்தமடலாயங்களில் நடக்கும் சிகிச்சை முறை.
எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் அவர் அமையாகிவிடுகிறார் என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள்.
உண்மைதானே மற்றவர் பார்க்கவில்லை என்றால் பைத்தியகாரதனங்கள் வளர்ந்து கொண்டே போகாது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...