Monday, December 21, 2020

தமிழக செக்யூலர் அரசியல் கட்சிகள் ஏமாந்து விட வேண்டாம்.

 தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முஸ்லிம் கட்சி தனியாக நின்று இருப்புத் தொகையை கூட இதுவரை பெற்றதில்லை ஏன் முஸ்லிம்களால் மட்டுமே தீர்மானிக்கப்படும் தொகுதியில் கூட அவர்களால் இருப்பு தொகையை பெற முடியாது காரணம் தமிழக முஸ்லிம்கள் அரசியல் பார்வையில் செக்யூலர் அரசியல் கட்சிகளுக்கே வாக்களிப்பார்கள். முஸ்லிம் பெயரில் அரசியல் கட்சி நடத்துபவர்களுக்கு அவர்கள் மதவாதமற்ற காரணத்தால் செக்யூலர் கட்சிகளும் அவர்களை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது வழக்கம். அந்த அடிப்படையில் செக்யூலர் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது அதன் மூலம் ஓரிரு எம்எல்ஏக்கள் வருவது தான் எதார்த்தம்.

ஆகையால் இந்த முறை நடைபெறவிருக்கின்ற தமிழக பொதுத்தேர்தலில் முஸ்லிம்களுடைய வாக்குகளை யார் பெறுவது என திமுக அல்லது அதிமுக என்கிற மாபெரும் இரு கட்சிகளும் தான் தீர்மானிக்க வேண்டும்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய இதர ஜாதிகளை போன்று முஸ்லிம்களையும் திமுக மற்றும் அதிமுக போன்ற பெரிய கட்சிகள் அவர்களுக்கும் கட்சிகளில் பெரிய பொறுப்புகளை கொடுக்க வேண்டும் என்பது மறுக்க முடியாது. அவ்வாறு செய்யாத பட்சத்தில் சில பெயர்தாங்கி கட்சிகள் அச்சுறுத்தல் கொடுக்கலாம் என்று எண்ணுவார்கள், இதை நம்பி திமுக மற்றும் அதிமுக ஏமாந்து விடக்கூடாது, இவர்களுக்கு தமிழக முஸ்லிம்களிடம் வாக்கு இல்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?
ஜாதி அடிப்படையில் அரசியல் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகின்ற தமிழகத்தில், முஸ்லிம்களுக்கு இங்கு இருக்கக் கூடிய கட்சிகளில் அரசியல் பிரதிநிதித்துவம் சரியாக கொடுக்கப்படவில்லை என்கின்ற கோபம் இருப்பது உண்மைதான், அதற்காக தமிழக முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளை ஆதரிப்பதும் இல்லை. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் முஸ்லிம்கள் ஏற்கனவே வைத்திருக்கக்கூடிய நிலைப்பாடான செக்யூலர் அரசியல் கட்சிகளை தொடர்ந்து ஆதரிப்பது தான் அறிவுப்பூர்வமானதாகும் அதேநேரம் முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்க வேண்டுமென்றால், தமிழக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு இயக்கத்தின் அடிப்படையில் இங்கு இருக்கக்கூடிய திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுடன் தங்களுடைய தேவைகளை எடுத்துக்கூறி அதை ஏற்கும் அரசியல் கட்சிக்கு வாக்களிப்பது சிறந்தது. அதற்கான ஆயத்த பணிகளை செய்வது இந்த நேரத்தில் நன்றாக இருக்கும் அப்போது இப்படிப்பட்ட பெயர்தாங்கி முஸ்லிம் கட்சிகளை முஸ்லிம்களை வைத்து அரசியல் ஆதாயம் பெறுவதிலிருந்து அப்புறப்படுத்தலாம்.
உதிரி கட்சிகளால் எவருக்கும் எந்த நெருக்கடியும் இல்லை, ஒரு மண்ணுமில்லை.
Image may contain: 2 people, text that says '"100 தொகுதிகளில் தனித்துப் போட்டி போ எஸ்டிபிஐ அதிரடி திட்டம்..! Q7 NEWS திமுகவுக்கு நெருக்கடி EXCLUSIVE'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...