Wednesday, December 30, 2020

அயோக்கிய எதிர்க்கட்சிகள் போடும் கோஷங்கள்.

 இவனுங்க என்ன சொல்லவராங்க? நாடு கடந்த 70 ஆண்டுகளா எப்படி இருந்ததோ அப்படியே இருக்கணும்.. எந்த சீர்திருத்தங்களையும் கொண்டுவரக்கூடாது என்றா? 


மோடி அரசாங்கம் துறைவாரியாக பார்த்து பார்த்து கடந்த 70 ஆண்டுகளாக செய்யாததை செய்து வருகிறது.. திவால் சட்டம், தொழிலாளர்கள் சட்டம், GST, National Medical Commission (இனி medical council of Indian கிடையாது), Direct Benefit Transfer reforms (ஜன் தன்-ஆதார் இணைப்பு மூலம்), இப்பொழுது இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிக்கும் விவசாய சட்டம் என்று இந்த அரசின் சீர்திருத்தங்களை சொல்லிக்கொண்டே போகலாம்..


இதெல்லாம் எப்பவோ செய்திருக்கவேண்டும். இப்போவாவது செய்யப்படுகிறதே என்று சந்தோஷப்படவேண்டும்.. எல்லாவற்றிலும் ஒரு வெளிப்படைத்தன்மையை கொண்டுவருகிறார் மோடி.. பிரச்சனை என்னவென்றால் இங்கே இந்த எதிர்க்கட்சிகள் இலவசத்தையும், மானியத்தையும் மட்டும் கொடுக்காமல், சாதாரண மக்களுக்கும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வழிமுறையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்கள் இத்தனை காலமாக...


அதன் வெளிப்பாடே இந்த அயோக்கிய எதிர்க்கட்சிகள் போடும் கோஷங்களுக்கு ஒரு பெரும் வரவேற்பு கிடைக்கிறது இந்த நாட்டில். Personal honesty has declined gradually over the years..


வழிதவறி செல்லும் நாட்டு மக்களை திருத்தி மீண்டும் நேர்மை என்கிற வழிக்கு கொண்டுவரும்பொழுது இது மாதிரி சத்தங்கள் அதிகமாகத்தான் இருக்கும். அரசு அதை கண்டுகொள்ளாமல் தன் முடிவுகளில் உறுதியாக இருப்பது வரவேற்கப்படவேண்டியதே.. அதற்குதான் எங்களுக்கு மோடி போன்ற உறுதியான தலைவர் தேவைப்படுகிறார்...


பிகு: இங்கே கார்ப்பரேட் அரசு என்றும் சொல்லும் பைத்தியங்களுக்கு.. நான் சொன்ன முதல் சட்டமான திவால் சட்டமே வங்கியை ஏமாற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான சட்டம்தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...