Thursday, December 31, 2020

கருவோட்டம்........................

 #தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள்

இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்துகொண்டுள்ளனர்
தினசரி காலண்டரில் #கெர்போட்ட_நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன் அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா?
நீங்கள் சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது #கெர்போட்டஆரம்பம் என்று இருப்பதை பார்தது இந்த கேள்வி கேட்டுள்ளீர்கள்.,
சிலர் காலண்டரின் பின்பக்கம் என்றைக்கெல்லால் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும்போதுலாம் *கெர்போட்ட நிவர்த்தி* என்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள்
இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல
உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை
அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது
நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்ற படுகிறது
இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்
அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில்
சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது
இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம்
இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்
அதாவது
மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள்
இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள்்ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்
அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால்
ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும்
இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது
ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம்லாம் தெரியாது இல்லையா??
எனவே
மார்கழி மாதம் அமவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள்
இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள்
எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்
மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள்
எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்
இன்றய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது
இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி ( வானம் பார்த்த பயிர் ) பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்
நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில்
கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம்
ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று
மழைவரும் நாட்களை தெரிந்துகொள்ள
#வானிலை_அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம்
புதுமையின் மோகத்தில் எத்தணை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்!!
🤔

ரஜினியின் முடிவு மிக சிறந்தது-

 ரஜினி தன்னுடைய உடல்நிலையை கா ரணம் காட்டி தனிக்கட்சி இல்லை என்ற தால் நிறைய ரஜினி ரசிகர்கள் இப்பொ

ழுது விரக்தியில் இருக்கிறார்கள் .ஆனா ல் வருகின்ற காலங்களில் அந்த விரக்தி
மறைந்து ரஜினியின் முடிவு சரியானது
தான் என்பதை புரிந்து கொள்வார்கள்.
அது மட்டுமல்ல ரஜினையை மையப்படு த்தி உண்டாகும் அதிமுக பிஜேபி கூட்ட
அணியின் பிரச்சார வியூகங்கள் ரஜினி
ரசிகர்களை மீண்டும் இயல்பு நிலைக்கு
கொண்டு வந்து விடும்
ரஜினியின் தனிக்கட்சி அறிவிப்பு பிற
கு வாபஸ் என்கிற முடிவுகளுக்கு பின்
னால் பிஜேபி இருக்கிறது என்று கூறு
கிறார்கள். அது உண்மையும் தான்.
தன் மீது வந்து விழும் அரசியல் எதிர் பார்ப்புகளை அவர் ஆரம்பத்திலேயே தவி
ர்த்து விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்
ஆனால் விதி அவரை விட வில்லை. எந்த
ஒரு தேசிய கட்சியும் தான் வளர விரும்பு ம் மாநிலங்களில் செல்வாக்கோடு உள்ள நடிகர்களை தான் முதலில் தேடும்.இதை
த்தான் பிஜேபியும் செய்கிறது.
1996 ல் காங்கிரசும் ரஜினியை இதற்காக
தான் தேடியது அப்போது பிரதமராக இரு ந்த நரசிம்மராவ் ரஜினியை டெல்லிக்கு
அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்
காங்கிரஸ் கட்சியில் இணையுங்கள்
இல்லை தனிக்கட்சி ஆரம்பித்து காங்கி
சுடன் கூட்டணி அமையுங்கள் .உங்களு க்கு தேவையான அனைத்து உதவிகளை யும் செய்வோம் என்றார்.
ஆனால் அப்பொழுது தன்னுடைய சினி
மா வாழ்க்கையை நினைத்து ரஜினி
அதை விரும்ப வில்லை.இப்பொழுது
பிஜேபியும் அதைத்தான் செய்கிறது. ரஜி னி நினைத்து இருந்தால் இதை ஆரம்ப
த்திலேயே தவிர்த்து இருக்கலாம்.
இருந்தாலும் தன்னுடைய ரசிகர்களுக்கு
தன்னை நம்பி தங்களின் அரசியல்
எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்ட
ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய நினை த்து தான் ரஜினியும் அரசியல் நோக்கி
இப்பொழுது வந்து விட்டார்.
அரசியலில் வெற்றி பெறுவது என்பது
சாதாரண விசயம் அல்ல என்பதை ரஜி னி 1996 லிலேயே அதாவது அவர் செல்
வாக்கு உச்சத்தில் இருந்த பொழுதே வெ
ளிப்படையாக தெரிவித்தவர் இப்பொழு து கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால்
வெற்றி பெற முடியாது என்பதை அறிய
மாட்டாரா?
இருந்தாலும் தன்னுடைய ரசிகர்கள் தன்
மீது திணிக்கும் தனிக்கட்சி அரசியலை
எப்படி தவிர்ப்பது என்பதில் தான் ஆரம்ப
த்தில் இருந்தே குழம்பி கொண்டே இரு ந்
தார் அதை வெளிப்படுத்தும் விதமாக
அவருடைய உடல்நிலை காரணமாக அமைந்து விட்டது.
ரஜினியின் கட்சி அறிவிப்பு பிறகு வா
பஸ் வாங்குதல் என்று அனைத்துமே ஒரு
திட்டமிடல் என்பது 100 சதவீதம் உண்மை
யாகும்.
இதனால் ரஜினி இனி மாற்று அரசிய லை அதாவது அதிமுக பிஜேபி கூட்டணி
க்கு ஆதரவு அளிப்பது தவிர்க்க முடியாத
நிலை உருவாகி விட்டது. இதுவும் ஒரு
திட்ட மிடலே.இதற்கு பின்னால் நிச்சயமா க பிஜேபி இருக்கிறது.ஆனால் இதனால்
ரஜினியின் நலம் மட்டுமல்ல அவரின்
ரசிகர்களின் வாழ்க்கையும் பாதுகாக்க
பட்டு இருக்கிறது.
ஏனென்றால் ரஜினி தனிக்கட்சி ஆரம்பி த்து அவருடைய ரசிகர்களை அனைத்து
தொகுதியிலும் போட்டியிட வைத்து இரு
ந்தால் பல குடும்பங்கள் சொத்து சுகங்
களை இழந்து தெருவில் நிற்கும் சூழ்நி
லையை உருவாக்கி விடும். அது இப்பொ
ழுது பெற்ற அவமானங்களை விட தீராத
அவமானங்களை அவருடைய வாழ்வில்
உருவாக்கி விடும்.
அப்படி பட்ட நிலையை தன்னுடைய ரசிக ர்களுக்கு ரஜினி உருவாக்கி விட வி ல்லை என்பதில் இருந்தே ரஜினியின்
நல்ல மனத்தினை புரிந்து கொண்டு அடு
த்து அவரின் முடிவுகளை வரவேற்று களம் காணுங்கள் ரஜினி ரசிகர்களே..
ரஜினி இல்லாமல் 2021 தேர்தல் களம்
இல்லை. ரஜினி ரசிகர்கள் இல்லாமல்
அதிமுக பிஜேபி கூட்டணியின் வெற்றி
இல்லை.அதனால் வாருங்கள் ரஜினி
ரசிகர்களே கை கோர்ப்போம் .இணை
த்து செயல்படுவோம் பொது எதிரியான
திமுகவை வீழ்த்தி தமிழகத்தில் புதிய
அரசியலை உருவாக்குவோம்..
.
Image may contain: 1 person, standing

தமிழருவி மணியன்..!

 இவர் போன்றோருக்கு இன்றைய தமிழக அரசியலில் இடமும் இல்லை, மதிப்பும் இல்லை.

எனக்கு விவரம் தெரிந்து இரண்டு முறை பெரிய பலம்பொருந்திய கூட்டணிகள் உருவாக மூல காரணமாக இருந்திருக்கிறார்.
அவை வெற்றிபெற்று இருந்தால் தமிழகத்தின் தலையெழுத்து என்றோ மாறியிருக்கும்.
2014ல் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தேஜகூவை உருவாக்கிய காரணகர்த்தா(அதுவும் பாமகவையும்,தேமுதிகவையும் ஒரே அணியில் உட்காரவைத்தது அவரின் தன்னலமற்ற நோக்காத்தினால் தான்)
2015ல் சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியை உருவாக்கியவர்.
இப்போதும் ரஜினியால் ஒரு தாக்கத்தை உருவாக்க முயன்றவர்.
எந்த ஒரு அரசியல் செல்வாக்கும் இல்லாமல், பதவியும் இல்லாமல்,பணமும் இல்லாமல் , மற்றவர்களை ஒன்றிணைத்து வேலை செய்ய வைப்பது உண்மையில் சாதாரண மனிதனுக்கு இயலாத ஒன்று.
அவருடைய சுயநலம் இல்லாத உயர்ந்த நோக்கம் அதை சாதித்தது.
திராவிட கட்சிகளை அழித்து, -பண்பில் உயர்ந்த, நாகரிகம் செழித்த,ஊழலின் நிழல் கூட அண்டாத- அந்த பழைய அரசியலை திரும்ப கொண்டுவர அவர் செய்த முயற்சிகள் பகீரதன் செய்ததற்கு கொஞ்சமும் குறைவில்லாதது.
ஒரு தகுதியும் இல்லாத,இழிபிறவிகள் பெரியகருப்பணும்,ஜெயக்குமார்,ராசா ராணிகளும் இங்கு மீண்டும் மீண்டும் வெல்லும்போது ,தமிழருவிக்கு இங்கே இடமில்லை.
உங்கள் முயற்சிகள் பலிக்காமல் போனது பெரும்பாலான தமிழர்களின் முட்டாள்தனத்தால் தானே அன்றி உங்கள் மீது ஒரு பிழையும் இல்லை, உங்கள் கடமையை கீதை வழியில் நின்று குறையின்றி செய்தீர்கள்.
உங்கள் பணியை தொடர இன்னொருவர் வருவார் அல்லது இந்நேரம் வந்திருப்பார்.
உங்கள் கண்முன், நீங்கள் வாழும் காலத்திலேயே இந்த திருட்டு திராவிட கூட்டம் அழிவதை பார்ப்பீர்கள்.
ஓய்வெடுங்கள் மணியன் அவர்களே..!
உங்கள் முயற்சிகள் ஒவ்வொரு தேசியவாதி மூலமாக தொடரும்.
விதை போட்ட உங்களுக்கு நன்றி.
Image may contain: 2 people

இந்த குணத்திற்கு பேர் தான் "சூப்பர் ஸ்டார்"

 

🔸T.T.V.தினகரன் மாதிரி கட்சி ஆரம்பித்து அனைவரையும் நடுத்தெருவுக்கு கொண்டு வந்ததை போல,
🔸கமல்ஹாசன் மாதிரி கொள்கை பிடிப்பு இல்லாமல், பிரிவினை பேசி திரிந்ததை போல,
🔸எதுக்கு கட்சி நடத்துகிறோம் என்றே தெரியாத அளவுக்கு கொள்கையை அடகு வைத்த வைகோவை போல,
🔸நாடு முழுக்க கம்யூனிசம் என்ற பெயர் இருக்க, இங்கே தி.மு.க விடம் ₹25 கோடியில் கட்சியை முடித்து கொண்ட கம்யுனிஸ்ட் போல
இப்படி எல்லாம் இல்லாமல், நேர்மையாக, ஒழுக்கத்தின் அடையாளமாக, தன்னால் இயலுமா, இயலாதா என சுய பரிசோதனை செய்யும் தலைவர்கள் இருக்கிறார்களா என்ன❓
அந்த வகையில் அரசியல் ஆசை காட்டி மோசடி செய்யாத நபரை விமர்சிப்பது தவறு.
அந்த வகையில் அழகான அன்பான குடும்பத்தோடு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்க.
🤘🤘🤘
Image may contain: 1 person

ஒவ்வொரு சடங்கையும் வெகுஜன மக்கள் ஆதரிக்கும்போது அது நிலைபெறுகிறது.

 இந்த ஜனவரி 1-க்கு ஆங்கில புத்தாண்டு - ஆன்மீக/மத ரீதியான முக்கியத்துவம் தருவது நியாயமா? இதுதான் என்னை போன்ற பலரது கேள்வியும் ஆதங்கமும்.

நமக்கென ஸ்வய கெளரவமும் ஸ்வய புத்தியும் இருக்க வேண்டாமா? எங்கே போச்சு நமது சுயமரியாதை?
வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்:
லௌகீக நடைமுறைகளுக்கு ஏற்ப நாமும் ஜனவரி முதல் தேதியை புத்தாண்டாகக் கொண்டு, அன்றாட தினசரி பழக்கத்தில் இந்த காலெண்டரை உபயோகப் படுத்துவதனால், நிர்ப்பந்தம் காரணமாக மற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் நாம் அத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் இந்த ஜனவரி 1 புத்தாண்டு பழக்கத்தை பின்பற்றி ஹிந்துக்களில் பலர் ஜனவரி முதல் தேதியை புத்தாண்டாக ஆன்மிக ரீதியாக கொண்டாடி வருகிறோம்.
ஜனவரி முதல் தேதி என்று கூறும்போதே சிலரிடம் “உற்சாகம்“ ஏற்பட்டு விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த உற்சாகம் அதிகரித்திருக்கிறது.
நம்மில் பெரும்பாலானவர்கள் இதை நம் கலாச்சாரத்தின் அங்கமாக கருதி தங்கள் வீடுகளில் வீடுகளில் இதைக் கொண்டாடுகின்றனர். சிலர் இந்த நாளின் மீது உணர்வுப் பூர்வமான நெருக்கத்தையும் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு நமது மத ரீதியாக ஏதேனும் முக்கியத்துவம் உள்ளதா என சற்றே சிந்தித்துப் பார்ப்போம். துளியும் கிடையாது.
பின் எதற்காக இந்த கொண்டாட்டங்களுக்கு நாம் மத ரீதியான முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
நமது ரிஷிகள் நமக்கு தந்ததல்லவா பஞ்சாங்கம். அதை உதாசினப் படுத்தலாமா? பல சூக்ஷ்மங்கள் அடங்கிய கணித சாஸ்த்ரத்தின் அடிப்படையிலும், ருதுக்கள், கிரஹங்கள் சஞ்சாரத்தின் அடிப்படையில் யுகம் யுகங்களாக வந்துள்ள நமது சாஸ்த்ரத்தை புறக்கணிக்கலாமா?
எதற்காக கோயில்களை நள்ளிரவு வரை திறந்து வைத்து, அபிஷேகம், திருமஞ்சனம் போன்ற சடங்குகளை மேற்கொள்கிறோம்? அகால நேரங்களில் பூஜைகள் செய்வது நமது ஆகம சாஸ்திரங்களுக்கு மிகவும் விரோதமானது.
கிறிஸ்தவர்கள் நள்ளிரவில் சர்ச்சுகளுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார்கள் என்றால், அவர்கள் மதத்தில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அதேபோல் நாமும் நமது மத சம்பிரதாயங்கள் எதைச் செய்ய வேண்டும் என்றும் செய்யக் கூடாது என்று கூறுகிறதோ, அவ்வாறு நடந்துகொள்ள வேண்டாமா?
நடு நிசி ஆராதனைகள் (நள்ளிரவு வழிபாடுகள்) நடத்துவது நமது தர்மத்திற்கு எதிரானது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். நமது நாள் பிரம்மமுகூர்த்த நேரத்தில், அதாவது அதிகாலை தொடங்குகிறது.
நமது ஹிந்து சம்ஸ்காரங்கள் மற்றும் பஞ்சாங்கத்தின்படி வைகுண்ட ஏகாதசி மற்றும் சிவராத்திரி போன்ற ஒரு சில தினங்கள் தவிர மற்ற நாட்களில் அகால நேரங்களில் கோயில்களில் வழிபாடு நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
பிரம்ம முகூர்த்தத்திற்கு முன்னதாக பூஜைகள் செய்வதோ வேத கர்மாக்களை செய்வதோ கிடையாது. இதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
இல்லாத “புது வருடம்” என்கின்ற போர்வையில் நமது மக்கள், குறிப்பாக மேற்கத்திய நகரீக பித்து பிடித்து அலையும் சிலர், அடிக்கும் கூத்து தாங்க முடியவில்லை.
அதை விட கொடுமை, வயதானவர்களும் பலர் இவர்களுடன் சேர்ந்துக்கொண்டு இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளுவதுதான் வேதனையை அதிகப் படுத்துகின்றது.
நன்றி!!!

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...