Friday, December 25, 2020

ஒரு காலத்தில் தமிழ்நாடு இப்படியும் இருந்தது..

 இன்று நினைத்த மாத்திரத்தில் அடுத்த நொடியே யூட்யூபில் விரும்பிய சினிமா படங்களை பார்க்கின்றோம்..

அதற்கு முன்பு விசிடி டிவிடி என்று திரிந்து கொண்டு இருந்தோம்.. அதற்கு முன்பு தனியார் சேனல்களில் படங்கள் போடுவார்களா என்று தினமும் எதிர்பார்த்து இருந்தோம்..
அதற்கு முன்பு தூர்தர்ஷன் மட்டுமே சினிமா காட்டியது அதுவும் வாரத்திற்கு ஒருநாள்..
அந்த ஒரு படத்தையும் பார்ப்பதற்கு பலரது வீடுகளில் சொந்தமாக டிவி கிடையாது.. அக்கம்பக்கத்தினரை காக்கா பிடித்துக் கொண்டோ அல்லது நாலணா கொடுத்துதான் பார்க்க வேண்டும்..
நகரங்களிலேயே நிலைமை இப்படி என்றால் கு கிராமங்களைப் பற்றி சொல்லியா தெரியவேண்டும். வீடுகளில் டிரான்ஸிஸ்டர் வைத்திருப்பவர்கள் தான் அப்போதைக்கு பெரிய ஆட்கள்.
1970களின் இறுதியிலும் எண்பதுகளின் துவக்கத்திலும் இப்படித்தான் நிலைமை இருந்தது.
அப்போதுதான் கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கு இலவசமாக ஒரு டிவி வழங்கப்பட்டது..
தினமும் மாலையில் பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக அந்த டிவியை வெளியே கொண்டுவந்து வைத்து ஆன் செய்வார்கள். அத்தனை பேரும் அதன் முன்பு கூடி நின்று நிகழ்ச்சிகளை இரவு வரை பார்ப்பார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மாலை என்றால் வாரத்திற்கு ஒரு நாள் ஒளிபரப்பப்படும் ஒரே ஒரு தமிழ் சினிமாவை காண பஞ்சாயத்து அலுவலக ஏரியா மினி திரையரங்கம் போல மாறிவிடும்.. பஞ்சாயத்து டிவிகளில் படம் பார்த்த அனுபவம் நமக்கும் உண்டு..
இன்று வீட்டுக்குள் இருக்கும் ஒரு டிவியில் ஒருவரோ இருவரோ குடும்பத்தினரோ படம் பார்க்கிறோம்..
அன்றைய காலகட்டத்தில் ஒரே ஒரு பஞ்சாயத்து டிவி முன்பு சில நூறுபேர் படம் பார்த்தார்கள்.. அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர்.
அதெல்லாம் இன்றைக்கு சப்பை மேட்டர் ஆக தெரியலாம்.. ஆனால் அன்றைக்கு அப்போது வாழ்ந்தவர்கள் இடம் கேட்டுப்பாருங்கள்.. அது அவர்களுக்கு எவ்வளவு பெரிய சந்தோசத்தை கொடுத்தது என்று..
நகரத்திலிருந்து கிராமப்புறங்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு வேளைகள் மட்டுமே பேருந்துகள் செல்லும். அதுவும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தங்களில் இறக்கிவிட்டு போய்விடும். அங்கிருந்து சில கிலோ மீட்டர் நடந்தால்தான் பலர் அவரவர் கிராமங்களுக்கு செல்லமுடியும். கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வருவது என்றாலும் இதே கதிதான்.
இப்படி ஒரு நிலைமையில் தான் கிராமப்புறங்களுக்கே நேரடியாக புறநகர்ப்பேருந்து களை எம்ஜிஆர் ஆட்சி இயக்கியது.. ஒன்றல்ல இரண்டல்ல தமிழகம் முழுவதும் சில ஆயிரம் புதிய வழித்தடங்களை உருவாக்கி புறநகர் பேருந்துகளை கிராமங்களுக்கு விட்டார் எம்ஜிஆர்..
நகர்ப்புறங்களுக்கு வேலை பார்க்க சென்ற கிராமவாசிகளுக்கு காலையில் முதல் பேருந்து, இரவில் கடைசி பேருந்து கட்டாயமாக இயக்கப்பட்டன.
வீட்டுக்கு மின்சார இணைப்பு என்பது மிகப்பெரிய கனவு.. அப்படிப்பட்ட சூழலில்தான் எல்லா கிராமங்களில் குடிசை வீடுகளுக்கும் ஒன்லைட் சர்வீஸ் என இலவசமாய் மின்னிணைப்பு கொடுத்தார் எம்ஜிஆர்..
வசனங்களாலும் மேடைப் பேச்சுகளால் மட்டுமே மக்களிடம் பேசியவன் அல்ல அந்த தலைவன்.. ஏழை எளிய மக்களிடம் தன் இதயத்தின் மூலம் பேசியவன்..
இன்டர்நெட் யுகத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லாததால் தான் எம்.ஜி.ஆர். என்ன செய்தார் என ஈஸியான கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறோம்..
யுக_நாயகன் MGR.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...