Wednesday, December 30, 2020

வாழ்க ஊடக நீதி.

 வெட்கம் கெட்ட ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள்

திருவணந்தபுரம் நகரசபை Chairman பதவிக்கு ஆர்யா இராஜேந்திரன் எனும் 21 வயது பெண்ணை தேர்வு செய்துள்ளது கேரள கம்யூனிஸ்ட் கட்சி. இதன் மூலம் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் முனிசிபல் Chairman ஆனவர் என்ற பெருமையை பெறுகிறார் ஆர்யா இராஜேந்திரன். இது நிச்சயமாக ஒரு சாதனைதான் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். இந்த சாதனையை ஊடகங்களில் காலையிலிருந்து திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஊடகங்களுக்கும் நமது பாராட்டுக்கள்..!


ஆனால், பந்தளம்  நகராட்சியின் Chairman ஆக  சுஷீலா சந்தோஷ் என்பவரை தேர்வு செய்துள்ளது பாஜக! இவரும் பெண் தானே! இவருக்கு ஏன் பாராமுகமாக இருந்துள்ளன ஊடகங்கள்? எனில், வயது ஒன்றுதான் இங்கு சாதனையை தீர்மானிக்கிறதா? 


சரி, அப்படி வயது ஒன்றே சாதனையாகக்கூட இருந்துவிட்டும் போகட்டுமே, சுசீலா ஒரு பட்டியல் வகுப்பை சேர்ந்த பெண். ஒரு பட்டியல் வகுப்புப் பெண் பந்தளம் நகரசபைத் தலைவரானது ஒரு குறிப்பிடத்தக்கதல்லவா.!? அதைக்கூட இவர்களால் குறிப்பிட முடியவில்லையே.!


ஓகே, ரைட், ஒரு பட்டியல் வகுப்புப் பெண் Chairman ஆனதில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என இவர்கள் கேட்கட்டுமே, இவர்களின் கூற்றுப்படி பாஜக ஒரு மதவாத, பார்பணீய, ஆரிய, இந்துத்துவ, உயர்ஜாதியினருக்கான கட்சியல்லவா? அப்படிப்பட்ட உயர்ஜாதி சிந்தனை கொண்ட ஓர் கட்சி, ஒரு பட்டியல் வகுப்பு பெண்ணை நகரசபை தலைவராக்கியுள்ளதே, இதில் கூட எந்த விசேஷமும் இல்லையா?


சரி, ஒரு பெண்ணை, அதுவும் பட்டியல் வகுப்பு பெண்ணை, அதிலும் பாஜக போன்ற மதவாத கட்சி நகரசபை தலைவராக நியமித்ததில் எந்த சிறப்பும் இல்லாதுகூட போகட்டும், ஆனால் பாஜக அவரை நிறுத்தியது தாழ்த்தப்பட்டவருக்கான தனி ஒதுக்கீடு வார்டில் அல்ல, அனைத்து ஜாதியினரும் போட்டியிடும் பொது வார்டில். அவரை வெற்றி பெற செய்து  இன்று நகரசபை சேர்மன் தலைவராகவும்  தேர்வு பெற செய்துள்ளது.


இத்தனைக்கும், பந்தளம்  நகரசபை சேர்மன் பதவி மகளிர்க்கன  ஒதுக்கீடு பதவியும் அல்ல.  


எஸ்சி SC  ரிசர்வ் ஒதுக்கீடு பதவியும் அல்ல. 


ஆனாலும் பாஜக ஒரு பெண்ணை, அதுவும் ஒரு  பட்டியல் பிரிவு பெண்ணை, அதிலும் பொதுவார்டில் நிற்க வைத்து, பெண்களிக்கான தனி ஒதுக்கீடே இல்லாத நகரசபைத் தலைவராக ஆக்கியுள்ளது.


துணை தலைவராகவும் ( Vice Chairman ) பாஜகவின் U ரம்யா என்ற பெண்ணை நியமித்துள்ளது.


மொத்தம் 33 வார்டுகளில் 18ல் பாஜக வென்று பந்தளம் நகரசபையை கைப்பற்றியது. 


இதுவல்லவோ உண்மையான சமூகநீதி.! இதுவல்லவோ தாழ்த்தப்பட்டவருக்கான நிஜமான அங்கீகாரம்.!! இதுவல்லவோ பெண்களுக்கான நியாயமான அதிகாரம்!!! இதவல்லவோ உண்மையான சாதனை!!!!


இதுவொரு சாதனையாகக்கூட இல்லாது போகட்டும், குறைந்தபட்சம் ஓர் செய்தியாகவாவது தமிழக மீடியாக்கள் சொல்லியிருக்கலாமே..! ஆனால், செய்யவில்லையே..! அன்று காலை முதல் திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு 21 வயது CPM இளம் பெண் ஆர்யா ராஜேந்திரன் மேயர்  தேர்வு என்பதை மட்டுமே திரும்ப திரும்ப காண்பித்து வருகிறதே, இந்த செய்தி தமிழக மீடியாக்களால் ஏன் இருட்டடிப்பு செய்யபட்டுள்ளது?


காரணம் இதுதான்: இது திராவிட மண். இங்கே இந்து ராம், பிரஷாந்த் கிஷோர் உள்ளிட்ட எந்த பிராமணரும் திராவிட தாழ்த்தப்பட்டவரே... 


அது ஆரிய மண். அங்கே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த குடியரசுத் தலைவரான இராம்நாத் கோவிந்தும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பிரதமர் நரேந்திர தாமோதர் மோடியும் கூட ஆரிய பார்பணர்களே...


இதுதான் திராவிட சமூகநீதி. இதுதான் தமிழனின் நீதி. இதுதான் ஊடக தர்மம்.


வாழ்க ஊடக நீதி.


இதை ஒரு செய்தியாகக்கூட இந்த ஊடகங்கள் சொல்லாவிடினும், நாம் சொல்வோம், இத்தனை நாளும், ஜாதி மத சிக்கல்களை ஏற்படுத்தி, குழப்பிய குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அத்தனை பேரிலும், பந்தளம் நகரசபையில் செய்யப்பட்டது ஓர் சாதனையே.! பாராட்டுக்கள்.!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...