Wednesday, December 30, 2020

நம்புவது தப்பாயா?

 #Rajinikanth


24 வருட கண்ணாமூச்சி ஒரு முடிவுக்கு வந்தது. எனக்கு தெரிந்து மிக நெடுங்காலம் விளையாடப் பட்ட விளையாட்டு என்று உலக ரெக்கார்ட் இதுவாகத்தான் இருக்கும். 


இத்தனை மோசமான நிலையற்ற தடுமாற்றம் கொண்ட மனநிலையை உள்ளவரையா இத்தனை காலம் தூக்கி பிடித்து கொண்டாடியது இந்த சமூகம்??  


நான் அப்பவே சொன்னேன்! எனக்கு முன்னமே தெரியும் ! என்று ஆயிரம் பேர் சொல்லலாம். 

அவரின் மீதான அன்பினால் அவரை போலவே மாறி மாறி நின்றவர்களையும் குறை சொல்லும் நேரம் அல்ல இது! 


நானும் வெகு காலம் ரஜினியை கடுமையாக விமர்சித்து கடைசியில் இவராவது இந்த திமுகவுக்கு ஒரு முடிவு காண மாட்டாரா என்று கொஞ்சம் நம்பித்தான் போனேன். 


நாமெல்லாம் நம்பினோம். 

நம்புவது தப்பாயா?

நம்மை எல்லாம் விடுங்கள். கூப்பிட்டு வந்து கழுத்தறுக்கப் பட்ட தமிழருவி மணியனின் நிலையை நினைத்து பாருங்கள். 

மேடையில் ஏற்றி மைக் முன் நிறுத்தி வேட்டியை உருவி விட்டார் ரஜினி. 


இப்போது ரஜினியை விமர்சிப்பது அவர் இன்று எடுத்த முடிவுக்காக அல்ல.  

இவர் முடிவை 4 வருடம் முன்பு எடுக்க தவறியதற்காக!!


4 வருடம் முன்பே சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவருக்கு தன்னால் என்ன முடியும் என்ன முடியாது என்று நேற்று வரை தெரியாது என்றால் இவர் என்ன மாதிரி புத்திசாலி ? அல்லது இவரை சுற்றி இருப்பவர்கள் என்னமாதிரி அறிவுள்ளவர்கள் என்று கேள்வி எழுமா? எழாதா?


ஜிந்திக்கிறேன். ஜிந்திக்கிறேன் என்று இழுத்து திடீரென்று சினிமா வசனம் போல 

"மாத்தரோம்! எல்லாத்தையும் மாத்தரோம்!!" என்று கத்தி டேபிள உடைச்சு .. ஏன்.. ஏன்.. இப்படி !


தமிழருவி மணியன் முதல் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் முதல் எங்கோ கிராமத்தில் ரஜினி நற்பணி மன்றம் என்று வைத்து உயிரை கொடுத்து வேலை செய்தவர் வரை எத்தனை பேர் முகத்தில் கரி பூசி சட்டென்று விலகி விட்டார்?


ஒரு வருடமாய் கரடியாய் கத்தி கடுமையாக உழைத்த மாரிதாஸ் போன்றவர்கள் என்ன பாவம் செய்தனர்??


ஒருவரை நம்பிக்கை கொடுத்து மோசம் செய்வதும் குற்றமே!  


இவரால் முடியும் என்று ஏற்றி விட்ட சோ முதல் குருமூர்த்தி வரை அனைவரும் குற்றவாளிகளே!! அல்லது ஏமாளிகளே !! 


கெடுத்துட்டியே பரட்டை !!


1996 ல் இவர் கோழை ! 

2020ல் இவர் கோமாளி!! 


இப்போதும் பாருங்கள். இவரது இந்த கோமாளி தனத்தையும் முட்டு கொடுக்க ஒரு கூட்டம் இருக்கத்தான் போகிறது. அது அரசியல் முதல் திரை உலகம் வரை இருக்கும் அறிவில்லாத, சுயநலமிக்க, கடைந்தெடுத்த அயோக்கியர் கூட்டம். ரஜனி பின் நின்று மூக்குடைந்து நிற்பவருக்கு இவர்கள்தான் அமிர்தாஞ்சன். 


இந்த கண்ணாமூச்சி விளையாட்டு முடிவில் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன??


கவர்ச்சி கரமான தனிமனித வழிபாட்டிலிருந்து விலகி கொள்கை மற்றும் நேர்மையான செயல்பாட்டின் அடிப்படையில் கட்சி மற்றும் தலைவனை தேடுங்கள். 

இதுதான் பாடம். 


சினிமாவில் மட்டும்தான் ஹீரோ கடைசியில் வந்து எல்லோரையும் அடித்து காலி பண்ணி நேர்மையை நியாயத்தை நிலை நாட்டுவார் என்பதை இப்போதாவது அழுத்தமாக நிரூபித்த 

ரஜினி என்கிற நடிகனுக்கு நன்றி. 


30/12/2020

பி. கு:- எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் சுட்டுதல் தேவை என்று கருதி எழுதுகிறேன்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...