Thursday, December 31, 2020

ஒவ்வொரு சடங்கையும் வெகுஜன மக்கள் ஆதரிக்கும்போது அது நிலைபெறுகிறது.

 இந்த ஜனவரி 1-க்கு ஆங்கில புத்தாண்டு - ஆன்மீக/மத ரீதியான முக்கியத்துவம் தருவது நியாயமா? இதுதான் என்னை போன்ற பலரது கேள்வியும் ஆதங்கமும்.

நமக்கென ஸ்வய கெளரவமும் ஸ்வய புத்தியும் இருக்க வேண்டாமா? எங்கே போச்சு நமது சுயமரியாதை?
வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்:
லௌகீக நடைமுறைகளுக்கு ஏற்ப நாமும் ஜனவரி முதல் தேதியை புத்தாண்டாகக் கொண்டு, அன்றாட தினசரி பழக்கத்தில் இந்த காலெண்டரை உபயோகப் படுத்துவதனால், நிர்ப்பந்தம் காரணமாக மற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் நாம் அத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் இந்த ஜனவரி 1 புத்தாண்டு பழக்கத்தை பின்பற்றி ஹிந்துக்களில் பலர் ஜனவரி முதல் தேதியை புத்தாண்டாக ஆன்மிக ரீதியாக கொண்டாடி வருகிறோம்.
ஜனவரி முதல் தேதி என்று கூறும்போதே சிலரிடம் “உற்சாகம்“ ஏற்பட்டு விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த உற்சாகம் அதிகரித்திருக்கிறது.
நம்மில் பெரும்பாலானவர்கள் இதை நம் கலாச்சாரத்தின் அங்கமாக கருதி தங்கள் வீடுகளில் வீடுகளில் இதைக் கொண்டாடுகின்றனர். சிலர் இந்த நாளின் மீது உணர்வுப் பூர்வமான நெருக்கத்தையும் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு நமது மத ரீதியாக ஏதேனும் முக்கியத்துவம் உள்ளதா என சற்றே சிந்தித்துப் பார்ப்போம். துளியும் கிடையாது.
பின் எதற்காக இந்த கொண்டாட்டங்களுக்கு நாம் மத ரீதியான முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
நமது ரிஷிகள் நமக்கு தந்ததல்லவா பஞ்சாங்கம். அதை உதாசினப் படுத்தலாமா? பல சூக்ஷ்மங்கள் அடங்கிய கணித சாஸ்த்ரத்தின் அடிப்படையிலும், ருதுக்கள், கிரஹங்கள் சஞ்சாரத்தின் அடிப்படையில் யுகம் யுகங்களாக வந்துள்ள நமது சாஸ்த்ரத்தை புறக்கணிக்கலாமா?
எதற்காக கோயில்களை நள்ளிரவு வரை திறந்து வைத்து, அபிஷேகம், திருமஞ்சனம் போன்ற சடங்குகளை மேற்கொள்கிறோம்? அகால நேரங்களில் பூஜைகள் செய்வது நமது ஆகம சாஸ்திரங்களுக்கு மிகவும் விரோதமானது.
கிறிஸ்தவர்கள் நள்ளிரவில் சர்ச்சுகளுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார்கள் என்றால், அவர்கள் மதத்தில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அதேபோல் நாமும் நமது மத சம்பிரதாயங்கள் எதைச் செய்ய வேண்டும் என்றும் செய்யக் கூடாது என்று கூறுகிறதோ, அவ்வாறு நடந்துகொள்ள வேண்டாமா?
நடு நிசி ஆராதனைகள் (நள்ளிரவு வழிபாடுகள்) நடத்துவது நமது தர்மத்திற்கு எதிரானது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். நமது நாள் பிரம்மமுகூர்த்த நேரத்தில், அதாவது அதிகாலை தொடங்குகிறது.
நமது ஹிந்து சம்ஸ்காரங்கள் மற்றும் பஞ்சாங்கத்தின்படி வைகுண்ட ஏகாதசி மற்றும் சிவராத்திரி போன்ற ஒரு சில தினங்கள் தவிர மற்ற நாட்களில் அகால நேரங்களில் கோயில்களில் வழிபாடு நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
பிரம்ம முகூர்த்தத்திற்கு முன்னதாக பூஜைகள் செய்வதோ வேத கர்மாக்களை செய்வதோ கிடையாது. இதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
இல்லாத “புது வருடம்” என்கின்ற போர்வையில் நமது மக்கள், குறிப்பாக மேற்கத்திய நகரீக பித்து பிடித்து அலையும் சிலர், அடிக்கும் கூத்து தாங்க முடியவில்லை.
அதை விட கொடுமை, வயதானவர்களும் பலர் இவர்களுடன் சேர்ந்துக்கொண்டு இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளுவதுதான் வேதனையை அதிகப் படுத்துகின்றது.
நன்றி!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...