Wednesday, December 30, 2020

திமுக ஒரு திட்டத்தை எதிர்த்தாலே அது நாட்டுக்கு நலமான திட்டம் என உறுதியாக நம்பலாம் .

 அங்கிள் சைமன் ஒருவரை பற்றி புகழ்ந்தால் அவர் இறந்துவிட்டார் என்பதும், கமலஹாசன் ஒருவருக்கு அறிவு உண்டு என்றால் அந்த நபர் கீழ்பாக்கம் வகையறாவோ என பரிதாபட வேண்டியது என்பதும் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம்.;


அப்படி இருவருமே இந்த தொ.ப பரமசிவம் ஒரு பேரறிஞர், அறிவு கடல், சிந்தனை மெஷின், திராவிட திரட்டு என்றெல்லாம் கொட்டி தீர்ப்பதில் இருந்தே தொ.பரமசிவத்தி "அறிவு" சுடரை தெரிந்து கொள்ளலாம்


முட்டாள்களெல்லாம் கூடி ஒருவனை பெரும் அறிஞன் என்றால் அவன் இருப்பதிலே பெரிய முட்டாளக இருப்பானே அன்றி நிச்சயம் ஞானவானாக இருக்க முடியாது.


திமுக ஒரு திட்டத்தை எதிர்த்தாலே அது நாட்டுக்கு நலமான திட்டம் என உறுதியாக நம்பலாம் என்பதை போல சீமானும் கமலஹாசனும் ஒருவரை அறிவாளி என சொன்னாலே விஷயத்தை சந்தேகமின்றி முடித்துவிடலாம்


பரமசிவம் பாளையங்கோட்டைகாரர், அவரின் சிந்தனைகளெல்லாம் இந்த சீமான் போலவே ஒரு மாதிரியானவை, அதாவது கேட்டால் கைதட்ட வைக்கும் கொஞ்சம் சிந்தித்தால் அவர் மண்டையில் தட்ட வைக்கும்.


இவரை பிரபலமாக்கியது யாரென்றால் நெல்லை பல்கலைகழகத்தில் துணை வேந்தராக இருந்த க.ப அறவாணன்


ஒரு மாதிரி வரலாற்றை திரித்து, பச்சை பொய் கலந்து, கொஞ்சமும் அறிவும் சிந்தனையும் ஞானமும் இல்லா பரமசிவத்தின் குப்பை புத்தகங்களை பல்கலைகழக பாடமாக அவர்தான் மாற்றினார்


ஏன் மாற்றினார்? அதுதான் திராவிடம். அதற்கு முன் நெல்லை மனோன்மணிய சுந்தரனார் பல்கலைகழகம் பற்றி சொல்ல வேண்டும்


கருணாநிதி என்பவருக்கு நெல்லை என்றாலே சுத்தமாக அக்காலத்தில் இருந்தே பிடிக்காது. நெல்லையும் மதுரையும் தென்னகத்தின் இந்து நகரங்கள், இந்து கலாச்சார அடையாளங்கள், இதில் நெல்லை மதுரைக்கு சற்றும் குறைந்ததல்ல‌


நெல்லையின் இந்து அபிமானம், அதன் வீரம், தன்மானம் அதன் தமிழ் இன்னபிற விஷயங்களுக்காக குறிவைத்தவன் வெள்ளையன். நெல்லையில் மிஷினரிகளின் கை ஓங்கி நிற்கவும், மதமாற்றம் வெகுவாக நடக்கவும் 18ம் நூற்றாண்டிலே அவன் நுட்பமாக வழிவிட்டது இப்படித்தான்


கால்டுவெல்லும், வீரமாமுனி என்ற பெஸ்கி எனும் இத்தாலியனும் இன்னும் பலரும் நெல்லையினை சுற்றி சுற்றி குழப்பியது இதனால்தான்.


நெல்லை பக்கம் இந்து அடையாளம் அழிய வேண்டும், அந்த பெருமை மிக்க வீர இந்துக்கள் குழம்பி திரிந்து தங்கள் கலாச்சாரத்தையே மறக்க வேண்டும் என்ற அளவு வெள்ளையனின் வீச்சு இருந்தது


ஆனால் நெல்லையர்கள் அழகாக சவால்விட்டனர், பாரதியும் இன்னும் வ.உ.சியும் எழும்பினர். ஆதீனங்கள் இந்து பள்ளி, இந்து கல்லூரி என கல்வி பணியில் இறங்கின‌


வாஞ்சிநாதன் துப்பாக்கி தூக்கினான், ராஜகோபால நாடாரின் சாகசங்கள் புகழ்பெற்றவை


திகைத்த வெள்ளையன் துப்பாக்கி முனையில் அந்த எழுச்சியினை அடக்கினான், அந்த ஞான பூமி தன்னில் சிலிர்த்து எழுந்தது


எதையும் தந்திரமாக செய்யும் வெள்ளையன் திராவிட கழகத்துக்கு பச்சை கொடி காட்டினான், நெல்லை பகுதி சைவ சித்தாந்த கழகம் என மறு எதிர்ப்பினை காட்டி கம்பராயணமும் ஆழ்வார்கள் அடியார்கள் வரலாறுகளை வரிசைபடுத்திற்று


ஈழத்து யாழ்பாணமும் தமிழகத்து நெல்லையும் அதில் இணைந்து நின்றன‌


இக்காலத்தில்  உலகபோர்களும் இன்னபிற குழப்பமும் வந்தன, வெள்ளையன் நெல்லை பக்கம் இந்துக்களை ஒழிக்கும் பொறுப்பினை அங்குள்ள கிறிஸ்தவ கல்வி நிறுவணங்களிடம் ஒப்படைத்து பின்வாங்கினான்


கல்வி நிலையங்களாலும் பெரும் மதமாற்றம் செய்யமுடியவில்லை, கல்வி ஒரு விஞ்ஞான அறிவு இந்து மதம் எங்கள் உயிர், அது வாழ்வு என கம்பீரமாக நின்றனர் அம்மக்கள்


இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்தவர் கருணாநிதி


ஆம், மதுரையினை தாண்டி ஈரோட்டு ராம்சாமி  வரமுடியா நிலை இருந்தது மதுரை பக்கம் தேவர் பெருமகனும் நெல்லையில் மானமுள்ள இந்துக்களும் ராமசாமியினை கண்டால் தாடியினை பிடித்து இழுத்து போட்டு அடிக்கவும் தயாராய் இருந்தனர் இதனால் தெற்கே அவர்கள் வரவில்லை


அதன் பின் சுதந்திரமும் வந்தது


சுதந்திர இந்தியாவில்  மதுரையினை ராம்சந்திரன் எனும் சினிமாக்காரன் மூலம் வளைத்தது திராவிட கட்சிகள், இன்றுவரை மதுரை சினிமா மோகம் கொண்டு சீரழிந்து நிற்பதும், விஜய் வெறியர்கள், அஜித் அலப்பறைகள் என அலறி தீர்ப்பதும் அப்படியே


சங்கம் வைத்து தமிழ்வளர்த்த மதுரையில் பேனர் வைத்து சினிமா வளர்த்தது திராவிடம், அதுவும் இதெல்லாம் தேவர் பெருமான் காலத்துக்கு பின்புதான்


இப்படி மதுரையினை வளைத்தாலும் நெல்லை அசையாமல் இருந்தது, அண்ணாவோ கருணாநிதியோ அங்கு கால் வைப்பதே கனவாய் இருந்தது


கருணாநிதி நெல்லையினை மனதுக்குள் வன்மமாக குறிவைத்து கொண்டே இருந்தார், அது 1940களிலே ராம்சாமி ஏற்றிவைத்த விஷம்


நாகர்கோவில் தோல்வி கருணாநிதிக்கு அந்த விஷத்தை அதிகமாக்கிற்று, இன்னும் நாடார் வாக்குகளால் காமராஜர் மீண்டுவிட கூடாது எனும் வெறியும் இருந்தது


தன் கைக்கு அதிகாரம் கிடைத்ததும் நெல்லைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தார், வைகோ ஆலடி அருணா போன்றோரெல்லாம் கருணாநிதியால் கைதூக்கிவிடபட்டது அப்படித்தான், செல்லபாண்டியன் சபாநாயகாரனதும் அப்படித்தான்


இது நெல்லை பக்கம் சிறுபான்மை மதத்தவரிடையே கருணாநிதிக்கு ஒரு வரவேற்பை கொடுத்தது அவர்கள் மனதுக்குள் மகிழ்ந்தனர், இந்துக்கள் வழக்கம் போல்  தூங்கினர்


பின் நெல்லை பக்கம் திமுக வளர வளர என்னெல்லாமோ இந்துவிரோதங்கள் நடந்தன, இந்துக்கள் வழக்கம் போல் ஒரே தூக்கம்


கருணாநிதி நெல்லை மேம்பாலம் என பலவற்றை அறிவித்தார், ஆனால் ரகசியமாக கிறிஸ்தவ நிறுவணங்களுக்கு பல உரிமைகளை அள்ளி கொடுத்து கொம்பு சீவி கொண்டே இருந்தார்


நெல்லையின் போர்குணத்தை மாற்றி அதை ஒரு நாசமான பூமியாக்கும் அவரின் கனவு வளர்ந்து கொண்டே வந்தது, நெல்லைக்கு ஆபத்து பெருகி கொண்டே வந்தது


இந்நிலையில் ராம்சந்தர் முதல்வரானர், அவருக்கு ஓரளவு நெல்லை அபிமானம் இருந்தது, நெல்லை கோவில்களுக்கு ஏதோ செய்ய நினைத்தார், தென்காசி கோபுரம் புதுபிக்கபட்டது எல்லாம் அப்படித்தான்


ஆனால் ஆர்.எம் வீரப்பனின் நரித்தனத்தில் நெல்லையப்பர், திருசெந்தூர் கோவில்கள் சர்ச்சையில் ராம்சந்தர் சிக்கினார், சசிகாலவிடம் சிக்கிய ஜெயா போல் வீரப்பனிடம் சிக்கிய ராம்சந்தரால் அவரை மீறி ஒன்றும் செய்யமுடியவில்லை


இதனால்தான் திருசெந்தூருக்கு நடந்தார் கருணாநிதி, அதே வெறிதான் இங்கு இந்து எழுச்சி வந்துவிட கூடாது எனும் நுட்பம்தான் இருந்தது


கவனியுங்கள், அந்த வைரவேலுக்கு இந்துக்கள் போராடினால் இன்று உண்மை வெளிவந்திருக்கும், கருணாநிதி தானே களத்துக்கு வந்து விஷயத்தை புதைத்து மூடினார், அதுதான் உண்மை


அப்படிபட்ட கருணாநிதி 1989ல் முதல்வரானதும் நெல்லை சுந்தரனார் பல்கலைகழகத்தை தொடங்குகின்றார். அதற்கு வ.உ.சி முதல் பல தலைவர்கள் பெயர்தான் சூட்டபட்டிருக்க வேண்டும் ஏன் அவ்வையார் பெயரையே சூட்டியிருக்கலாம்


ஆனால் அதைவிடுத்து திராவிடம் எனும் ஒரு வார்த்தையினை சொன்னதற்காக மனோன்மணியம் பெயர் சூட்டபட்டது


அந்த பல்கலைகழகம் மேல் கடைசி வரை கருணாநிதிக்கு ஒரு கண் இருந்தது, அங்கு அவரின் அடிபொடிகள் துணைவேந்தராவார்கள் கண்ட கண்ட கருமாந்திரமெல்லாம் பாடநூலாகும், இதை அவர்தான் தொடங்கி வைத்தார்


அந்த கலாச்சாரத்தில் கடைசியாக வந்ததுதான் இந்த அருந்ததிராய் நூல் சர்ச்சை


இப்படி கருணாநிதி திராவிட சித்தாந்தமுள்ள மனமுடையவர்களை, அப்பட்டமான இந்திய இந்து விரோதிகளைத்தான் அங்கு துணைவேந்தராகினார், அவர்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவ கல்லூரிகளின் தயாரிப்பு


அறவாணனும் அப்படியே, சபாபதி மோகன், சிந்தியா பாண்டியன் என பலரும் அப்படியே


இன்று கனிமொழி நெல்லைக்கு வர கருணாநிதி எப்படியெல்லாம் அன்றே திட்டமிட்டார் என உணருங்கள், அவரின் அரக்க அறிவு உங்களுக்கு புலபடும்


சரி விஷயத்துக்கு வரலாம்


அந்த கருணாநிதியின் அறவாணனே, இந்த திராவிட சிந்தனையுள்ள தொ.பரமசிவம் எழுத்தினை பல்கலைகழக பாடமாக்கினார், அதிலிருந்து இந்த நபர் பெரும் அறிவாளி என்றானார்


இந்த நபரின் அறிவு பல இடங்களில் வெளிபட்டாலும் மிக சில இடங்களை நாம் சொல்லலாம், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் நாம் சில சோறுகளை சொல்லலாம்


இவரின் குலதெய்வம் உச்சிமாகாளி, அதாவது உஜ்ஜைனி மகா காளி. ஆம் வடக்கே இருக்கும் அந்த காளிதான் இவர்கள் தெருவுக்கும் குலத்துக்கும் தெய்வம். அதை பற்றி இவர் மூச் விட்டதே இல்லை


உச்சிமாகாளி எனும் தன் தெய்வ பெயரை கூட உஜ்ஜைனி மகாகாளி என திருத்தி சொல்லாத இவர்தான் தமிழ்நாட்டை சிந்திக்க சொன்னாராம்


அன்னார் சொன்ன விளக்கங்களில் மிக பெரிய காமெடி, "பனைமரத்தை வைத்து மடை கட்டுவார்கள், அதில் மூழ்கி மடை திறந்து செத்து போகிறவன் பெயர் மடையன்"


இந்த ஆராய்ச்சிக்கு அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் எனவும் ஒரு கோஷ்டி சொல்லிற்று


இவர் சொன்னது என்னவென்றால் பனை மரத்தினை வெட்டி அதன் உள்ளிருக்கும் பகுதியினை வெட்டி கூடு போல் ஆக்கி குளத்தின் அடியில் பதித்து வைத்து நீரை கொண்டு வருவார்களாம்


இப்படி  ஒரு பைத்தியகாரதனமான விளக்கம் இருக்கவே முடியாது, பனைமரத்தின் நடுபகுதிதான் வலு, அதை உருவிவிட்டால் பனைமரம் பஞ்சு போல் ஆகிவிடும், அதை நீருக்குள் இட்டல் நைந்தே விடும், இற்று போகும், பின் எப்படி நீர் பாயும்?


இன்னொன்று அந்த முறையே தவறு, அவ்வளவு அழுத்தமான நீர் ஒரு சிறிய குழாய் வழியே பாய்ச்சபட்டால் எவ்வளவு தூரம் சீறியடிக்கும்? ஒரு வயலும் வரப்பும் இருக்கும்?


அந்த மரம் இற்றுவிட்டால் வருடாவருடம் வரப்பை வெட்டியா மாற்றுவார்கள், அப்படி வெட்டினால் குளத்து வரப்பு நிலைக்குமா? தாங்குமா? அவ்வளவுக்கு அறிவு கெட்ட இனமா அன்று இருந்தது?


ஆக இந்த நபர் பனையும் பார்த்தவரில்லை, குளமும் பார்த்தவரில்லை என்பது தெரிகின்றது


தமிழனின் நீர் மேலான்மை என்ன?


கல்லணை அதை தெளிவாக சொல்கின்றது கல்மேல் கல்வைத்து கட்டி அதில் நீரால் அரிக்கபடா சில பலகைகளை சொருகி நீரை மாற்றிவிட்டவன் தமிழன்


மடை என்றால் மாற்றிவிடும் இடம் என பொருள், அல்லது திசை திருப்பும் இடம் என பொருள்


மடைகள் அன்று கலுங்கு என்றும், மதகு என்றும் சொல்லபட்டன. மேலிருந்துதான் பலகை விலக்கி நீரை திருப்புவார்களே தவிர இவர் சொன்னது போல் நீரில் மூழ்கி புடுங்குவார்கள் என்பதெல்லாம் சீமான் ஈழத்தில் துப்பாக்கி சுட்ட கதை


ஆக இந்த நபருக்கு குளமும் தெரியவில்லை என்பதும் தெரிகின்றது


உண்மையில் தமிழனுக்கு குளத்து பாசானம் அதிகம் தெரியாது, அவன் ஆற்றங்கரையிலே நீரை மடைமாற்றி விவசாயம் செய்தவன், குளமும் ஏரிகளும் பின்னாளில் வந்தது


குளத்தின் மடைபகுதி சேறும் சக்தியும் நிரம்பிய இடம், அதில் மூழ்கினால் கண்டிப்பாக சாவுதான், இதனால் மேல் இருந்துதான் திறப்பார்கள்


சரி மடையன் எனும் சொல் எங்கிருந்து வந்தது?


மடம் என்றால் சன்னியாசிகளும் யோகிகளும் தங்கும் இடம் என பொருள், அங்கு வேதம் கற்பிக்கபடும்


வேத பாடங்கள் ஏறாதவனை மடப்பள்ளி எனும் சமையல் அறைக்கு எடுபிடி வேலைக்கு அனுப்புவார்கள்.அந்த கடை  நிலை மாணவன், மடத்தில்  கடையனாக இருந்தான். அதுதான் மடையன் என்றாயிற்று


மட சாம்பிராணி என்பது அப்படி வந்ததே


ஆக மடையன் எனும் சொல் எங்கிருந்து வந்தது என சொன்னால் தமிழன் இந்துவாக இருந்தான் என்பது தெரிந்துவிடும் என்பதை மறைக்க கடும் கட்டுகதையினை கட்டிவிட்டவர் இந்த பரமசிவம்


அவரின் எழுத்தும் ஆய்வும் இம்மாதிரி கோமாளி ரகம், தமிழன் இந்துவாக இருக்க கூடாது இந்தியனாக இருந்துவிட கூடாது எனும் கள்ளதனம்


வெள்ளையன் தொடங்கி வைத்து திராவிடம் தூக்கி சுமந்து கடைசியாக கருணாநிதி தாலாட்டிய அந்த கள்ளதிருட்டு தனம்


இந்த திருட்டு தனத்தை செய்ய ஒரு பல்கலை கழகம், அந்த பல்கலைகழகம் கொடுத்ததுதான் இந்த பரமசிவ தத்துவம்


இப்படிபட்ட நபரை சீமானும், கமலஹாசனும் இன்னும் சில குபீர் அறிவாளிகள் சிந்தனைவாதி என கொண்டாடுவதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?


சீமானின் இன்றைய பொய்களுக்கெல்லாம் குருநாதர் யாரென்றால் சாட்சாத் இதே பரமசிவம்


பிரிதொரு நாளில் அவர் சீமானுக்கு அண்ணன் அளவில் "போற்ற"படுவார் அது உறுதி


ஆக தமிழர்களே, சீமானின் பெரியப்பா மகனாகிய பரமசிவன், குளமும் பனையும் தெரியாமலே மடை எப்படி இருக்கும் அதை எப்படி திறப்பார்கள் என சொன்ன பரமசிவன் சொன்னது என்ன தெரியுமா?


மடையினை திறந்தவன் மடையன்


அப்படியானால் கல்லணையினை திறந்தவன் கள்ளனா?, இல்லை அணையினை திறப்பவன் அண்ணனா?


மடசாம்பிராணி என்றால் மடைக்கு சாம்பிராணி புகை போட்டவனா? 


அவனுகளும் அவனுக திராவிட சித்தாந்தமும்


நெல்லை பல்கலைகழகம் திராவிட கும்பலின் கட்டுபாட்டில் இருக்கும் வரை இப்படிபட்ட கோமாளிகள் உருவாகி கொண்டேதான் இருப்பார்கள், அவர்களை மிஷினரிகள் கட்டுபாட்டில் இருக்கும் சைமனும் கமல்ஹாசனும் கொண்டாடி கொண்டே இருப்பார்கள்


நாம் சொல்வதை சொல்லிவிட்டோம், இந்துக்கள் இவர்களை அடையாளம்  கண்டு கொண்டால் நல்லது


பரமசிவம் கால்டுவெல் , பெஸ்கி, போப் போன்றோரின் அடிவருடிதனத்தில் நெல்லையினை குழப்ப வந்த இம்சை என்பதும், திராவிட கட்சிகள் பரவ வழிசெய்த மடை என்பதும்,  வைகோ வரிசையில் வந்த‌ நெல்லையின் பெருமையினை கெடுக்க வந்த கோடாரி காம்பு என்பதும் புரிந்து கொள்ள சிரமானது அல்ல‌


சீமான் ஒருவனை புகழ்ந்தால் அவனின் தரம் என்ன என்பதையுமா விளக்கி  சொல்ல வேண்டும்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...