Wednesday, June 10, 2020

வீட்டை_விட்டு_வெளியே_செல்லும்போது_நமக்கு_பாதுகாப்பைத்_தரும்_11_மிளகு!

வீட்டை விட்டு வெளியே சென்று விட்டோமேயானால், நல்லது கெட்டது இவை இரண்டையும் நம் உடலும், மனதும் சமாளித்து தான் ஆக வேண்டும். சில விஷயங்களை எதிர்க்கும் சக்தியானது நம் உடலுக்கு இருந்தாலும், நம்முடைய மனது அதை ஏற்றுக் கொள்ளாது. சில நேரங்களில், சிலவற்றை, பார்த்தவுடன் பயம் ஏற்பட்டு, அந்த பயமே பிரச்சனையாக மாறிவிடும்.
அதாவது நேரம் கெட்ட நேரத்தில், பயப்படக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள் அல்லவா? அதுபோல்தான் இதுவும். குறிப்பாக சிறிய குழந்தைகள், வயது வந்த பெண்கள், இவர்களுக்கு வெளி இடங்களில் கண்ணுக்கு தெரியாத சில சக்திகளின் மூலம், பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். ஆண்களாக இருந்தால், நடுஜாமத்தில் வீட்டுக்கு வரும் சூழ்நிலை இருந்தால், அவர்களும் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இப்படி நம் வெளியே செல்லும் போதெல்லாம், நமக்கு ஏற்படும் பிரச்சினைகளின் மூலம் நமக்கே தெரியாத மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவோம். மேற்குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு சுலபமான தீர்வு உள்ளது. அது என்ன தீர்வு? என்பதை பற்றியும், அந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும்? என்பதை பற்றியும் நான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பொதுவாகவே, விஷத்தை முறிக்கும் தன்மை இந்த மிளகிற்கு உள்ளது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு உண்மை. அதேபோல், எந்த ஒரு துர் சக்தியும் இந்த மிளகிடம் அண்டாது என்றே சொல்லலாம். இந்த மிளகை 11 என்ற கணக்கில் எண்ணி எடுத்துக்கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையில், ஒரு தட்டின் மேல், உங்கள் கையில் இருக்கும் மிளகை வைத்து, உங்கள் வீட்டு குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, ஒரு சிறிய அளவு சிவப்புத் துணியில் வைத்து, சிகப்பு நூலினால் கட்டி, முடிச்சு போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
அந்த முடிச்சினை, உங்கள் பர்சில் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போதெல்லாம், இது உங்களுடன் இருப்பது ஒரு பெரிய பாதுகாப்பை ஏற்படுத்தும். சிறிய குழந்தைகளாக இருந்தால், அவர்களுடைய புத்தகப்பையிலேயே இந்த மிளகு மூட்டையை வைப்பதில், தவறொன்றுமில்லை. ஆண்கள் தங்களுடைய சட்டைப் பையிலோ அல்லது தங்களுடைய பர்சிலோ இந்த முடிச்சை வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் எந்த ஒரு எதிர்மறையான சிந்தனையும் ஏற்படாது.
தேவையற்ற சிந்தனையானது, மனிதனை பலவகையான பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ள வைக்கும். இந்த மிளகானது உங்கள் கையில் இருந்தால், தேவையற்ற சிந்தனையும், மனக் குழப்பமும் கட்டாயமாக ஏற்படாது. ஏனென்றால், கெட்ட ஆற்றலினால், கெட்ட சக்தியினாலும், கண் திருஷ்டியை நாளும் ஏற்படக்கூடியது தான் மனக்குழப்பம்.
கெட்ட சக்தி எதுவுமே உங்களை நெருங்காமல் இருந்து விட்டால்! எந்த குழப்பத்திற்கும் நீங்கள் ஆளாக வேண்டாம். இப்படியாக நாம் செய்யும் சின்ன சின்ன பரிகாரங்கள் நம்முடைய வாழ்கையின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். வாழ்க்கையில் இலட்சியத்தினை, சுலபமாக சாதிக்க, வேண்டுமென்றால் சில தந்திர முறைகளை பின்பற்றுவதில் எந்த ஒரு தவறும் இல்லை, என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...