Thursday, December 24, 2020

வைகுண்ட ஏகாதசி......

 *காலை தரிசனம் !*

*ஸ்ரீ அரங்கநாதர் தரிசனம் !!*
நம்மாழ்வார் பாசுரம்
தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்ற சுரனைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்,
காள மேகத்தை அன்றி மற்று ஒன்று இலம் கதியே ! ,
இன்று
*வைகுண்ட ஏகாதசி*
வெள்ளிக்கிழமை !
சார்வரி வருடம் :
மார்கழி மாதம் !
10ஆம் தேதி !
டிசம்பர் மாதம் :
25ஆம் தேதி !!
(25-12-2020)
சூரிய உதயம் :
காலை : 06-26 மணி அளவில் !
இன்றைய திதி :
இன்று அதிகாலை 01.12 வரை தசமி ! பின்பு ஏகாதசி !!
இன்றைய நட்சத்திரம் :
இன்று காலை 09.38 வரை அஸ்வினி ! பின்பு பரணி !!
யோகம் :
இன்று காலை 09.38 வரை அமிர்தயோகம் !
பின்பு சித்தயோகம்!!
இன்று
சம நோக்கு நாள் !!
நல்ல நேரம் :
காலை : 09-15 மணி முதல் 10-15 மணி வரை !
மாலை : 04-45 மணி முதல் 05-45 மணி வரை!!
சந்திராஷ்டமம் : சித்திரை !
ராகுகாலம் :
காலை : 10.30 மணி முதல் 12-00 மணி வரை !
எமகண்டம்
பிற்பகல் : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!
குளிகை :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!
சூலம் : மேற்கு !
பரிகாரம்: வெல்லம் !
தெய்வம் மனுஷ்ய ரூபம்.
தெய்வம் மனுஷ்ய ரூபம்.
1978 ஆம் வருடம் அம்மா
ஊரிலிருந்து வந்திருந்தார்கள்.
நான் அப்போது இந்தியன் வங்கி
வில்லி வாக்கம் கிளையில் ஆறு மாதம் ப்ரொபேஷன் முடித்திருந்த சமயம்.
"திருப்பதி போனா தேவலாம் என்றார்கள்"
மறு நாள் ஞாயிற்றுக் கிழமை.
புரசைவாக்கத்தில் இருந்த அண்ணா வீட்டிலிருந்து நானும் அம்மாவும் சென்டிரல் வந்து டிரெயின் ஏறினோம்.
காலை ஒன்பது மணிக்கு திருமலையில்.!
நான் திருப்பதியைப் பார்ப்பது முதன் முறை.
புரட்டாசி மாதம் பிரம்மோத்சவமாம்.
எங்கு திரும்பினும் தலைகள்.
அங்குள்ளவர்கள் பேசியதைக் கேட்டால் தர்ம தரிசனம் செய்ய ஒரு நாள் ஆகும் போலிருந்தது.
எழுபது வயது அம்மா பல மணி நேரங்கள் நின்று தரிசனம் செய்ய முடியுமா?
மறு நாள் நான் ஆபீஸ் செல்ல வேண்டும்.
ஐம்பது ரூபாய் டிக்கட் கூட மறு நாள்தான் என்றார்கள்!
ஏதாவது டிஃபன் சாப்பிடலாம் என்றால்..
"பெருமாளைப் பார்க்காமல் பச்சைத் தண்ணி பல்லில்
பட விடமாட்டேன் "
என்று பிடிவாதமான
அம்மாவின் பதில்.
எனக்கு முதன் முறை
என்பதால் திருப்பதியில்
கிழக்கோ மேற்கோ
பிடி படவில்லை.
பயம் எனும் பந்து நெஞ்சில்
அடைக்கத் தொடங்கியது.
பெருமையாக அம்மாவை
அழைத்து
இயலாமையால்
ஏற்பட்ட
மன வருத்தம்.
கையில் சொற்பப் பணம்.
அம்மாவை எப்படி சமாதானப் படுத்துவது?..
"பரவா இல்லைடா பெருமாள் நம்பளைக் கூப்பிடல போல இருக்கு.
இந்த மலையை மிதித்ததே அவன் அருள் .
நாம கிளம்பலாம்" என்று
தீர்மானமாகக் கூறிவிட்டார்கள்.
கண் எதிரே விஜயா டைரி மில்க் என்ற போர்டு.
இருவரும் பால் அருந்தி விட்டு
வந்த போது.
பக்கத்தில் ஒரு தம்பதியர் கைக் குழந்தையுடன்..!
"கைக் குழந்தையோட நாம் இங்கு வந்திருக்கக் கூடாதுங்க..
குழந்தை இனம் புரியாமல் கத்தறான்.
தலை அனலாய்க் கொதிக்குது"
அவள் கணவர் போலும்.
"ஏழுமலையானை தரிசித்தாகி விட்டது எப்படியாவது கீழ்த்திருப்பதியில் டாக்டர் யாரையாவது பாக்கலாம்"
அதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா ..
"ஏம்மா குழந்தைக்கு என்ன உடம்பு
நான் பாக்கட்டுமா?"
குழந்தையைக் கையில்
வாங்கிய அம்மா...
"குழந்தைக்கு நல்ல ஜுரமாய் இருக்கே.."
ஒன்பது குழந்தைகளைப் பெற்றுப் பேரன் பேத்திகளை எடுத்த அம்மா ... பழக்கத்தினால் குழந்தைகளுக்கு
கை வைத்தியம் நன்கு தெரிந்தவர்..
பக்கத்தில இருந்த கடையில்
ஒரு நாமக் கட்டியும்,
ஊது பத்தியையும் வாங்கி அதை இழைத்துப் பொடித்து தாய்ப்பாலில்
குழைத்து குழந்தை நெற்றியில் போட்டுவிட்டார்கள்"
சிறிது நேரத்தில் குழந்தை சிரிக்கத் துவங்கியது.
பாலும் குடிக்கத் துவங்கியது.
"கீழத் திருப்பதியில் நாட்டு மருந்துக் கடை இருக்கும் அங்கு மருந்து வாங்கிக் கொடுக்கலாம்.."
என்று அம்மா சிரித்துக் கொண்டே சொல்லவும்..
"நீங்க தரிசனம் செய்துட்டீங்களா பாட்டி?"
என்று அவர் கேட்டார்..
"இல்லப்பா பெருமாள் உத்தரவு தரலை கூட்டத்தில் நிற்க திராணி இல்லை, வயசும் ,கால் வலியும்
எடம் கொடுக்காது போலிருக்கு.. அவகாசமும் இல்லை திரும்பிடலாம் என்று நினைக்கிறோம்" என்றவுடன்..
கொஞ்சம் இருங்க என்றவர் கோயில் வாசலில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் ஏதோ சொல்லவும் ..
எங்களிடம் வந்து நீங்க பெருமாளை நல்லா தரிசனம் செய்யுங்க நாங்க இங்க வெயிட் செய்றோம்.."
"ஏதாவது ஸ்பெஷல் தரிசனமா சார் எவ்வளவு சார் செலவாகும்?"
ஈன ஸ்வரத்தில் நான் கேட்க..
ஒண்ணும் வேண்டாம் நீங்க நிம்மதியா தரிசனம் செய்துட்டு வாங்க"
என்ன மாயமோ கடவுள் கருணையோ அந்தப் போலிஸ் இன்ஸ்கெ்டர்
அவரைப் பார்த்து பலரும் சல்யூட் அடிக்க எங்களை நேராக சன்னிதானத்தில் கொண்டு விட்டார்.
தரிசனம் முடிந்து லட்டு பிரசாதம் வங்கியபின் அங்கே இருந்த மடப்பள்ளியில் ஆளுக்கு ஒரு வெண் பொங்கல் வாங்கி முழங்கை வரை படரும் நெய்யுடனும் முந்திரியும் கலந்த அமுதத்தை சாப்பிட்டு விட்டு
வெளியில் வந்தோம்.
அங்கு அவர்கள் காத்திருந்தனர்..
பஸ்சில் கூட்டம் அதிகம் எங்க காரில் போய் விடுவோம் உங்களை கீழ்த்திருப்பதியில் டிராப் செய்து விடுகிறோம்.."
கீழ்த்திருப்பதியில் பஸ் ஸ்டாண்ட் அருகே நாட்டு மருந்துக் கடையைப் பார்த்த அம்மா ஏதோ இரண்டு மருந்துகளை வாங்கி தேனுடன் இழைத்துக் குழந்தையின் வாயினில் தடவினார்கள்.
"பாட்டி நாங்க பங்களூரிலிருந்து வறோம்.
அங்கு நான் போலீஸ் டிப்பார்ட்மெண்டில் பெரிய பதவியில் இருக்கிறேன் நாங்க கிளம்பட்டுமா"
தெய்வமா வந்து குழந்தையின் ஜுரத்தைக் குறைத்துவிட்டீர்கள்..
எப்படி நன்றி சொல்வது தெரியவில்லையே பாட்டி?"..
"எல்லாம் பகவான் செயல்தான்.
நீங்களும் தான் தெய்வமா வந்து தெய்வத்தின் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துட்டீங்க..
ஊருக்குப் போன உடனே குழந்தையை உங்கள் டாக்டரிடம் காண்பிச்சுடனும்..
சின்னக் குழந்தையை இப்படி எல்லாம்
வெளியில எடுத்து வர வேண்டாமே..
பச்சை உடம்பு தாங்காது!
"பாட்டி நீங்க சொல்றது எல்லாம்
தெய்வ வாக்குகள் !
நீங்க கையில குழந்தையை வாங்கி
வைத்தியம் செய்ததே
நாங்கள் செய்த புண்ணியம்..
நான் செய்தது ஏழுமலையான் கட்டளை.நாங்க கிளம்பறோம்.."
"ஆமாம் உங்க பேர் என்னன்னு சொல்லவில்லையே?"
"என் பெயர் ரங்கசாமி,
என் வைஃப் பெயர் ஸ்ரீநிதி
குழந்தையின் பெயர் சுதர்சன்.
நாங்க கிளம்பறோம் "
அம்மா என்னிடம்..
"உடம்பெல்லாம் சிலிர்க்கறதுடா! பகவான்தான் இவர் ரூபத்தில் வந்து எனக்கு உதவி செய்திருக்கார்..
அவன் அருள் இருந்தால்தான்
அவனைப் பார்க்க முடியும் போலிருக்கிறது.
வெங்கடரமணா கோவிந்தா ஏழுமலையானே "
என்று திருமலையைப் பார்த்து வணங்கினார்கள்.
தெய்வம் மானுட ரூபத்தில்தான் வரும் என்று நான் தெரிந்து கொண்டது அந்த நாளில்தான்.
*ஸ்ரீ அரங்கன் அருளாலே இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!*
*அடியேன்*
*ஆதித்யா*
Image may contain: people on stage

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...