Friday, December 25, 2020

காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணி தேறாது-

 எதிர் பார்த்த படியே மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் இடதுசா ரிகள் இடையே கூட்டணி ஏற்பட்டு இரு க்கிறது..என்ன செய்ய விதி என்று ஒன் று இருக்கிறது அல்லவா..அதை யாரால் மாற்ற முடியும்?

2011 மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலி ல் இடதுசாரிகளை திரிணாமுல் காங்கி
ரஸ் உதவியுடன் ஆட்சி கட்டிலில் இருந்து
தள்ளி விட்டு கோமா நிலைக்கு கொண்டு சென்ற காங்கிரஸ் இப்பொழுது அதே இ டதுசாரிகளுக்கு ஆக்சிசன் அளிக்க கூ
ட்டணி வைப்பதை நினைத்தால் வேடிக் கையாக இருக்கிறது.
ஒரு கட்சி தலைவர்களை இழந்தாலும் பரவாயில்லை அடுத்த தலைமுறை வரை
அந்த கட்சியை கொண்டு செல்ல முடியும்
ஆனால் தொண்டர்களை இழந்து விட்டா ல் அந்த கட்சியின் சுவாசம் குறைந்தே
கொண்டே வரும். விலாசம் மறைந்து கொண்டே இருக்கும்.
மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகள் இப்
பொழுது இப்படித்தான் இருக்கிறார்கள். தொண்டர்களில் நிறைய பேர் பிஜேபிக்கு
சென்று விட்டார்கள். இடதுசாரிகளின் ஆதரவு வாக்குகளும் பிஜேபிக்கு போய் விட்டது .இடதுசாரி முன்னணியில் இப் பொழுது தலைவர்கள் மட்டுமே இருக்கி றார்கள்
இந்த தேர்தலோடு இடதுசாரிகளின் த லைவர்களும் வேறு பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடுவார்கள்.அவர் களின் முதல் சாய்ஸாக பிஜேபி தான் இருக்க முடியும். ஏனென்றால் இடதுசாரி களின் தலைவர்களிடையே 15 வருடங்க ளாக திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு
அரசியலே இருந்து வந்த நிலையில் அவ ர்களால் இனி திரிணாமுல் காங்கிரசில்
இணைய முடியாது.
பிஜேபியை நோக்கி அவர்கள் பாதை மா
றுவதும் தவிர்க்க முடியாதது. இந்த நி லையை மாற்ற இடதுசாரிகள் காங்கிரஸ்
கட்சியுடன் கூட்டணி வைத்து இருக்கிறார்
கள்.அது மட்டுமல்ல காங்கிரஸ் இடதுசா ரிகள் கூட்டணி மூலமாக மம்தா பானர்ஜி
எதிர்ப்பு வாக்குகள் சிதறும் அதன் மூல மாக பிஜேபி ஆட்சிக்கு வருவதை தடுக்க
முடியும் என்று நினைக்கிறார்கள்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலேயே
நடமாடிக்கொண்டு இருந்த பொழுதே காங்கிரஸ்இடதுசாரிகள் கூட்டணி மண் ணை கவ்விய வரலாறு இருக்கும் பொ ழுது இப்பொழுது மரணப்படுக்கையில் இருக்கும் இவர்களால் எப்படி எழுந்து ்
அமர முடியும்?
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கி ரஸ் கூட்டணியுடன் 148 தொகுதிகளில்
போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி 148 தொகுதிகளில் போட்டியிட்டு
26 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற
முடிந்தது. 20 சதவீத வாக்குகளை பெற்று
இருந்தது.ஒட்டுமொத்தமாக இடதுசாரிக ள் 26 சதவீத வாக்குகளை பெற்று 32 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தா ர்கள்.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் காங்கி ரஸ் கூட்டணியின்றி தனித்து இடதுசாரி
கள் துணையுடன் 210 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க
ட்சி 30 சதவீத வாக்குகளை பெற்று 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது.ஒட்டு
மொத்தமாக இடதுசாரிகள் 41 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது.62 தொ
குதிகளில் வெற்றி பெற்று இருந்தார்கள்.
ஆனால் 2016 சட்டமன்ற தேர்தலில் காங்
கிரஸ் கூட்டணியுடன் போட்டியிட்டும்
15 சதவீத வாக்குகளை இழந்ததோடு 30
தொகுதிகளையும் இழந்து இருந்தது. அப்
பொழுதே அந்த நிலைமை என்றால் இப்
பொழுது எப்படி இருக்கும் என்று யோசி த்து பாருங்கள்.
கடந்த 2014 லோக்சபா தேர்தலில் இடது
சாரி முன்னணி 30 சதவீத வாக்குகளை
பெற்று 2 தொகுதிகளில் அதுவும் மாரக்
சிஸ்ட் கட்சி மட்டுமே வெற்றி பெற முடிந்த
து. ஆனால் 2019 லோக்சபா தேர்தலில் ஒட்டுமொத்தமாக 7 சதவீத வாக்குகளை மட்டுமே இடதுசாரிகளால் பெற்று வாஷ் அவுட்டாகி மேற்கு வங்காள அரசியலில்
வரலாறு படைத்தார்கள்.
இப்பொழுது வருகின்ற சட்டமன்ற தேர்த லில் வாஷ்அவுட்டாகி கேவலமாக தோல்
வி அடைவதை விட காங்கிரசுடன் கூட்ட
ணி வைத்து கொஞ்சம் கௌரமாக தோல்
வி அடையலாம் என்று இடதுசாரிகள் நி
னைக்கிறார்கள்.ஆனால் அதற்கும் வாய்
ப்பில்லை என்கிறது மேற்கு வங்காள தேர்தல் நிலவரங்கள்.
ஏனென்றால் 2016 சட்டமன்ற தேர்தலில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை
யில் காங்கிரஸ் கூட்டணி அமைந்தது.
ஆனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில்
காங்கிரஸ் கை தான் ஓங்கி இருக்கும்
ஏனென்றால் 2019 லோக்சபா தேர்தலில்
காங்கிரஸ் கட்சி 2 லோக்சபா தொகுதி களில் வெற்றி பெற்று இருந்தது..
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
வாஷ்அவுட்டாகி இருப்பதால் வருகின்ற
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி
விதிக்கும் நிபந்தனைகளுக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இறங்கி நின்றாக
வேண்டாம். காங்கிரஸ் கேட்கும் தொகுதி
கள் எண்ணிக்களை அளித்து மார்க்சி ஸ்ட்கள் கூட்டணி அமைத்தாலும் சிங்கிள் டிஜிட்டை தாண்ட முடியாது.
ஏனென்றால் மேற்கு வங்காள அரசிய லை பொறுத்த வரை இடதுசாரிகள் பி
ஜேபி தொண்டர்களிடையே மோதல் என்றுமே இருந்தது இல்லை.அதற்கான
அரசியல் களம் அமையும் முன்பே மேற்கு
வங்காளத்தில் இடதுசாரிகள் காணாமல்
போனது பிஜேபிக்கு கிடைத்த ஒரு நல்ல
வாய்ப்பு என்றே கூற வேண்டும்.
.
மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகள் கோலோச்சிய சுமார் 35 வருடங்களில்
முதல் பாதி காங்கிரஸ் கட்சியுடனும் மறு பாதி திரிணாமுல் காங்கிரஸ் உடனுமே
இடதுசாரிகள் போட்டி போட்டு வந்ததால்
இடதுசாரிகளின் தொண்டர்களிடையே
காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
கள் மீது இருந்த வெறுப்பு பிஜேபி மீது
வராமல் போய் விட்டது.
அதனால் தான் 2019 லோக்சபா தேர்தலி ல் திரிணாமுல் காங்கிரசை தோற்கடிக்க
பிஜேபியினால் மட்டுமே முடியும் என்பதா ல் இடதுசாரி ஆதரவாளர்கள் பெருமளவி ல் பிஜேபிக்கு வாக்களித்து இருந்தார்கள்
அதே மாதிரி காங்கிரஸ் ஆதரவாளர் கள்
பிஜேபி வரக்கூடாது என்பதற்காக திரி
ணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களி த்து இருந்தார்கள்.
அது மாதிரியே வருகின்ற சட்டமன்ற தேர்
தலிலும் இடதுசாரி ஆதரவாளர்கள் காங்
கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் திரி
ணாமுல் காங்கிரசை தான் எதிரியாக நி
னைத்து பிஜேபிக்கு வாக்களிப்பார்கள்.
அது மாதிரியே காங்கிரஸ் தொண்டர்கள்
பிஜேபியை எதிரியாக நினைத்து திரி ணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்
பார்கள்.
இதனால் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ்
இடதுசாரிகள் கூட்டணி 10 சதவீத வாக்கு
களை கூட பெற முடியாத நிலைமையே வருகின்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகளி ல் இருக்கும். அதோடு இடதுசாரிகள்
காங்கிரஸ் கூட்டணி அதிகபட்சமாக 25
தொகுதிகளை கூட தாண்ட முடியாத நி
லைமையே தேர்தல் முடிவுகளில் இருக்கு
ம்.
அதிலும் இடதுசாரிகளை விட காங்கிரஸ்
கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெறு ம் ஏனென்றால் காங்கிரஸ் கட்சி வலுவா க இருக்கும் தொகுதிகளில் பிஜேபி ஜெ
யிக்க கூடாது என்று திரிணாமுல் காங்கி ரஸ் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சிக்கு
வாக்களித்து விடுவார்கள்.
எனவே காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்ட ணியில் காங்கிரஸ் கட்சிக்கு 15-20 இட
ங்களில் வெற்றி கிடைக்கும் இடது சாரி
களுக்கு 0-5 தொகுகளில் மட்டுமே வெற்
றி கிடைக்கலாம். அதிலும் லோக்சபா
தேர்தல் மாதிரியே வருகின்ற சட்டமன்ற
தேர்தலிலும் இடதுசாரிகள் வாஷ்அவுட்டா
கவே 99.9 சதவீதம் வாய்ப்புகள் இருக்கிற து
வருகின்ற சட்டமன்ற தேர்தலோடு மேற்
கு வங்காள அரசியலில் இருந்து இடது
சாரிகள் துடைத்து வீசப்பட இருக்கிறார்க ள்.இது எழுதி வைக்கப்பட்ட விதி. இதை
யாராலும் மாற்ற முடியாது. .
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்து தெலுங்கு தேசத்திற்கு சமாதி கட்டிய ராகுல் அடுத்து மேற்கு வங்
காளத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்து அவர்களுக்கும் முடிவு கட்டினார் என்று வருகின்ற மே மாதத்தில் தேர்தல் முடிவுகளின் மூலமாக அனைவரும் அறி ந்து கொள்ளலாம்.
.
Image may contain: 3 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...