Thursday, December 24, 2020

தி.மு.க.,வுடன் இல்லை!:அழகிரி பகிரங்க அறிவிப்பு.

  ''தி.மு.க.,வுடன் இனி எந்த உறவும் இல்லை,'' என, மறைந்த கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி, சென்னையில், நேற்று பகிரங்கமாக அறிவித்தார். அடுத்த நடவடிக்கை தொடர்பாக, ஜனவரி, 3ல், மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தப் போவதாகவும், அதன்பின், வேறு முடிவு எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.


தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியையும், அவரது ஆதரவாளர்களையும், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், மீண்டும் கட்சியில் சேர்க்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம், கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சிலர், பேச்சு நடத்தினர். அழகிரியை சேர்க்க, ஸ்டாலின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதால், அந்த பேச்சு தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, ரஜினி பிறந்த நாளை ஒட்டி, மதுரை, அழகர் கோவிலில், அழகிரி பேட்டி அளித்தார். அப்போது, 'வரும் சட்டசபை தேர்தலில், என் பங்களிப்பு உண்டு. கட்சி துவக்குவது குறித்து, ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவேன்; அப்படியொரு கூட்டம் நடத்தவும் ஆலோசிப்பேன்' என, பிடி கொடுக்காமல் பதிலளித்தார்.

இந்நிலையில், இம்மாதம், 21ம் தேதி, சென்னை வந்தார், அழகிரி. தன் மனைவி காந்தியின் பிறந்த நாளை, மகன், மகள், பேரன், பேத்திகளுடன் கொண்டாடுவதற்காக, ஒரு வாரம் முகாமிட்டுள்ளார். நேற்று, கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு அழகிரி சென்றார். அங்கு, தன் தாயார் தயாளுவை சந்தித்து பேசினார்.


பின், அழகிரி அளித்த பேட்டி

:

வரும் சட்டசபை தேர்தலில், என் பங்களிப்பு இருக்கும் என, ஏற்கனவே தெரிவித்துள்ளேன். தேர்தல் பணி, தேர்தலில் போட்டியிடுவது, ஓட்டு அளிப்பது என, என் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்.மதுரையில், வரும், 3ம் தேதி, ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறேன். அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின்படி முடிவெடுப்பேன். தி.மு.க.,வில் இருந்து இதுவரை, எந்த அழைப்பும் எனக்கு வரவில்லை. தி.மு.க.,வில் இணைந்து பணியாற்ற வாய்ப்பும் இல்லை.

தனி கட்சி துவக்குவது குறித்து, 3ம் தேதி, ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறேன்; அந்த கூட்டத்திற்கு பின் முடிவு எடுப்பேன். ஆதரவாளர்கள் வலியுறுத்தினால், கண்டிப்பாக கட்சி துவக்குவேன். நடிகர் ரஜினி சென்னை வந்ததும், அவரை சந்திப்பேன். இந்த ஆண்டு, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை. அவர் சென்னை வந்ததும், 70வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பேன். இனி, தி.மு.க.,வில் இணைய வாய்ப்பு இல்லை. அரசியல் தொடர்பாக, வேறு முடிவு தான் எடுத்தாக வேண்டும்.இவ்வாறு, அழகிரி கூறினார்.

'தி.மு.க.,வுடன் இனி இணைவதற்கு வாய்ப்பு இல்லை' என, அழகிரி பகிரங்கமாக அறிவித்துள்ளதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுதும், ஸ்டாலினால் ஓரங்கட்டப்பட்ட அதிருப்தியாளர்கள், கட்சியில் வெளியேற்றப் பட்டவர்கள் அனைவரும், அழகிரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து, வரும், 3ம் தேதி, மதுரை, பாண்டி ரிங் ரோட்டில் உள்ள, 'துவாரகா பேலஸ்' திருமண மண்டபத்தில் மாலை, 4;00 மணிக்கு, ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு, அழகிரி ஏற்பாடு செய்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள ஆதரவாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தொண்டர்கள் என, 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

கருணாநிதி மறைவு தினத்தை ஒட்டி, சென்னையில் அமைதி பேரணியை, அழகிரி நடத்திய போது, ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும், மதுரை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

மதுரை கூட்டத்தில், கட்சி துவக்குவது அல்லது பேரவை துவக்கி, ரஜினி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கிறார். ஆதரவாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை கேட்டறிந்த பின், தன் முடிவை, ஒரு வாரத்திற்குள் அறிவிக்க, அழகிரி முடிவு செய்துள்ளார். தனி கட்சி துவங்குவது என முடிவெடுத்தால், ஜன., 30ம் தேதி அழகிரியின், 70வது பிறந்த நாள் விழாவில் அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது. கட்சி பெயர், கொடி அறிவிக்கும் விழாவாக, அவரது பிறந்த நாள் நடைபெறும் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


'அழகிரி கட்சியால் பாதிப்பு இல்லை'




சிவகாசி: ''அழகிரி கட்சி துவக்கினால், எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை,'' என, தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி கூறினார்.அவர் கூறியதாவது: யார் கட்சி துவங்கினாலும், எங்களை பாதிக்காது. அழகிரி கட்சி துவக்கினாலும், தி.மு.க.,வின் வெற்றியை தடுக்க முடியாது. முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாயகனாக மட்டுமே இருக்கிறார்.
தி.மு.க., தேர்தல் அறிக்கை, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும். தி.மு.க., வெற்றியை தடுக்க, பலரும் பல வியூகங்கள் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...