Friday, December 18, 2020

அவ்வளவு ஏன்.........

 💞ஸ்ரீ ரங்கத்தில் இன்று 18/12/20 காலை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவத்தை முன்னிலையில் நம்பெருமாளுக்கு இதுவரை இல்லாத விதத்தில் அலங்காரம் பண்ணப்பட்டு இருந்தார். 


அதிலும் குறிப்பாக நம்பெருமாள் திருமுடியில் மயிற்பீலி சூட்டப்பட்டு கிருஷ்ண கௌரி கொண்டை அலங்காரத்தில் காட்சி தந்தார். இதில் தான் உள்ளது ஓர் விஷயம்.


👉 ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் தலைமை பீடமாக, 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கொள்ளப்படும் ஸ்ரீ ரங்கத்தில் நம்பெருமாள் ஸ்வபாவத்தில் சௌலப்பிய சொரூபம். அது போலவே இவருக்கு பணிவிடைகளும் பலவிதங்களில் ஏற்றம் கொண்டவர். கொள்ளத்தக்கது, தள்ளத்தக்கது என பலவிதங்களிலும் பார்த்து பார்த்து செய்ய பழகியிருப்பர் இங்குள்ளவர்கள். அதிலும் நிஜத்தில் ஓர் அரசனுக்கு தரும் பதவிஸூக்கை காட்டிலும் இவருக்கு பல மடங்கு உயர்த்தி. ஆதலால் உள் அலங்கார பொருட்களில் போலிகளையே, செயற்கை சாதனங்களையோ இவருக்கு ஏற்விப்பது இல்லை. அவ்வளவு ஏன்.........

தளிகை ஹம்சையில் சமர்ப்பிக்கப் படும் ஊறுகாய் கூட அன்றைய தேதியில் தயாரிக்கப் படும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


அதற்கே அப்படி என்றால், அவருக்கு சமர்ப்பிக்கப்படும் துளசியில் இருந்து மலர் வகைகள் வரை யாவும் புதியது.போதாகுறைக்கு இவருக்கு சமர்ப்பிக்கப் படும் அலங்கார கிளிகளும் புதிய தென்னை ஓலைகளில் அன்றைய காலை பொழுதில் முடையப்படும். அவ்வாறு இருக்க இன்று நம்பெருமாளுக்கு அலங்கரித்த கிருஷ்ண சௌரி கொண்டை ஸ்ரீ ரங்கத்தில் வழக்கத்தில் இல்லாதது.மேலும் இஃது காஞ்சிபுரம் வரதனுக்கு அலங்கரிக்கும் விதத்தில் இருந்தது சற்றே சலசலப்பை ஏற்படுத்தியது.


உடனே இந்நிகழ்வினை கலாபேதங்கள் வரை அலச ஆரம்பித்து விட்டனர். இஃது தகாது.ஆனால் இன்று காஞ்சி வரதனும், நம்பெருமாளும் ஏக காலத்தில் அச்சு அசலாக காட்சி கொடுத்தனர் என்பதும் வேறு விஷயம். (பார்க்க கீழே உள்ள படங்கள்......)


☝️ஏற்கனவே நம் சம்பிரதாயத்தில் பெரிய கோவில்( ஸ்ரீரங்கம்), பெருமாள் கோயில்(காஞ்சிபுரம்) மற்றும் திருமலை (திருப்பதி) எனும் முதல் மூன்று கோவில்களில் ஏகப்பட்ட விஷயங்கள் சமீப காலங்களில் ஏகப்பட்ட மாறுபாடுகளுடன் காணப்படும் நிலையில் இவ்வாறான சமாச்சாரங்களை உட்புகுத்தி அநாச்சாரங்களை செய்வது மிகுந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.


ஆதலால் சம்மந்தப்பட்டவர்கள் மற்றும் ஸ்தலத்தார் கைக்கொள்ளும், வழி வழியாய் பின்பற்றி வரும் நடைமுறைகளை அடியொற்றி இனி வரும் நாட்களில் தொடர ஆவண செய்தல் வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...