Friday, December 18, 2020

இந்து மதத்தின் சுதந்திர தன்மை இந்த யோகத்தின் உள்ளடங்கிய தத்துவமே.

 பாரத பூமியில் சைவம்,வைணவம் சார்ந்து பல படைப்புகள் இருக்கிறது.


அப் படைப்புகளில்  ஒன்றான கீதை , சாரதியாக வந்த பரமாத்மா மூலம் இக்கட்டான சூழலில் இருந்த  அர்ஜினருக்கு வழங்கிய உபதேசம் , ஆகும்.


இதன் மிக முக்கிய சாராம்சமாக மூன்று யோகங்கள் இருக்கும்.


பக்தி,ஞானம் மற்றும் கர்ம யோகம்.இறைவனை அடைய இந்த மூன்று வழிகள்.


பக்தி மற்றும் ஞானம் ஒன்றுக்கொன்று தொடர்புடையது, கடவுள் சிந்தை,தவம், போன்ற வழியில் இறைவனை சென்றடைவது.


கர்ம யோகம்!இந்த யோகம் தனித்துவம் வாய்ந்தது.இந்து மதத்தின் சுதந்திர தன்மை இந்த யோகத்தின் உள்ளடங்கிய தத்துவமே.


என்னை வணங்கினாலும், வணங்காமல் சென்றாலும்,என்னை திட்டினாலும்,உன் கடமைகளை நீ சரிவர செய்தாலே போதும் உனக்குண்டானவற்றை நீ பெறுவாய், எம்மையும் வந்தடைவாய்.என்ற சுதந்திரம் இறைவழிபாட்டில் இருக்கிறது.


ஆனால் தர்மத்தின் பலன் உண்டு.


போர்க்களத்தில் தடுமாறும் அர்ஜினரை வில்லில் பாணம் ஏற்றி கடமை ஆற்று அர்ஜினா என்று,தன் கடமையையும் ஆற்றியவர் தான் பரமாத்மா.நல்ல, ஆரோக்கியமான  மனோபாவத்தில் பயணிக்கும் எத்தகு சிந்தைக்கும் எக் காலத்திலும் பொருந்தக்கூடிய புத்தகம் கீதை.நாத்திக கூட்டம் மறைக்கிறது.எத்தனை பேர் வீட்டில் இருக்கிறது கீதை???????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...