Sunday, August 25, 2019

எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த திசையில் வீடு கட்டலாம் தெரியுமா?


நம் வாழ் நாளில் சொந்த வீடு கட்டி, இந்த சமுதாயம் போற்றும் படி சீரும் சிறப்புமாக வாழ தான் அனைவரும் ஆசை படுவார்கள். வீட்டை கட்டிபார் , கல்யாணம் பண்ணிப்பார் என்ற வார்த்தையை நாம் கேள்விப் பட்டிருப்போம்
அதாவது ஒரு மனித வாழ்கையில் ஒரு வீட்டை கட்டி பார்ப்பது என்பது எந்த அளவிற்கு முக்கியம் என்பது வீட்டை கட்டியவர்களுக்கே தெரியும்.
ஆசை அசையாய் வீட்டை கட்டினால், யாரோ ஒருவர் வந்து வாஸ்து சரியில்லையே என வாய் திறந்தால் போதும், நம் மனம் உடைந்து போகும். உடனே வீட்டின் வாசல்கால் திசையை மாற்றுவது உள்ளிட்ட அனைத்தும் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரத்தொடங்கும்.
ஏன் இந்த பிரச்னை ? வீடு கட்டுவதற்கு முன்னதாகவே எந்த ராசிக் காரர்கள் எந்த திசையில் வீடு கட்டலாம் என பார்க்கலாமா?
வீட்டுமனை வாங்கும் பொழுது எந்த திசையை பார்த்தும் வாங்கலாம் என்பது சாஸ்த்திர விதியாகும் மனையின் வடகிழக்கு பகுதியான ஈசானி மூலை சற்று பள்ளமாகவும் தென்மேற்கு மூலை சற்று உயர்ந்ததாகவும் இருப்பது சிறப்பு ஈசான்யம் அகலமாகவும் இருக்கலாம் குறுகலாக இருக்ககூடாது பாம்பு மனை எனறு சொல்க்கூடிய முன் பக்கம் அதிக அகலமாகவும் பின்பகுதி மிக குறைந்த அகலம் கொண்ட மனைகளை வாங்கக்கூடாது ..
சற்று வித்தியாசம் இருக்கலாம் அப்படியே வித்தியாசம் இருந்தாலும் வீடு கட்டும்பொழுது சதுரித்து வீட்டை கட்டலாம் குறிகிய இடத்தை மதில் சுவறாகமாற்றலாம்
வீடு அமைப்பு ...அனைத்து ராசிகார்களுக்குமே கிழக்கு வடக்கு முகமாக வாசல் அமைப்பது சிறப்பை தரும் வடக்கு முகமாக வாசல் அமைக்கும் பொழுது தெற்கு முகத்தில் ஜன்னல் வழியாக கற்று உள்புகும் வீடு வெளிச்சத்தன்மையுடன் இருக்கும் கிழக்கு முகத்தில் வாசல் சூரிய உதய இளம் வெயில் வீட்டில் படுவது மிக சிறப்பு இவ்வகை வீடு அமைப்பது செல்வ செழிப்பை ஏற்படுத்தும் ..மாறாக தெற்கு மேற்கு வாசல் அமைப்பதற்கு உங்கள் ஜாதக கட்டத்தின் அமைப்பை பொறுத்து அமைப்பது நல்லது
ஜாதக அமைப்பை பொறுத்த மட்டில் 2"4"6'10 ம் பாவக திசாபுத்திகளில் வீடு கட்டுவது தடையின்றி சிறப்பை தரும் லோன் கிடைக்கும் ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...